Followers

Wednesday, June 30, 2010

இரட்டைக்குவளை

இன்று மீனகம் வெளியிட்டிருந்த இந்த பதிவை காண நேர்ந்ததும் அதிர்ச்சியாக இருந்தது.அதுவும் கோவை ,திருப்பூர் என்றதும் முகத்தில் அறைந்த மாதிரி ஒரு உணர்வு. நகர்,மலை,ஆறுகள்,வனம்சார்ந்த இடங்களாய் சுற்றித்திரிந்த காரணமாக புறநகருக்கும் அப்பாலான பேச்சு வழக்கு, கிராமிய கட்டமைப்புக்கள் அனைத்தும் பெரும்பாலும் புத்தகங்கள் மற்றும் தமிழ் திரைப்படங்கள் கற்றுக்கொடுத்தவையே. இந்து ,இஸ்லாமியன் ,கிறுஸ்தவன் என்ற முத்திரைகள் ஒட்டிக்கொள்ளாத இளமைக்கால நட்புறவுகளுக்கும் மனிதர்களுக்கும் இந்த கணத்தில் மரியாதை செலுத்திக்கொள்கிறேன். கல்லூரிக்காலத்தில் பல்லடம் அருகே கிராமம் ஒன்றுக்கு நடந்து போகவேண்டிய வெயிலில் செங்கல் சூலையில் வேலை செய்து கொண்டவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டதற்கு சாமி இங்கேயெல்லாம் தண்ணி குடிப்பீங்களா என்று கேட்டதன் பொருள் விளங்காமல் குடிப்பேன் என்று சொல்லி தாகம் தீர்த்தது மட்டுமே குவளைக்கான எனது புரிதலாக இருந்தது.


இன்னும் அதிகம் சொல்லப்போனால் திராவிட,பார்ப்பனீய அதீத வெறுப்புக்களை கூட பதிவுலகம் வந்தே கண்டு கொண்டேன்.ஒரு தனி மனிதனைப் பார்க்கும் போதும் ,பேசும் போதும் ஹலோ சொல்லுவதோ,யதேச்சையாக பேச்சுக்கொடுப்பதோ என இருக்கும் மனிதன் எப்படி கூட்டாக வாழும்போது கட்டுக்களை விதித்துக்கொள்கிறான்.கல்லூரி விடுதிகளிலும் கூட அவனவன் சாதிபூதம் அவனவன் ட்ரங்குப்பெட்டி,சூட்கேஸ்களில் மட்டுமே உறங்கிக் கொண்டிருந்தனவே.எப்படி கிராமங்களில் அவை அகோர முகம் காட்டித்திரிகிறது.வெள்ளாந்தியான மனிதர்களுக்குள் எப்படி மன இறுக்கமான பூட்டுகள்?
இல்லாத ஒன்றை இருக்குது,இருக்குதுன்னு டமாரமடிச்சு திரிந்ததாலா அல்லது கம்யூனிஸ்ட்டுகள் சிந்தனையின்படி பிரபுத்துவ,பூர்ஷ்வா வேறுபாடுகள் மண்ணில் ஆழப்பதிந்து கிடக்கிறதா.நகர்ப்புற உணவகங்களில் கல்லாவுக்கு காசு வருகிறதா என்று மட்டும்தானே பார்க்கிறார்கள்?தலையில் உருமா கட்டியவன்,ஜீன்ஸ் போட்டவனென்றா பார்க்கிறார்கள்?கிராமப்புற டீஸ்டாலில் மட்டுமெப்படி இரட்டைக்குவளை வந்து தொலைக்கிறது.பெரியாரின் காலத்திலிருந்து நகர்ந்து வந்து 30,40 ஆண்டுகள் கழித்தும் இரட்டைக்குவளை இழிநிலையெனும் போது நமது சமூக வளர்ச்சியின் விகிதாச்சாரம் புரிகிறதா?ஒரு தலைமுறை கழிந்து அடுத்த தலைமுறைக்கான புதிய வித்துக்கள் அல்லவா வளர்ந்திருக்க வேண்டும்.திராவிட இயக்கங்களின் பெயர் சொல்லியே ஆட்சிக்கு வந்தவர்கள் காலத்திலேயே சமூக அசுத்தங்களை அகற்ற முடியவில்லையென்றால் இனி எந்தக்காலத்தில் இவைகள் அவை அந்தக்காலம் என்ற பழைய வரலாறாகப் போகின்றன?திராவிட,பார்ப்பனீய சண்டைகளை மூட்டை கட்டி கூவத்துல தள்ளிவிட்டு உண்மையாகவே சமூகத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் சாதியவாதிகளை அடையாளம் காண்பது மிக முக்கியம்.

இரட்டைக்குவளையுடன் தமிழன் உலகின் மூத்த குடி என சுய முதுகு சொறிந்து கொள்கிறோம்.ஒரு முறை சில அரேபியர்கள் ஏழெட்டுப்பேர் வட்டமாக உட்கார்ந்து கொண்டு பெரிய அண்டா மூடி மாதிரியான பாத்திரத்தில் கூஸி எனப்படும் முழு ஆட்டுப்பிரியாணியை சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.ஒருவர் குடித்த கிளாசில் இன்னொருவர் குடிப்பதற்கும் கூட முகம் சுளிக்கவில்லை.அரேபியர்கள் பெண்ணுரிமைகளில் பிற்போக்காக இருந்தாலும் (இப்போது தொலைக்காட்சி ,உலகளாவியல் ,பன்னாட்டு கலாச்சாரத்தால் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது) சாப்பாட்டில் காட்டும் ஒற்றுமை இரட்டைக்குவளை நிலைக்கு மாறுபட்டது.

