Followers

Thursday, March 19, 2009

மொக்கை துவக்க விழா

மொக்கை போடறுதுன்னு முடிவெடுத்த பிறகு இடமென்ன வலமென்ன?அதனால வெத்தலை பாக்கு வச்சு கூப்பிடாம இருக்கிறத வச்சி தேத்திட வேண்டியதுதான். நேத்தைக்கு பரிசலோட வீட்டுக்குப் போனப்ப எல்லோரும் அங்கீகாரத்துக்குத்தான் எழுதறாங்கன்னு சொல்லிகிட்டுருந்தாரு.நான் அங்கீகரமாவது கிங்கீகரகமாவது எழுதறது பிடிச்சிருக்குன்னு பின்னூட்டக் கடிதாசி போட்டு விட்டு வந்தேன்.பார்த்தாரோ இல்லையோ பதிவோட பக்கத்துக்கே வெளிச்சம். இன்னொரு பதிவரு நீங்கெல்லாம் சிண்டிகேட் வச்சு சில்மிஷம் பண்ணிகிட்டு இருக்கீங்கன்னு சிரிச்சிகிட்டு இருந்தாரு.

பதிவெழுதறதுக்கு யார் யாருக்கு என்ன காரணமுன்னு காரண காரியமெல்லாம் நான் தேடுறதில்லைங்க.தனிமனித விளாசல்,மதம் பிடிச்சு திரியறது ரெண்டைத் தவிர எல்லா வீட்டுக்கும் சத்தமில்லாம அல்லது சில சமயம் சத்தம் போட்டுகிட்டு வந்துடறேன்.சொல்லப் போனா எழுதற ஆர்வத்தையும் தாண்டி பதிவர்கள் எழுத்துக்களும் அதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் பின்னூட்டத்தில் புன்முறுவல் பூப்பதும்,பல்கோணப் பார்வையும் ரொம்பவே நல்லாயிருக்கு.எனவே படித்தல்,புரிதலில் இருக்கும் ஆர்வம்,நேரம் எழுத்தில் காண்பிப்பதில்லை.

சரின்னுட்டு சூடான பகுதியில யார் தேறுறாங்கன்னு போனா பதிவர் கமலக்கண்ணன் பெண்களின் சல்வார் கமீஸ் அணிவது பற்றியும் ஓடுற பைக்ல துப்பட்டா பறக்க விடாதீங்கன்னும் நல்லது சொல்லிகிட்டிருந்தார்.சொன்னதோடு நின்னுருந்தா பரவாயில்லை.சாருநிவேதிதா சொன்னது உண்மைதான் இந்தியர்கள் செக்ஸ் ஸ்டார்வேசன் ஆட்கள் அப்படின்னாரு.இது என்ன பொதுப்புத்தின்னு தெரியல.ஒருத்தர் பிரபலமாகி விடுவதாலேயே அவர் சொல்லும் எல்லாக் கருத்துக்களும் சரியாகத்தான் இருக்கும் என்று எடுத்துக் கொள்வது.சாரு நிவேதிதா சொல்வது உண்மையில்லைங்க.இந்தியனை விட காஞ்சவன் தேசம் தேசமா அலையிறான்னு சொல்லிவிட்டு வந்தேன்.

குறைந்தபட்சம் கண்ணும் கண்ணும் நோக்கினால் அங்கீகரமாவது இந்தியாவில் உள்ளதென நினைக்கிறேன்.அதையும் தாண்டி ஆண்,பெண் நட்புங்கிற நிலைக்கும் கூட முன்னேறியுள்ளது.கல்லூரி காலங்களில் மும்பையிலிருந்து சென்னைக்கு ரெயிலில் தாதரிலிருந்து நண்பர்கள் பிரவின்,முகர்ஜி,நான் கிளம்பினோம்.எங்கள் இருக்கைக்கு வந்த இரு பெண்மணிகளில் ஒருவர் எங்களிடம் வந்து மற்ற பெண்ணைக் காட்டி வேலூர் மருத்துவக்கல்லூரியில் சேரப்போவதாகவும் சென்னை வரை மருத்துவப் பெண்ணிடம் பேசிக் கொண்டு போகும்படியும் சொல்லிவிட்டு ரயில் கிளம்பும் வரை இருந்து விட்டு போய்விட்டார்.நாகரீகமான அந்த அறிமுகத்தால் தவறான எந்தப் பார்வையுமில்லாமல் அந்தப் பெண்ணிடம் சகஜமாக பேசிவிட்டு அவ்வப்போது சாப்பாடும் பங்கு போட்டு சாப்பிட்டு விட்டு சென்னை சென்ட்ரல் வரை சென்றோம்.

