Followers

Friday, August 24, 2007

இந்திய அணு ஆயுத உடன்படிக்கை

இந்திய அணு ஆயுத உடன்படிக்கை பற்றி நானும் என் நண்பர் சதாவும் பேசிக் கொண்டிருந்தோம்.நட்பு என்பது ஒருமித்த கருத்துக்களையும் எதிர் திசை நோக்கல்களும் கொண்டவை என்பதை புரிந்து கொண்ட சம மன அலைகளைக் கொண்டவர்கள் நாங்கள்.பேசும் தலைப்புகளைப் பொருத்தே பேச்சின் விமர்சனங்கள் அமையும்.இந்திய அமெரிக்க அணு ஆயுத உடன்படிக்கையில் விவாதிக்கவும் எதிர்க்கவும் போதிய அவகாசங்கள் இருந்தும் அப்போது இல்லாத எதிர்க்குரல்கள் இப்பொழுது தோன்ற ஆரம்பித்துள்ளது.கம்யூனிஸ்ட்டுகள் தொழிலாளத் தோழர்களின் உரிமைக் குரல்களின் வேர்கள் என்பதிலும் அதில் அவர்கள் வித்துனர்கள் என்பதனையும் சமுதாயத்தில் நிருபித்துள்ளார்கள்.ஆனால் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் சரத்துக்களை தேர்ந்த வல்லுனர்களா என்பது சந்தேகமே.எதிர்க் கருத்துக்களும் நாட்டின் முக்கிய எதிர்கால விசயங்களில் துணை புரியுமென்ற போதிலும் இட்லி வடையாரின் பக்கங்களில் காணப்பட்ட திரு.சோ அவர்களின் கண்ணோட்டம் குறிப்பிடத் தக்கதாகும்.

‘‘அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம் நமக்கு பாதகமான ஒன்று என எதிர்ப்புக் குரல்கள் கிளம்-புவதை எப்படி எடுத்துக்கொள்வது..?’’‘‘அணு தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில் நம்மிடம் போதிய மூலப்பொருட்கள் கிடையாது. நம்மிடம் உள்ள தொழில்நுட்பமும் உடனடி தேவைகளுக்குப் போதுமானது அல்ல! எனவே, நமக்கு அமெரிக்காவின் உதவி தேவைப்படுகிறது. ஒப்பந்தம் ஏற்பட்டால் நாம் அணுகுண்டு சோதனை நடத்த முடியாது என்று கம்யூனிஸ்ட்டுகள் கதறுகின்--றனர். இனிமேல் அணுகுண்டுச் சோதனை நடத்தித்தான் நமது அணு ஆயுத ஆற்றலை உலகத்துக்கு உரைக்க வேண்டும் என்பதில்லை. ஏற்கெனவே இந்திரா -காந்தி மற்றும் வாஜ்பாய் ஆட்சிக்-காலத்தில் நாம் நடத்திய சோதனை-களே நமது அணு ஆற்றலை எடுத்துக்காட்டி-யுள்ளன.அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்பட்டாலும், நாம் அணு ஆயுதச் சோதனை செய்வதன் மூலம் அந்த ஒப்பந்தம் தானாகவே செல்லாததாகிவிடாது. முதலில் விளக்கம் கேட்கப்படும். பின்னர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு-வார்த்தை மேற்கொள்ளப்படும். அன்றைய சந்தை நிலவரப்படி நஷ்டஈடு தரப்பட வேண்டும். பல கட்டங்களுக்குப் பிறகே ஒப்பந்தம் ரத்தாவது பற்றி முடிவாகும். இதற்கென்று ஏகப்பட்ட ஷரத்துக்கள் உள்ளன. ஆசியக் கண்டத்தில் சீனாவுக்கு எதிரான ஒரு சக்தியாக இந்தியா உருவெடுப்பதில் அமெரிக்காவுக்கு லாபங்கள் அதிகம். அமெரிக்கா நம்முடன் அணு தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் பிற நாடுகளும் நம்முடன் அணு ஆற்றலைப் பகிர்ந்துகொள்வது சாத்தியப்படும். தனிப்பட்ட முறையில் இந்தியாவுக்கும் இதில் ஆதாயங்கள்தான் அதிகம் என்பது என் கருத்து!அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்றவுடன் வரிந்துகட்டிக்கொண்டு எதிர்க்கும் கம்யூனிஸ்ட்டுகள், நமது அருணாசலப்பிரேதசத்துக்கு சீனா உரிமை கோருவதைப் பற்றி ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள்? இந்த அண்டை நாடு ஏற்கெனவே நமது பிராந்தியங்கள் சிலவற்றை கையகப்படுத்திக்கொண்டு இன்னும் ஆக்கிரமிக்கப் பார்க்கிறது. இது நமது நாட்டின் இறையாண் மையைப் பாதிக்காதா! கம்யூனிஸ்ட்டுகளின் எதிர்ப்பு முழு சந்தர்ப்ப வாதம்!’’

நன்றி: இட்லி வடை.