உடன்கட்டையேறுவது தவறு என்று சட்டமாக்கப்பட்டு இப்போது உடன்கட்டையே காணாமல் போய்விட்டது.இரட்டைக்குவளையும் தவறு என்பது அரசியல் சட்டத்தினால் மட்டுமே இயலும்.கூடவே கிராமம்,தமிழகம் என்ற வட்டத்துக்கும் அப்பால் பிரபுத்துவ மனப்பான்மையாளர்கள் இயன்ற வரை இந்தியா சுற்றுலா செல்வது பாரதம் பற்றிய புரிதலோடு மனிதம் என்ற உன்னதமான வெளிச்சத்தையும் காட்டும்.

Saturday, June 26, 2010

செம்மொழி பட்டிமன்றம்

செம்மொழி என்ற புதிய விழாவின் காலம் நெருங்க நெருங்க எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் தங்களை சமாதானம் செய்து கொண்டு கோவையில் திருவிழாக் கோலத்தில் சங்கமித்து விட்டார்கள் என்று தெரிகிறது.இணையம் சார்ந்த அரங்கு கணினி ஆர்வலர்களுக்கு ஒரு நேரடி அனுபவம் என்பது தவிர மாநாட்டு நிகழ்வுகள் தனி மனித புகழ் பாடுவது மாதிரியே தொலைகாட்சிகள் செய்திகளை கொண்டு வருகின்றன.முந்தைய ஆட்சி காலத்து காலில் விழும் பாரம்பரியத்துக்கு கொஞ்சமும் குறைவானதல்ல இந்த தனிமனித உயர்வு நவிழல் மக்கள் முன், தொலைக்காட்சிகளின் முன் மிகவும் அறிமுகமான பிரபலங்கள் தனி மனித வழிபாட்டால் முகஸ்துதி செய்து வழிபாடு விட்டார்கள்.மனத்தின் ஆழங்களை அவர்களின் உறக்க நேரத்துக்கு விட்டு விட்டு பட்டி மன்றம் செல்வோம்.

அதிகாலை தொலைக்காட்சியில் கேட்கும் குரல், பட்டிமன்றத்துக்கே உரிய பாமரத்தனக் குரலின் அதிபுத்திசாலித்தனம் , பழகலாம் வாங்க பிரபலம் சாலமன் பாப்பையா தலைமையில் பாரதிராஜா , சந்திரசேகர்(அது என்ன புதிதாக வாகை என்று ஒன்று ஒட்டிக்கொண்டுள்ளது சமீபத்தில்), குதிரைப்பந்தயம் எஸ்.வி.சேகர் , நக்கீரன் கோபால் போன்றவர்களுடன் வண்ணத்திரையா,சின்னத்திரையா, அச்சுத்துறையா என்ற தலைப்புக்களில் ஒப்புக்கு சப்பாணி பட்டிமன்றம் நிகழ்ந்தது.பட்டிமன்றம் குறித்த நுண்ணரசியல் பேசுவதற்கும் அல்லது தமக்குள்ளேயே அசை போடுவதற்கும் ஏனைய பதிவர்கள் உள்ளார்கள்.எனவே இங்கே பாரதிராஜா குறித்தும் சாலமன் பாப்பையா தீர்ப்பு குறித்து மட்டும் பார்ப்போம்.2009ம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தல் காலத்து பாரதிராஜாவின் ஈழம் குறித்த அனுதாபம்,பேச்சுக்கள்,பின் தொடர்ந்த அலுவலக சேதங்கள் வன்முறையைத் தொடர்ந்து தனிமையாகிப்போன பாரதிராஜாவின் இப்போதைய பட்டிமன்ற முகங்காட்டல் என்பதும் வண்ணத்திரை குறித்த கருத்து என்பதும் கொடுத்த நேரமான 10-13 நிமிடங்களில் சொல்லிவிட்டுப் போகும் இயலாமை என்பதும் முகம்பாடலுக்கே முந்தைய மணித்துளிகளுக்கு செலவாகிப் போவதும் காரணமாக முன்பே சொன்ன ஒப்புக்கு சப்பாணியின் சாரமாகவே தெரிந்தது.எப்படியோ பாரதிராஜாவுக்கான சறுக்கல்கள்,சமரசங்கள் வார்த்தைகளில் தெரிகிறது.

காற்றோடு கரையும் வார்த்தைகளாய் ஏனைய பங்குதாரர்களின் பேச்சுக்களும் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லபடுமென்பதால் அது பற்றிய ஆய்வுக்குச் செல்லாமல் சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றத் தீர்ப்புக்கு வந்து விடுவோம்.வண்ணத்திரை,சின்னத்திரை,அச்சுத்துறை போன்றவை முப்படைகள் போலவும் இதில் வண்ணத்திரை விமானப்படை போலவும்,சின்னத்திரை கப்பற்படை போலவும்,அச்சுத்துறை தரைப்படை போலவும் என்றும் இந்த முப்படைகளில் அச்சு என்ற எழுத்துத் துறை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நான்காவது தூணாக இருப்பதால் மற்ற இரண்டை விட அச்சுத்துறைக்கு தனது தீர்ப்பின் வெற்றியை வழங்கினார்.

