Followers

Wednesday, March 31, 2010

ஈரோடு பதிவுலக வேண்டுகோளும் கூட்டாஞ்சோறும்.

நீரை சிக்கனமாக்கும் குறிக்கோளாக ஈரோடு வலைப்பதிவர்கள் குழு குறிப்பிட்ட வழக்கத்தை மீறி இந்த வருடம் கோடை வெப்பமாக இருக்கிறது என்ற இடுகையின் சாரமாக இங்கே புவி வெப்பம் பற்றி குறிப்பிட்டாகி விட்டது.

நமது நாட்டில் பொதுவாக குளியல்,உணவு,தாகம்,கழுவுதல் போன்ற நான்கு பிரிவில் நீர் தேவைப்படுகிறது.கர்நாடகா,ஆந்திரா,கேரளா என தமிழகம் தண்ணீரை நம்ப வேண்டிய சூழலும்,அதிகரிக்கும் ஜனத்தொகையும்,புவி வெப்பமும் நீரை Scarcity commodity என்ற பகுதியில் நிறுத்தி விட்டது.பதிவர்களுக்கு வேண்டுகோளின் பின்னூட்டத்தில் கார்த்திகைப் பாண்டியன் சொன்னது போல இல்லத்தரசிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.

நீர்,நிலம்,மலை,காடுகள் என்று இருக்கும் நாமே நீருக்கு சிரமப்படுகிறோமென்றால் உயர்ந்த கோபுரங்களுடன் நவீன யுகத்தில் உலாவரும் வளைகுடா நாடுகள் பெட்ரோல் கிடைப்பதற்கும் முன்பு தங்கள் வாழ்க்கையின் முக்கிய ஆதாரங்களை எப்படி சேகரித்திருப்பார்கள்,சிக்கனம் செய்திருப்பார்கள்?

ஈராக்கின்,யூப்ரடிஸ்,டைகிரிஸ்-எகிப்தின் நைல் போன்றவை நாகரீக தொட்டில்களாக அமைந்திருந்தாலும் ஏனைய அடர்ந்த பாலைவன நாடுகளாகவும்,கடல் எல்லைகளை ஒட்டியே இருந்த பாலைவன நாடுகள் பண்டமாற்று முறையில் வணிகம் செய்தும்,அரிசி,வாசனை திரவியங்கள்,தண்ணீர் போன்றவற்றை இந்தியா போன்ற நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்து கொண்டார்கள்.அப்படியான சூழலில் நீர் உணவுக்காக பயன்பட்டிருக்குமென்று பார்த்தால் மைதாவால் சுடப்பட்ட ரொட்டி,செந்தழலால் சுடப்பட்ட ஆட்டிறைச்சி,குறைந்த நீர் நிலைகளில் வளரும் கீரை வகைகள் போன்றவை உணவுகளாகின.இப்பவும் வளைகுடா நண்பர்கள் ந்ன்கு அறிந்த குப்பூஸ்,மொட்டைக்கடலை மாதிரியான பருப்பு,நெருப்பின் அணலில் வறுத்த கோழி,ஆட்டுக்கறி,குதார் எனப்படும் இலைதழைகள் போன்றவற்றை குப்பூஸில் சாப்பிட்டால் கையைக் கழுவ வேண்டிய அவசியமில்லாமல் நாப்கினில் தடவிட்டு போய் விடலாம்.
நாமும் கலாச்சார மாற்றங்களில் மாறியிருந்தாலும் நெல்லைக் கண்டு பிடித்த முப்பாட்டன் காலம் தொட்டு அரிசி சோறும்,கஞ்சியும் மாறவில்லை.இங்கேயிருந்து துவங்கலாம் நீர் சேமிப்பை.நான் பார்த்த வரை கஞ்சியை தாய்க்குலம் வடித்து கொட்டி விடுகிறார்கள்.முன்பெல்லாம் கஞ்சி ஒரு நேரத்து ஆகாரமாகக் கூட இருக்கும்.கேழ்வரகும்,சோளமும்,கம்பும் அரிசிக்குப் போட்டியாக இருந்தன.இப்ப எப்படி?ஒரு கிலோ அரிசிக்கு 3 மடங்கு தண்ணீர் சேர்த்தாலே அரிசி வடித்து கஞ்சியை கீழே கொட்டலாம்:) பதிலாக 1கிலோ அரிசி,1-1/2 கிலோ தண்ணீர் பதத்தில் சோறு சமைத்தால் சுண்டும் தண்ணீரீலே சோறை சமைத்து விடலாம்.வடிக்கும் வேலை மிச்சம்.ஆனால் பொல,பொலன்னு சோறு சாப்பிட முடியாது.கூட்டாஞ் சோறு அதிகமாக சாப்பிட்டுப் பழகலாம்.உடல் நலத்துக்கும் நல்லது.தண்ணீர்,நேரத்தை மிச்சப்படுத்தி விடலாம்.அரிசியில் கார்போ ஹைட்ரேட் அதிகமாவதால் நம் உடலிலும் அதிகமாகிறது.வட இந்திய ஸ்டைலில் கொஞ்சம் சப்பாத்தி,கொஞ்சம் சாதம் சாப்பிடலாம்.இல்லையென்றால் சப்பாத்தி மட்டுமே.
தாகம் தீர்ப்பதில் பெப்சி,கோலா பானங்களை தவிர்க்கலாம்.அப்புறம் அது...அது....தவிர்க்கலாம்.நானெல்லாம் கிடைக்காம சும்மா இல்ல:)பழ ரசங்கள்,இளநீர் மாற்றாக அமையலாம்.

