Followers

Sunday, July 8, 2007

தமிழ் வலையுலக முன்னோடிகளுக்கு

தமிழ் வலையுலக முன்னோடிகள் அனைவருக்கும் குறிப்பாக திரு.காசி அவர்களுக்கும் என்னை தமிழ்மணம் பக்கம் இழுத்துவந்த பாலாஜி அவர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள்.தமிழ் எழுத்துக்களின் சுகத்தோடும் கூடவே ஒரு சில பின்னூட்ட கசப்பு கலாசாரங்கள் மாறும் என்ற நம்பிக்கையிலும் நானும் வலை பின்ன வந்துள்ளேன்.புதிய ஏழு உலக அதிசயத்தில் தாஜ்மகாலின் வாக்களிப்பில் எனது ஒரு ஓட்டு விழுக்காடும் சேர்ந்துள்ளது.தமிழ்மணத்திற்கும் என்னுடைய ஓட்டு.மீண்டும் காண்போம்.

Thursday, July 5, 2007

சொல்லத்தான் நினைக்கிறேன்

எழுதுவது கூட ஒரு வித மன ஒருமுகப் படுத்தல் தானோ.ஒரு வாசிப்பாளருக்கு இருக்கும் படிக்கும் ஆர்வத்தின் திறனுடன் இந்த மன ஒரு நிலைப் படுத்தலும் கூட ஒருமித்து சுருதி லயம் சேரும் பட்சத்தில் மாத்திரமே ஒரு வாசகரை தன்னோடு கட்டிப் போட முடியும் என்பது இந்த வரிகளை எழுதும் இந்த நிமிடத்தில் உணர முடிகிறது.

சிந்திக்கிறது என்பது ஏதோ மூச்சு விடற மாதிரி அநிச்சை செயலாக இருக்க எழுத்து வண்ணம் கூட்டுவது என்பது சித்திரம் வரைவது மாதிரி என்பது இத்தனை கணம் வரை தெரியவில்லை.பழம் தின்று ருசி கண்டவர்களுடன் போட்டி போட இயலாவிடினும் தமிழ் தட்டும் இசை மனதுக்கு இதமாகவே இருக்கிறது.

இங்கே கற்றுக்கொள்ள எண்ணிக்கையில் அடங்கா வினாக் கேள்விகள் இருக்க கற்றுக்கொள்ளவும் கற்றதை இயலா நிலை கொண்டுள்ள பிந்தைய சந்ததிக்கும் விட்டுச் செல்லலாமே.கனியிருக்க அதுவும் தரம் தெரிவு செய்ய எண்ணற்றவை உள்ளபோது காய்தேடி நடைபோடல் முறையோ.இந்தப் பக்கம் வருவதே தகுதிச் சான்றிதல் தந்தமாதிரி.இதில் என்ன கண்ணைச் சுட்டும் தலைப்புக்கள்.எழுதுவதை அடையாள அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் எம் மீது கல்லெரியப்படுவதை யாரும் விரும்பவில்லை.எனவே எழுத்துக்களின் தரங்களையும் காக்க வேண்டியப் பொருப்பு எமக்குண்டு.

மேற் சொன்னவை அனைத்தும் எனக்கு நானே எழுத்துக்களம் புகுமுன் சொல்லிக்கொள்ளும் வரிப் படலங்கள்.