பட்டிமன்றம் கேட்டவர்களுக்கும், பேசியவர்களுக்கும் எவருக்குமாவது முப்படைகளின் உதாரணம் மனதின் ஏதாவது ஒரு மூலையில் குத்தியிருக்குமா என்று தெரியவில்லை.எனக்கு உறைத்தது.வெறும் வாய் வார்த்தைகளில் என்னைப் போலவும்,பட்டிமன்றக்காரர்கள் போலவும் வார்த்தை படைகளை வைக்காமல் முப்படைகளையும், அதன் சாகசங்களையும் ஒரு தமிழன் உருவாக்கினான்.கண்முன்னே கொண்டு வந்து வைத்தான்.அதன் ரத்த வரலாறுகள் விமர்சனத்துக்குரியவையாக இருந்தாலும் அதன் ஆற்றல், எதிர்ப்பு சக்தியின்மையால் பேரம் பேசும் அருகதையற்ற சொன்னதை மட்டுமே கேட்கும், எதிர்ப்புக்குரல் எழுப்பாதே அவனுக்கு வலிக்கும், பின் அடிப்பான் என்ற மனோபாவத்துக்குள் நம்மை இழுத்துக் கொள்ளும் ஆமைத்தனம்.இனமின்றி மொழியில்லை.அரசியலுக்கும் அப்பாற்பட்டு தமிழ், மொழி என்று ஒன்று படுவதே மாற்றம் பெரும் உலகில் நம்மை நாமாக அடையாளம் காட்டும்.எத்தனை குறைகள் நம்மிடம்,பிரிந்து படும் மனப்பான்மை. இவற்றை சரி செய்யாமல் மூன்று நாள் முகப்பூச்சால் மொழி வளரப்போவதில்லை.முந்தைய மாநாடுகளும், கோட்டை அட்டைகளும், மனிதர்களும் அடையாளமே காணாமல் போய் விட்டன.கோவை மேம்பாலம் மட்டுமே வாகனங்களை, மனிதர்களை இன்றும் சுமந்து நிற்கின்றது.அதே போல் இப்போதைய மாநாட்டின் சுவடுகளையும் காலம் எழுதி வைக்கும் நிரந்தரப்படும் தன்மை இருந்தால் மட்டும்.

Thursday, June 24, 2010

இதுக்குப்பேரு விளையாட்டு.

இன்றைய தினத்து கால்பந்தாட்டத்தில் D பிரிவில் ஒரு பக்கம் கானாவும் ஜெர்மனியும்,இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியாவும் செர்பியாவும் ஆட்டத்தை துவங்கினார்கள்.இரண்டு ஆட்டங்கள் ஆடி முடித்திருந்த நிலையில் பிரிவின் வரிசைப்படி

கானா - 4
ஜெர்மனி - 3

செர்பியா - 3
ஆஸ்திரேலியா -1

என்ற நிலவரத்தில் புள்ளிகளை எடுத்திருந்தது.நான்கு பேருக்குமே மூன்றாவது ஆட்டத்தை வெற்றி பெற்றால் மட்டுமே கால் இறுதிக்குள் நுழையும் சாத்தியம் இருந்தது.இரு ஆட்டங்களும் ஒரே நேரத்தில் துவங்கியதால் சேனலை இரண்டு பக்கமும் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியதாக இருந்தது.இதில் ஆஸ்திரேலியா V செர்பியா துவக்கம் முதலே சூடு பிடித்ததால் எப்படியும் ஜெர்மனி வெல்லும் என்ற நம்பிக்கையில் அந்தப் பக்கம் போவதை நிறுத்திக்கொண்டு ஆஸ்திரேலிய செர்பிய விளையாட்டில் கவனம் செலுத்தினேன்.ஆட்டத்தின் வேகம்,கோல் போடும் முயற்சியில் இரு அணிகளின் அபாரமான விளையாட்டு What a game man! என கத்தும்படியாக இருந்தது.இரண்டாம் பகுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2 கோல்கள் போட்டு கால் இறுதிக்கு தகுதியாகும் போல் இருந்தது.செர்பியா 1 கோல் போட்டு இன்னொரு கோல் போடுவதற்கு முயற்சி செய்து பலனில்லாமல் போனது.

எனவே யார் கால் இறுதிக்குப் போவார்கள் என்று FIFA கிட்ட கேட்டால் ஜெர்மனி V இங்கிலாந்து மோதும் என்றும் கோல் கணக்கில் ஆஸ்திரேலியா பின் நிற்பதால் ஆட்டத்தை வென்றும் அடுத்த கட்டத்துக்குப் போக இயலாது என்று சொல்லி விட்டது.பதிலாக கானா V அமெரிக்கா முட்டிக் கொள்ளும் என்று நாட்டாமை தீர்ப்பு சொல்லி விட்டது.

ரிலே பார்க்கும் சந்தர்ப்பம் யாருக்காவது கிடைத்தால் ஆஸ்திரேலியா V செர்பியா ஆட்டத்தை கண்டு களிக்கலாம்.93 நிமிடத்துக்கு ஒரு திகில் படம் பார்த்த அனுபவம் கிடைக்கும்.ரத்த காட்டேரி எங்கேன்னு நசரேயன் கமெண்ட கூடாது:)

ரெஃப்ரிகளுக்கு நல்லா டோஸ் கிடைச்சிருக்கும் போல இருக்குது,கொஞ்சம் அடக்கு வாசிப்பதாலேயே ஆட்டம் ஆட்டம் போடுகிறது.

Wednesday, June 23, 2010

இந்திய கால்பந்தாட்ட சோணங்கியும்,கிரிக்கெட் வில்லனும்

2010 உலக கால்பந்தாட்ட போட்டிக்கு கடந்த காலங்களை விட வழக்கத்து மாறாக புதிய நாடுகள்,குட்டி நாடுகள் கூடவே பின்தங்கியிருந்த ஆப்பிரிக்க நாடுகள் எல்லாம் களத்தில் நின்று துள்ளியும் தள்ளியும் விளையாடுகின்றன.இந்திய தேசம் என்ற கோசமில்லாமல் நன்றாக ஆடும் அணிகளையும்,சிறந்த ஆட்டக்காரர்களை மட்டுமே கண்டு கழிக்க முடிகிறது.வாய் மட்டும் ஏழு முழத்துக்கு நாங்கள் வல்லாரசாக்கும் பீத்தலுக்கு மட்டும் குறைச்சலேயில்லை என்ற கோபம் எழுவதற்கும் கோடானு கோடி இந்திய ஜனத்தொகையில் 23 பேர் மற்றும் கால்பந்து விளையாட்டுக்குழுவை உலக அளவில் அனுப்ப முடியாததின் காரணம் என்ன?