தினமும் மொண்டு மொண்டு ஊத்தி மொடாவை காலி செய்வதை விட வாரத்தில் இரண்டு நாட்கள் துவலைத் தொட்டு பிரஞ்சுக்காரனாகலாம்.(எல்லாத்துக்கும் அமெரிக்காவை பின்பற்றுவதற்கு மாறுதலாக பிரெஞ்சுக்காரர்களும்தான் மகிழ்ந்து கொள்ளட்டுமே)

பாத்திரம் விளக்கியாகனும்,துணி கழுவியாகனும்,பல் கழுவியாகனும்.எப்படி சுத்தி வந்தாலும் கழுவுதல் இடிக்குதே! யோசிச்சு சொல்றேன்.

14 comments:

கண்ணா.. said...

நிறைய ஆராய்ச்சி பண்ணிருக்கீங்க போல..

:)

க.பாலாசி said...

ரெண்டு மஃக்கு ஊத்தி கழவுறத ஒரு மஃக்குலையே கழவிடிவேண்டியதுதான்...

ராஜ நடராஜன் said...

//நிறைய ஆராய்ச்சி பண்ணிருக்கீங்க போல..

:)//

பழக்க தோசம்தான் தோழா!பழக்க தோசம்தான்:)

ராஜ நடராஜன் said...

//ரெண்டு மஃக்கு ஊத்தி கழவுறத ஒரு மஃக்குலையே கழவிடிவேண்டியதுதான்...//

ஜி!உங்களுக்கு அப்படி என்ன ஒரு பற்றுதல் பாலா(சி) கூட:)சரி விசயத்துக்கு வருவோம்.

ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யக்கூடாதேன்னு இன்றைக்கு ஒரு பக்கெட் தண்ணீர் மட்டும் நிரப்பி குளிச்சதுல அரை பக்கெட் தண்ணீர் மிச்சம் புடிக்க முடிந்தது.

இப்ப சோப்பு போடறதுக்கு பதிலாக Oilatum bath formula ன்னு ஒரு B.Pharm நம்ம ஊர்காரர் பார்மஸில சிபாரிசு செய்தார்.சோப்பு மாதிரி இது நுரை த்ள்ளுவதில்லை.எனவே நீரை மிச்சம் பிடிக்கவும் எளிதானது.சோப்புகளும்,சோப்பு போடறதும் முன்ன மாதிரி இல்ல.நிறைய ரசாயனப் பொருட்கள் கலப்பு.பாதி தோல் நோய்கள் சோப்பினால வருதோன்னும் கூட ஒரு சந்தேகம்.

அப்புறம் இடுகையில சொல்ல மறந்த ஒன்று.லக்கிலுக் ஊருக்கெல்லாம் வீட்டுக்கு ஒரு கொய்யாமரம் வளர்ப்போம் கொள்கை மாதிரி நம்ம ஊர்ப்பக்கமெல்லாம் தரிபூசணி வளர்ப்போம்.தாகத்துக்கு தாகம் தீர்க்கும்.விளைச்சல் வியாபாரத்துக்கும் பயன்படும்.எப்புடீ?

க.பாலாசி said...

அது சரிதானுங்க ராஜன். தர்பூசணிக்கூட நல்லதுதானுங்க...

உங்களுக்கு ஒண்ணு தெரியுங்களா நான் சோப்பு யூஸ் பண்றதில்லீங்க... பச்சபயறு மாவுதானுங்க... ஒரு பக்கெட் தண்ணியிலத்தாங்க குளிக்கிறேன்...

கபீஷ் said...

:-)

ராஜ நடராஜன் said...

//அது சரிதானுங்க ராஜன். தர்பூசணிக்கூட நல்லதுதானுங்க...

உங்களுக்கு ஒண்ணு தெரியுங்களா நான் சோப்பு யூஸ் பண்றதில்லீங்க... பச்சபயறு மாவுதானுங்க... ஒரு பக்கெட் தண்ணியிலத்தாங்க குளிக்கிறேன்...//

பச்சைப் பயிரா?பரவாயில்லையே!நானும்தான் எப்படியாவது செகப்பாயிடனுமின்னு கல்லூரி நாட்களில் கடலை மாவு போட்டு குளிச்சேன்.மாவுதான் செவப்பா ஓடுச்சு:)

ராஜ நடராஜன் said...

:)

கபீஷ்!சொல்லிட்டுத்தான் சிரிக்கிறது:)

துபாய் ராஜா said...

கோயம்புத்தூர் குசும்போடு அழகான அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

//கோயம்புத்தூர் குசும்போடு அழகான அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.//

கேள்வி கேட்டேனே!பதில் போட்டீங்களா?நீங்க துபாய் ராஜாவா?அலெக்சாண்டரா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்ன சார் குளிக்கிறீங்களா..ஆ..?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நாட்டுல.. இவ்வளவு பிரச்சனை நடந்திகிட்டு இருக்கும் போது குளியலா?
நோ..நோ

ராஜ நடராஜன் said...

//என்ன சார் குளிக்கிறீங்களா..ஆ..?//

//நாட்டுல.. இவ்வளவு பிரச்சனை நடந்திகிட்டு இருக்கும் போது குளியலா?
நோ..நோ//

பட்டு:)இருப்பது பாலைவனம்.கருணாநிதியின் இலவசம் மாதிரி பாதி இலவசமா கிடைப்பதே தண்ணீரும்,பெட்ரோலும்தான்.லண்டன்,அமெரிக்காவா இருந்தா குளிக்கறது பற்றி யோசனையாவது செய்யலாம்.

ஒரு பாட்டில் மினரல் வாட்டரில் கூட குளிக்கிற நுட்பம் தெரிஞ்சு வச்சிருக்கேன்.நம்ம ஊருக்குப் போனா செயல்படுத்திட மாட்டேனா?

hayyram said...

சோறு நல்லாருக்கே!

anbudan
ram

www.hayyram.blogspot.com