ரயில் பயணம் நினைவு வந்தவுடன் இன்னொரு நினைவு வருகிறது.இப்படித்தான் இன்னொரு நண்பர் பட்டாளத்தில் சுப்பரமணி என்பவன் வண்டி போகும் அவசரத்தில் பக்கத்தில் இருக்கையில் வந்து அமர்ந்த ஒருவரைப் பார்த்து இந்திக்காரன் என்று நினைத்து எருமை மாடு மாதிரி வந்து முட்டிகிட்டு உட்கார்ரான் பாருன்னான்.யோவ் எனக்கும் தமிழ் தெரியுமுன்னு வந்தவர் சொல்ல ரெண்டு பேருக்கும் எகிறிகிச்சு.

மணியடிக்கப் போறாங்க.ரெண்டு நாளைக்கு வார இறுதி.அதனால கணினிப் பக்கம் வந்தாலும் வருவேன்.இல்லைன்னா சமையல்கட்டு ஆராய்ச்சி,காய்கறி,சூப்பர்மார்க்கெட்டுன்னு சுத்திகிட்டு இருப்பேன்.ஞாயிற்றுக்கிழமை வந்து இடம்,வலம்,நடு என்று பதிவுகளை தரிசிக்கிறேன்.வணக்கம்.

19 comments:

ttpian said...

அம்மாடி!
தாங்கமுடியவில்லையே!

கார்த்திகைப் பாண்டியன் said...

//பதிவர் கமலக்கண்ணன் பெண்களின் சல்வார் கமீஸ் அணிவது பற்றியும் ஓடுற பைக்ல துப்பட்டா பறக்க விடாதீங்கன்னும் நல்லது சொல்லிகிட்டிருந்தார்.சொன்னதோடு நின்னுருந்தா பரவாயில்லை.சாருநிவேதிதா சொன்னது உண்மைதான் இந்தியர்கள் செக்ஸ் ஸ்டார்வேசன் ஆட்கள் அப்படின்னாரு.இது என்ன பொதுப்புத்தின்னு தெரியல.ஒருத்தர் பிரபலமாகி விடுவதாலேயே அவர் சொல்லும் எல்லாக் கருத்துக்களும் சரியாகத்தான் இருக்கும் என்று எடுத்துக் கொள்வது.சாரு நிவேதிதா சொல்வது உண்மையில்லைங்க.//

அண்ணே... அது கமலக்கண்ணன் இல்லண்ணே.. கார்த்திகைப் பாண்டியண்ணே.. உங்களக்கு அவரு சொல்றது சரி இல்லன்னு தோணுன மாதிரி எனக்கு சரின்னு பட்டுச்சு அண்ணே.. அதத்தான் எழுதினேன்..

//அதையும் தாண்டி ஆண்,பெண் நட்புங்கிற நிலைக்கும் கூட முன்னேறியுள்ளது.//

jokes apart..கண்டிப்பா.. எனக்கும் கூட அப்படி தோழமைகள் உண்டு நண்பா.. ஆனால் இன்று பெண்ணுரிமைங்கர பேருல மக்கள் misuse பண்ணக் கூடாதுங்கறது என்னோட விருப்பம்.. ஏதாவது எடத்துல நான் பேசுறது தப்புன்னு உங்களுக்கு பட்டிருந்தா.. am sorry.. keep posting..:-)

நசரேயன் said...

எங்கள் குழுவில் சேர்ந்த அண்ணன் வாழ்க

நசரேயன் said...

அப்புறம் இன்னொரு விஷயம் பின்னூட்ட மட்டுறுத்தல் எடுத்து விடுங்க கும்மிக்கு அது நல்லதில்லை

எம்.எம்.அப்துல்லா said...

ஆரமிச்சுட்டுடீங்களா... இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு :)

சின்னப் பையன் said...

வணக்கம்.

அது சரி(18185106603874041862) said...

என்னங்ணா, திடீர்னு மொக்கை போடப் போறேன்னு ஆரம்பிச்சிட்டீங்க?? ஆனா பாருங்க, நீங்க மொக்கைன்னு போட்றது கூட ரொம்ப கருத்தாழம் உள்ளதா இருக்கு...

முரளிகண்ணன் said...