உலகமயமாக்கல் சந்தைக்கும்,இப்போதைய புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் முன்பும் பனிப்போர் என்னும் அமெரிக்க, ரஷ்ய நாடுகளை சார்ந்த நிலைகளிலும் அணி சாரா நாடுகள் என்றும் கொள்கையளவில் மட்டும் கடந்து வந்த இந்தியாவின் கடந்த காலங்களை யோசித்தால் டென்னிஸ் ,கால்பந்து,ஹாக்கி ,கிரிக்கெட் என கலந்து கட்டி விளையாடிய காலங்கள் என தெரிகிறது.

இதில் இந்தியாவில் கால் பந்தாட்டம் எந்த கால கட்டத்தில் தடம் மாறிப் போனதென பார்க்கலாம்.முன்பெல்லாம் ஹாக்கியின் ஆக்கிரமிப்புடன்,கால் பந்தாட்டம்,கபடி போன்றவையே முன்னிலை வகித்தது.இந்திய அளவில் ஈஸ்ட் பெங்கால்,மோகன்பேகன் அணிகள் கல்கத்தாவில் கால்பந்தாட்டத்தின் உயிர் நாடியாக இருந்தது.கோவாவில் சர்ச்சில் அணி,சல்கோங்கர் அணி போன்றவையும் இன்னும் கேரளா.பஞ்சாப் போன்ற அணிகளும் இருந்தும்கூட இப்போது உலக தரவரிசையில் 138லிருந்து 147 வரை முன்னேறிய! நாடாக இணைய தேடலில் கிடைத்தது.

கல்கத்தா,பஞ்சாப்,கோவா,கேரள மாநிலத்தில் கால்பந்தாட்டம் நன்றாக வேரூன்றியதும் குறிப்பாக ரயில்வே துறை,அதற்கும் மேலாக ஹாக்கி விளையாடுவதற்கும் ஒரு கூட்டம் அலைமோதியது.மாநில ரீதியான போட்டிக்கான இரண்டாம் வகுப்பு,மூன்றாம் வகுப்பு ரயில் பயணங்களில் இவர்கள் காணாமல் போனார்களா அல்லது திடிரென வந்த அலையான கிரிக்கெட்டின் ரசிகர் கூட்டத்தில் காணாமல் போனார்களா?

உலக கால்பந்தாட்டங்களை தொலைகாட்சியில் பார்க்கும் போது ஒன்று புரிந்தது.உடல் வலிமை,வேகம் ,உடல்,இடுப்பு,கால் வளைக்கும் லாவகத்தன்மை,எதிர்பாராமல் பந்து கால் மாறும் சூட்சுமம்,இடித்தும் ஆட வேண்டிய போங்காட்டம் போன்றவைகளில் பின் தங்கியதும் பயிற்சி இல்லாததும் கூடவே ரசிகர்கள் உருவாகி திசை மாறிப்போனதும். கிரிக்கெட் போலவே இதுவும் அடிப்படையில் மூளையை உபயோகிக்கும் விளையாட்டே.டெஸ்ட் பந்தையங்களின் தூக்கத்திலிருந்து 50 ஓவர், இப்பொழுது 20 ஓவர் என கிரிக்கெட் தனது முகத்தை மாற்றிக் கொண்டாலும் கால்பந்தாட்டம் இதுவரையிலும் தனக்கென்று அமைத்துக் கொண்ட விதிகளை ஒட்டியே இன்னும் விளையாடிக்கொண்டிருக்கிறது.

வளைகுடா நாடுகளில் கிரிக்கெட் என்று சொன்னால் வடையா (சுனாதா?) என்று கேட்குமளவுக்கு கிரிக்கெட்டின் நிலைமை.ஆனால் உலக நாடுகள் அத்தனைக்கும் சொந்தமான விளையாட்டு கால்பந்தாட்டம்.விளையாட்டுக்குப் பின்னால் ஒவ்வொரு நாட்டின் அரசியலும் இருக்கிறது என்பது ஜெர்மனி V போலந்து , பிரான்ஸ் V இங்கிலாந்து, அமெரிக்கா V இங்கிலாந்து மற்றும் இந்தியா , பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு நிச்சயம் பொருந்தும்.

கிரிக்கெட் போதைக்கு ஊறுகாயா சில சொந்த அனுபவங்களை சொல்கிறேன்.பேச்சிலர் கேம்பில் ஒரு அறையில் 10-20பேர் தொலைக்காட்சியில் இந்தியா V பாகிஸ்தான் நேரலை கிரிக்கெட் பார்ப்பது ஒரு அலாதியான அனுபவம்.எல்லா பயல்களும் இந்தியாவுக்கு குரல் எழுப்பினால் இந்த ஓவரில் சச்சின் அவுட்டாகிறான் பாருன்னு எல்லோருக்கும் சூடேற்றுவதில் எனக்கு கொள்ளைப்பிரியம்:)என்னை ரூமுக்குள் விடக்கூடாது என்றும் கூட எழும் குரலைப் பார்த்து எனக்கும் உபசரிக்கும் நண்பனுக்கும் சிரிப்பாய் வரும்:)அதே மாதிரி சச்சின் அவுட் ஆனவுடன் ஆட்டமே நிறைய நேரங்களில் ஊத்திக்கும்.இவன் வருவதால்தான் இந்தியா தோற்குது என்ற செண்டிமெண்ட் கோபங்கள் கூட சில பேரிடமிருந்து கிளம்பும்.ஒரு முறை ஒரே ஒரு முறை இந்தியா-பாகிஸ்தான் போட்டி குவைத்தில் நடந்தது.மைதான ஆட்டத்தை விட ஸ்டேடியத்தில் மினரல் வாட்டர்,பெப்சி, 7 அப்புல ஆட்டம் களைகட்டி போதுமடா சாமி உங்க கிரிக்கெட் என்று உள்துறை சொல்லி ஒரு விளையாட்டும் இதுவரை நிகழவில்லை.

