Followers

Wednesday, February 13, 2008

பிப்ரவரி மாத படப்போட்டிக்கு

தினசரிக் கூட்டாளி வண்டிச் சக்கரம் பார்வைக்கு

சூரிய வட்டம் பார்வைக்கு
2. தகவல் தொடர்பு கட்டிடம்


1. சந்திரன



பூமிப் பந்து பார்வைக்கு

இதோ நானும் வந்து சேர்ந்திட்டேங்க.இந்த மாதப் போட்டியின் தலைப்பைப் பார்த்தவுடன்தான் தெரிகிறது தினசரி வாழ்க்கையில் எத்தனை வட்டங்கள் என்று.போன மாதம் மெனக்கெட்டுப் படம் எடுத்தும் பின்தயாரிப்பு சொதப்பிடுச்சு.இந்தமுறை நேற்றுப் பொட்டியத்திறந்து கிளிக் செய்து இன்று அனுப்பும் முன் எந்த பிக்சலையும் குறைக்காமல் படத்திற்கான எல்லை,பெயர்,கட்டிங் தவிர எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை.நம்ம மாதிரி கற்றுக்குட்டிக்கு இதுவே போதும் என்ற நினைப்பில் படம் ரிலீஸ்.

சர்வேசன் அவர்களின் HDஆரை ஒரு முறை முயற்சி செய்யனுமின்னு ஆசை.பள்ளியிலிருந்து இதுவரைக்கும் வட்டமே வாங்கிப் பழக்கப் பட்டுப் போனதால் இந்த முறையும் ஒரு வட்டம் உறுதி என்பதில் சந்தேகமில்லை.இருந்தாலும் இந்தப் போட்டி ஒரு மனநிறைவைத் தருகிறது.ஒன்றுமே அறியாமல் விட்டுப்போன தமிழைத் தொட்டுப் பார்க்கலாம் என்று தமிழ்மணத்துக்கு வந்ததில் உருப்படியாக செய்யும் ஒரே காரியம் இந்த போட்டிகளில் கலந்துகொள்வதுதான்.எல்லோரும் ஆள்ரவுண்டர்களாய் அடிச்சு ஆடும்போது நான் வெறும் பார்வையாளனாக மட்டும் இருந்து கொண்டு இந்தப் போட்டிகளுக்கு மட்டும் உள்ளேன் ஐயா சொல்லிக் கொண்டுள்ளேன்.

இனிப் படத்தைப் பற்றி சில வரிகள். சந்திரனையும் சூரியனையும் பூமிப் பந்தோடு போட்டிக்கு அனுப்பலாம் என்று நினைத்தால் பெரும்பாலும் சூரிய ரசிகர்கள் களத்தில் நிறைய பேர் இருப்பதாலும் கண்கட்டு வித்தை முயற்சிக்கான காலமும் தொழில் நுட்பமும் இல்லாமலும் தெரியாமலும் சூரியனும் பூமிப் பந்தும் ஜகா வாங்கிக்கொண்டார்கள்.அவர்களிடத்தில் தகவல் தொலைத் தொடர் கட்டிடம் இரவின் விளக்கொளியோடு போட்டிக்கு.கொசுறாக மற்ற படங்கள் பார்வைக்கு.

போட்டிக்கான படங்கள்.

1. சந்திரன்

2. தகவல் தொடர்பு கட்டிடம்








































4 comments:

Priya said...

Great pictures. Good Luck.

வவ்வால் said...

நட்டு,
எழுதுவதை விட படம் காட்டுவதில் தான் ஆர்வமாக இருக்கிங்க போல, ஒளி ஓவியரா நீங்க :-))

படங்கள் நல்லா இருக்கு, இன்னும் கொஞ்சம் கலைக்கண்ணோடு எடுத்திருந்தால் முதல் இடத்துக்கே வந்திருக்கும் படங்கள்!

உ.ம்: நிலவை நேராக எடுத்தை விட , தாமரை, அல்லி இருக்கும் குளத்தில் நிலவு பிரதிப்பலிப்பதாக எடுத்திருக்கலாம்னு தோனுது!(ஒரு படம் கூட எடுக்க மாட்டேன் ஆனால் கருத்து சொல்ல மட்டும் வந்திடுவேன் :-)))

Prabakar said...

Very Nice Photos.. The photo which i had posted is not sun .. its a prism with few lighting

Thanks for your Wishes...

Tech Shankar said...

kalakkal padangal