பல்லாண்டு காலம் சிறப்புற வாழ்த்துகிறேன்

முரளிகண்ணன் said...

பல்லாண்டு காலம் மொக்கைப் பணி சிறக்க வாழ்த்துகிறேன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஒருத்தர் பிரபலமாகி விடுவதாலேயே அவர் சொல்லும் எல்லாக் கருத்துக்களும் சரியாகத்தான் இருக்கும் என்று எடுத்துக் கொள்வது.சா//

நாங்கல்லாம் பிரபலம் ஆகாத காரணத்தால் நாங்கள் சொல்வதும் தவறாக ஆகிவிடாதல்லவா..

ராஜ நடராஜன் said...

//அம்மாடி!
தாங்கமுடியவில்லையே!//

வாங்க பேட்ரியாட்டிக் தமிழரே!அதுக்குள்ளேயவா?இன்னும் கச்சேரி ஆரம்பிக்கவேயில்லை:)

ராஜ நடராஜன் said...

//அண்ணே... அது கமலக்கண்ணன் இல்லண்ணே.. கார்த்திகைப் பாண்டியண்ணே.. உங்களக்கு அவரு சொல்றது சரி இல்லன்னு தோணுன மாதிரி எனக்கு சரின்னு பட்டுச்சு அண்ணே.. அதத்தான் எழுதினேன்.//

மன்னிக்கவும்.ஊட்டுட்டுக்கு ஓசிப்பதிவுக்கு போகிறேனா கார்த்திக் பாண்டி பெயர் மாற்றமாயிடுச்சு.பின்னூட்டத்தில் வந்திட்டீங்களே!பேரு நச்சுன்னு நங்கூரமாயிடுச்சு:)

சாருநிவேதிதா சிலவற்றை மனம்திறந்து எழுதுகிறார்.பலசமயம் படிப்பவனை உண்மைகளையும் மீறி நம்ப வைத்து விடுகிறார்.பகுந்து பார்ப்பது படிப்பவனின் கடமை.

ராஜ நடராஜன் said...

//எங்கள் குழுவில் சேர்ந்த அண்ணன் வாழ்க//

நான் உங்க குழுவில் சேர்ந்து ரொம்ப நாளாச்சே:)

கனாக்காண்பதை தவிர "சரக்கு வச்சிருக்கேன்" ங்கிற மாதிரிதான் இருக்கு உங்க சரக்கு:)

ராஜ நடராஜன் said...

//அப்புறம் இன்னொரு விஷயம் பின்னூட்ட மட்டுறுத்தல் எடுத்து விடுங்க கும்மிக்கு அது நல்லதில்லை//

செஞ்சுட்டாப் போச்சு.

ராஜ நடராஜன் said...

//ஆரமிச்சுட்டுடீங்களா... இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு :)//

ஆசை!தோசை!எங்களையெல்லாம் மொக்கைல தள்ளிட்டு பல களம் காணப் பார்க்கிறீங்களே அண்ணே:)

ராஜ நடராஜன் said...

//வணக்கம்.//

புரிஞ்சிடுச்சு!வந்துடுவோமில்ல:)

ராஜ நடராஜன் said...

//என்னங்ணா, திடீர்னு மொக்கை போடப் போறேன்னு ஆரம்பிச்சிட்டீங்க?? ஆனா பாருங்க, நீங்க மொக்கைன்னு போட்றது கூட ரொம்ப கருத்தாழம் உள்ளதா இருக்கு...//

ஊக்க மாத்திரை.நன்றிங்க.

ராஜ நடராஜன் said...

//பல்லாண்டு காலம் சிறப்புற வாழ்த்துகிறேன்//

வாங்க முரளிகண்ணன்.மொக்கையுடன் பல்லாண்டு காலம்ன்னு வாழ்த்துங்க:)

ராஜ நடராஜன் said...

//நாங்கல்லாம் பிரபலம் ஆகாத காரணத்தால் நாங்கள் சொல்வதும் தவறாக ஆகிவிடாதல்லவா..//

Sureஷ் ன்னு போட்டுக்கிறதுக்கு தனிக் காரணம் ஏதாவது இருக்கான்னு சொல்லுங்க.

பிரபலங்களுக்கெல்லாம் மண்டை முடி கொட்டுறதா கேள்வி?உங்களுக்கு வசதி எப்படி:)

பிரபலமாகமலும் சரியாக் கருத்து சொல்ல முடியுமுங்க.