இந்தியா,பாகிஸ்தான் இரண்டு பேரும் தாங்களும் போட்டியா அடித்துக்கொண்டதுமில்லாமல் வேடிக்கை பார்க்க வந்த இலங்கைகாரனையும் ,பங்களாதேஷியையும் களமிறக்கி இப்ப ஆப்கானிஸ்தான்காரன் வேற கோதாவில்.நின்னுகிட்டே போடற கிரிக்கெட் சண்டைய ஓடிப்பிடிச்சு கால்பந்திலும் காட்டறது?

எப்படியோ இந்திய அளவில் கால்பந்தாட்டம் களை இழந்தே போனதன் கால கட்டம் கபில்தேவ் அணியினர் கிரிக்கெட் உலககோப்பையையும், ரவிசாஸ்திரி ஆடி ஜெர்மன் காரை பரிசாகப் பெற்ற கால கட்டத்தில் போதை கொண்டிருக்குமோ?ஏறிய போதை கிரிக்கெட் சூதாட்டங்களில் கபில்தேவ்ப்,ஜடேஜா இப்ப மோடி,சரத்பவார் வரைக்கும் வந்தும் தெளிந்து இருக்கணுமே!அதுவும் இந்த பதிவு எழுதும் தினம் வரை நிகழ காணோம்

அனைத்து விளையாட்டுகளையும் பின் தள்ளி விட்டு முக்கியமாக கிரிக்கெட் மட்டும் எப்படி வளர்ந்தது என்பது இன்னும் ஆய்வுக்குரியது.அதில் முக்கியமாக இந்திய,பாகிஸ்தான் இடையேயான பகை உணர்வு எல்லையில் துப்பாக்கி பிடிக்க முடியாத இரு நாட்டு சீருடையில்லா காமன்மேன் போர்வீரர்களுக்கு மனதளவிலான சண்டையே கிரிக்கெட் எனும் வில்லன் இவ்வளவு விசுவரூபமெடுத்ததற்கு காரணம் எனலாம்.மேலும் இந்தியாவின் கால் பந்தாட்ட திறன் குறைந்ததற்கு ரசிகர்கள் இல்லாமல் சோணங்கியாகிப் போனதும் ,ஊக்குவிப்பு இல்லாததும் கிரிக்கெட் வில்லன் மோகமும் ,சூதாட்டமும் இன்னும் அல்லக்கை காரணங்கள்.

டிஸ்கி: இவ்வளவு வளவளக்கிறீயே!மைதானத்துல வந்து நின்னு பாருன்னு சென்னையிலருந்து யாரோ கூவுற மாதிரி கேட்குது.கிரிக்கெட் மட்டைக்கு முன்னாடியே கத்துகிட்டதே கால்பந்தும்,கபடியும்,கோலி,கில்லிங்ண்ணா:)

அட நம்மள வுடுங்க!ஏதோ பஞ்சம் பொளக்க பரதேசம் போயிட்டோம்.திருப்பூர்ல சின்னசாமின்னு தமிழக மாநில அளவிளான ஒரு வாலிபால் பிளேயரே மாநில அளவில் விளையாடி அடையாளமில்லாமல் வியாபாரம் செய்ய போயிட்டாருங்ண்ணா.



Tuesday, June 22, 2010

மரடோனாவின் கட்டுப்புடி வைத்தியம்

கமலஹாசன் அர்ஜெண்டினாவின் கால் பந்து ஆட்டங்களை பார்க்கிறாரா என்று தெரியவில்லை.கட்டுப்புடி வைத்தியம் சொல்லிக் கொடுத்தும் தமிழகத்தில் யாரும் வைத்தியம் பார்க்கிற மாதிரி தெரியவில்லை.ஆனால் உலக கோப்பையில் இந்த மனோதத்துவ இயற்கை வைத்தியத்தை கடைபிடிக்கும் ஒரே ஆள் மரோடானாதான்.அணியின் ஆட்டக்காரர்களுக்கும்,கோல் விழும் நேரத்தில் பக்கத்துல யாரு மாட்டுவார்கள் என்று தேடிப்பிடித்து வைத்தியம் பார்ப்பதிலும் மனுசன் கில்லாடியாகவே இருக்கிறார்.

இன்றைய அர்ஜெண்டினா V கிரீஸ் ஆட்டத்தின் துவக்கத்தில் முதல் பகுதி வரைக்கும் அலட்டாமல் ஆடிய இரு அணிகளும் இரண்டாம் பகுதியில் ஆட்டத்தின் வேகத்தை அதிகப் படுத்தி ஆடினார்கள்.ஆனாலும் பெரும்பாலான நேரங்களில் பந்து அர்ஜெண்டினாக்காரர்களின் கால்களிலேயே சுழன்றது.பந்து ஆளாளுக்கு நகர்த்தும் நேர்த்தியும்,பெரும்பாலான நேரங்களில் இம்மியளவும் பிசகாத பந்து மாற்றலும் கண்ணுக்கு நல்ல விருந்து.

இரண்டாம் சுற்றுக்கு அர்ஜெண்டினாவும் , தென்கொரியாவும் முறையே 9 & 4 என்ற கணக்கின் குறீயீட்டில் தகுதி பெற்றுள்ளன.இதில் தென்கொரியா, நைஜீரியா மற்றும் கிரீஸை தோற்கடித்து அர்ஜெண்டினா ஹேட்டிரிக் அடித்தது குறிப்பிடத்தக்கது.

மரடோனாவின் கட்டுப்புடி வைத்தியம் தொடர வாழ்த்துக்கள்.

செம்மொழி தினத்தில் ராவணன்

பதிவுலக திரைப்பட விமர்சனங்களை இரு வகையாக பிரிக்கலாம்.எவ்வளவு மொக்கையாக படம் இருந்தாலும் தனது இருப்பை புதுப்பித்துக் கொள்ளும் பொருட்டோ அல்லது பதிவின் எண்ணிக்கையை கூட்டும் எண்ணத்திலோ அல்லது என்ன செய்றதுன்னே தெரியலையெ எதையாவது கிறுக்கி வைப்போம் என்பது ஒரு வகை.இன்னுமொரு வகை கவனிக்கப்பட்டவர்களை கவனிப்பதும், மனதை பாதிப்பதும், படத்தின் காலகட்டத்தையும், கதை, இசை, ஒளிப்பதிவு, நடிக, நடிகையரின் திறன் வெளிப்படுத்தலை பதிவு செய்வதும், நேர் எதிர் வினைகளும் இன்னும் கூடவும். ராவணன் இரண்டாவது வகையைச் சார்ந்தது.

ரசிகர்களை வாசல் கதவில் நல்லாவே இருக்குது என கருத்துப் படம் புடிக்கும் கால கட்டத்திற்கு முன்பு குடும்பம்,நண்பர்களாக,குழுவாக திரையரங்கை விட்டு வெளியே வரும்போதே படம் குறித்தான தாக்கம் வாயசைவுகளாக வெளிப்படும் வார்த்தைகளும்,தனி மனிதனாக படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது தொண்டைக்குழி அடைத்துக்கொள்வது மாதிரியான உணர்வுகளுடன் மனதை என்னவோ செய்வதும், திரைப்படம் குறித்தான ஆக்கிரமிப்பு திரையரங்கை விட்டு வெளியே வந்தும் நெஞ்சாங்கூட்டில் சிம்மாசனம் போட்டு உட்காருவதும், யோசிக்க வைப்பது மட்டுமே ஒரு படத்தின் வெற்றியாக அமைவதற்கான அறிகுறிகள்.

பட விளம்பரங்கள்,பாட்டு,நல்லாயிருக்குது வாய் வார்த்தைகள் என படம் கல்லா கட்டுவது என்பதெல்லாம் மாறி எதிர்வினைகளும்,நிகழ்வுகளும் படத்தை காணவேண்டும் என்ற விளம்பர நுட்பமாகவும்,தொலைக்காட்சி விளம்பரங்கள்,பாடல் விழா,வலைத்தளம் என்று மாறிப்போன காலகட்டத்தில் படம் குறித்த பார்வைகள் ஓரளவுக்கு கசியத் துவங்குவதும்,படம் பார்க்கும் முன்னே அது குறித்தான பல்நோக்கு விமர்சனங்கள் வெளிவந்து விடுவதாலும் முந்தைய கால கட்டத்து தாக்கங்கள் எதுவுமின்றி வீரா மலை மாதிரி நின்ற துவக்க காட்சியுடன் தொடர்ந்த கதை ஒண்ணுமே புரியமாட்டேங்குதே என்ற பக்கத்து இருக்கை இரு பேச்சிலர் பார்ட்டி குரல்களுடனும்,ஸ்டிரியோ சத்தத்தால் சத்தம் போட்டு அழுத குழந்தையின் அழுகையுடனும் துவங்கியது.பின் இடம் பழக்கப்பட்ட மாதிரி படத்தின் தாக்கம் ஒவ்வொருவரையும் சூழ்ந்து கொண்டது ரஞ்சிதாவின் முகம் தெரியும் வரை.இது குறித்த ஏனைய தமிழக பதிவர்களின் விமர்சனங்களையும் காணும் போது மனதின் சலனங்கள் நாடு விட்டு நாடு போனாலும் ஒரே மாதிரிதான் போலும்.பாரதிராஜாவின் நாடோடி தென்றலும்,மணிரத்னத்தின் ராவணனும் ரஞ்சிதாவின் வாழ்க்கையை நினைவுக்கு கொண்டு வரும் மிக முக்கிய காலகட்டங்கள் ரஞ்சிதாவைப் பொறுத்த வரையில்.

யார் யாரை முந்துகின்றார்கள் என்ற போட்டியில் காமிராவே எல்லோரையும் முந்திக்கொள்கிறது.அதற்கு துணையாக காடும், காடு சார்ந்த இடங்களும், அதனையொட்டிய கதையமைப்பும்.2010 சிறந்த படம்,நடிகர்,நடிகையென விக்ரம், ஐஸ்வர்யா பச்சனுக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. படத்தில் நடித்தவர்கள் உழைப்புக்கும், ஒளிப்பதிவு, பாடல்கள்,அரங்கமைப்பு, சண்டைக்காட்சி போன்ற உழைப்புக்கும் அப்பால் மணிரத்னத்தின் உழைப்பின் நேர்த்தி படத்தை அழகாகவே கொண்டு வர முயற்சி செய்திருக்கிறது.காடும்,காடு சார்ந்த இடங்களும்,வீரா பெயரும், தூதுக்கு வந்தவனை சுட்டுக்கொன்ற எஸ்.பி போன்ற நிகழ்வுகள் வீரப்பனை நோக்கி நகர்த்த முயற்சித்து விட்டு, காட்டில் வசிக்கும் மக்களை நோக்கி மேல் தட்டு வசனத்துடனும், வடக்கில் நிகழும் பழங்குடியினர் சார்ந்த மாவோயிஸ போராட்டத்தை மெல்ல அடையாளம் காட்டி விட்டு கதாபாத்திரங்களின் புனைவுகளில் ராவண காவியம் எழுத முயற்சி செய்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.ராமனை விட ராவணன் உயர்ந்தவன் என்பது மட்டுமே படத்தில் தெரிகிறது. விவாதம் உள்ளவர்கள் கம்பராமயாணத்தையும், பட்டிமன்றங்களையும் மீள் வருகை செய்வது நல்லது.

அனில் அம்பானியின் பணமும்,சிறந்த இயக்குநரின் ஆளுமையும் இருந்தும் கூட சொல்ல வந்ததை சொல்ல முடியாத தயக்கங்கள் இருப்பது தெரிகிறது.மேல்தட்டு சிந்தனைகள் கீழ்தட்டோடு பொருந்தாமல் போவதன் காரணம் எல்லாவற்றையும் சமன் செய்து நடக்க வேண்டிய இந்திய சூழலா என்பது தெரியவில்லை.அனில் அம்பானிக்கும்,மணிரத்னத்துக்குமே சொல்ல வந்ததை சொல்ல இயலாத நிலைமையென்றால் இந்திய முக பிரதிபலிப்பை மீண்டும் ஒரு முறை நமக்கு நாமே பார்த்துக்கொள்வது நல்லது.

மேலும் திரைப்படத்துறையில் இருக்கும் அமிதாப்பச்சனுக்கும், மணிரத்னத்துக்குமே அவரவர் படம் குறித்த பார்வைகளின் விமர்சனங்கள் இருக்கும் போது படம் குறித்தான முழுமை இல்லையென்றே தெரிகிறது.

பொழுதுபோக,வியாபாரம் மட்டுமே என்ற கண்ணோட்டத்தில் ஒரு திரைப்படம் இருந்தால் இருக்கவே இருக்கிறது நண்பர்களின் விமர்சனங்களும்,திருட்டு டி.வி.டிக்களும்.இங்கே விமர்சனம் என்பதற்கு இவற்றை தாண்டிய சமூக பார்வையும் அதனை சொல்ல வேண்டிய அவசியமும் உள்ளது.


தமிழனின் உண்மையான இதிகாசமான ஒரு காலகட்டத்துக்குள் நாம் வாழ்ந்து வருகிறோம் என்கின்ற புரிதல் நமக்கு ஏற்படவேண்டும் நிறை, குறைகள் எதுவானாலும்.நமது இருப்பை, அதன் பொறுப்பை பல படிமங்களாக விட்டுச் செல்லவேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.இல்லையென்றால் வரலாறுகள் திரிக்கப்படும் அபாயங்களை மட்டுமே எதிர்காலத்திற்கு சொல்லாமல் போவோம்.

மணிரத்னம்,கமலஹாசன்,பாரதிராஜா இன்னும் திரைப்படத்துறை சார்ந்த சமூக அக்கறை கொண்ட தயாரிப்பாளர்கள் தங்களை நிரந்தரமாக தமிழ் மண்ணில் அடையாளப்படுத்தி விட்டுப் போகும் ஆற்றல் கொண்டவர்களாய் வரலாற்றின் நிகழ்வுகளை புனைவுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளாமல் பதிவு செய்ய வேண்டிய தார்மீக கடமை கொண்டவர்கள்.ஆனால் அதற்கான தடங்கல் இந்திய சூழல்களா மனம் சார்ந்த தயக்கங்களா?இரண்டுமா?

Sunday, June 20, 2010

ராவணனை மிஞ்சும் ஆட்டங்கள்.

இஃபா இடுகையிட்ட போதே ராவணன் பற்றிய கோபம்,ஆர்வம் பற்றி பின் தணிந்த கோபத்துக்காக வேண்டியாவது எனது 2 தினாரை கொடுத்து விட வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்.ஆனால் கால் பந்தாட்டமும்,திரையரங்கு நேரமும் ஒரே காலத்தில் இருப்பதாலும் அம்மணிகிட்ட படத்துக்கு போகலாம் என்றதற்கு அனுமதி கிடைக்காததாலும் (மனசுக்குள்ளே போட்டி நிம்மதியா பார்க்கலாம் என்ற மகிழ்ச்சி:)) எனவே ராவணனை உலக கோப்பை ஆட்டங்கள் மிஞ்சிக் கொண்டன.இந்த வாரத்தில் எப்படியாவது ஒரு நாள் தூங்கும் ஆட்ட அணியாய் பார்த்து அலுவலகத்திற்கு கட் அடித்தாவது பட பரிகாரம் செய்து விட நினைத்துள்ளேன்.

50 டிகிரியிலிருந்து 55 வரையும் எகிறும் வெப்பம்.அதையும் பொருட்படுத்தாது உச்சி வெயிலில் சில வீட்டு வேலைகளுக்காக வெளியே போய் விட்டு வந்து மண்டை சூட்டிலும்,அரைத் தூக்கத்திலும் நெதர்லாந்து V ஜப்பான் 1-0 மற்றும் ஆஸ்திரேலியா V கானா 1-1 போட்டிகளை பார்த்ததில் போட்டியை ரசிக்க இயலவில்லை.கேம்ரூன் டென்மார்க்கை வெல்லும் என்று எதிர்பார்த்து முதலில் 1 கோல் போட்டு பின் டென்மார்க் 2 கோல் போட்டு கேம்ரூனை வீழ்த்தியுள்ளது.கேம்ரூனுக்கு நிறைய சந்தர்ப்பங்கள் இருந்தும் கோட்டை விட்டதுதான் மிச்சம்.அழுகுணி மேஸ்திரிகள் பற்றி சொன்னது யாரோ FIFA கிட்ட போய் வத்தி வெச்சிட்டாங்க போல தெரியுது இந்த முறை ரெப்ரி, இரு அணி வீரர்களும் மோதி கீழே விழுந்தாலும் கண்டு கொள்ளாமல் ஆட்டத்தின் ஓட்டத்தை தடை செய்யாதது விளையாட்டுக்கு வலு சேர்த்தது.இதனை தொடர்ந்தால் விளையாட்டு ரசிக்கும் படியாக இருக்கும்.

இந்த நாட்டின் முந்தைய அமீரின் மகனை அவரது மாமாவுடனான கார் தகராறால் மாமா இளவரசனை சுட்டுக் கொன்று விட்டாராம்.இந்த செய்தி வெளியாகும் வரை அமீரின் மகனைப் பற்றி இந்த நாட்டு மக்களுக்கு கூட தெரிந்துருக்குமா என்பது சந்தேகம்.தமிழக கடையடைப்பு ,குண்டாந்தடி என்ற கலாச்சாரங்கள் எதுவும் இல்லாமல் ,பத்திரிகை, ஊடக செய்திகளில் எங்கோ ஒன்று, இரண்டு கடைசிக் கட்ட மூலை பத்தி செய்தியோடு யாருக்கும் தெரியாமல் முடிந்து விட்டது.

Friday, June 18, 2010

ஜெயலலிதாவின் இலங்கை அறிக்கை-ஓர் பார்வை

கடலின் இருபக்கமுமிருந்து காப்பாத்துங்க!காப்பாத்துங்கன்னு கத்தியும், அழுதும் சொல்லியும் கூட கேட்காமல் மயிரே போச்சு மாரப்பா என்ற கோவை சொலவடை மாதிரி மத்திய இந்திய அரசும், மாநில அரசும் வல்லான் வகுத்த கோட்பாடுகளுடன் நடந்து கொண்டதோடுமல்லாமல் எங்களை காப்பாற்ற விட்டாலும் பரவாயில்லை,உங்களை நீங்களே காப்பாத்திக் கொள்ளுங்கள் என்று எழும் தெருக்குரல்களான(street voice) நமது குரல்களையும் கூட அலட்சியம் செய்து விட்டு ராஜதந்திரம் என்ற போர்வை போர்த்திக் கொண்டு கை குழுக்கிக் கொள்கின்றன.

அரசியல் ராஜதந்திரம் ஒன்றும் அதிசயத்தில் மாங்காய் விழ வைக்கும் அதிசயமில்லை.உள் துறை அமைச்சர் சொல்வது மாதிரி டக்ளஸ் மீது வழக்கு இருப்பதே பத்திரிகை படிச்சுத்தான் தெரியும் என்று சொன்ன மாதிரியும் அதனோடு கூடுதலாக பத்திரிகைகளின் கருத்துக்கள், தொலைக்காட்சி செய்திகள், அரசு கட்டமைப்பின் முக்கிய தீர்மானங்கள், அதன் மீதான விவாதங்கள், சட்டவியல், எதிர்க்கட்சிகளின் குரல்கள், அவற்றில் உள்ள சுயநலங்கள், பொதுநலங்கள் போன்றவற்றை அலசும் திறன், crisis management எனப்படும் அவசரகால நிர்வாக திறமை, முடிவுகளின் சாதக,பாதகங்கள்,சுயநலத்துக்கும் அப்பால் தேசத்தின் மீதும், மக்கள் மீதும் அன்பும் இருந்தாலே ஓரளவுக்கு அரசியல் ராஜதந்திரத்தில் தேறும் எண்ணிக்கையில் தேர்ந்து விடலாம்.ஆனால் நிகழும் ராஜ தந்திரங்கள் எந்த விதத்தில் இந்தியாவுக்கு நன்மையோ ஆடுகள நபர்களுக்கே வெளிச்சம். மனதுக்கு மட்டும் சமாதானமில்லை.

சென்ற வருடத்தின் ஈழப்படுகொலைகளின் அவலநிலைகளிலே இணையம் சார்ந்த பலகுரல்கள் அடேய்!இந்தியா!உன்னுடைய சுயநலத்துக்காகவாவது சீனாவை இலங்கைப் பக்கம் அண்ட விடாதே என்று குரல் கொடுத்தன.அப்போதெல்லாம் எழுந்த குரல்கள் அரசல் புரசலாக ஜெயலலிதாவின் குரலுக்கு இப்பொழுது கேட்டிருக்கும் போல் இருக்கிறது.இலங்கை வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் சீனாவின் உளவுத்துறை சார்ந்தவர்கள் இலங்கையில் குடிபுகுந்துள்ளார்கள் என்று குரல் கொடுக்கிறார்.அவரின் குரலில் வரும் காலத்தின் தேர்தல் கணக்கீடு உள்ளதா அல்லது உண்மையான இந்திய அக்கறை உள்ளதா என்பது அவருடைய மனசாட்சி சார்ந்த விசயம்.இருந்தாலும் முந்தைய தமிழக அமைச்சர் என்ற நிலையிலாவது இந்திய அரசு இதனை சீர்தூக்கிப் பார்க்கும் என்ற நம்பிக்கைக்கான நிலைகளை மனம் கடந்து விட்டது.

இருந்தாலும் இங்கே ஒரு விசயத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியமேற்படுகிறது.தற்போது தங்க கோப்பைக்கான உலக கால் பந்தாட்டம் நிகழ்கிறது.இதற்கான மொத்த நேரலை தொலைக்காட்சியை கத்தாரின் அல்ஜசிரா நிறுவனத்திற்கு FIFA தாரை வார்த்து விட்டது.துவக்க நாளின் நேரலை ஆட்டம் தடங்கல் செய்யப்பட்டது.இதற்கான காரணங்கள் கணினி,தொலைக்காட்சி ஒளிபரப்பு சார்ந்த அல்ஜசிராவின் உள் கட்டமைப்போ அல்லது எதிர் நிலை அமைப்புகளின் ஹேக் நிலையாக கூட இருக்க கூடும்.இந்தியாவின் தெற்கு கடற்கரை மாநிலங்களான தமிழகமும்,கேரள மாநிலமும் மாநாட,மயிலாட,சுயபுராண நிகழ்வுகள்,ஆட்டம்,பாட்டம் என்று திளைத்துக் கொண்டு அதன் வட்டத்துக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கும் வேளைகளில் சீனாவின் கணினி வன்,மென்பொருள்கள் உலக சந்தையை குப்புற தள்ளி பயனாளிகளுக்கு பயன் தரும் அதே வேளையில் பல முன்னணி நிறுவனங்களை ஹேக் செய்யும் திறன் படைத்தது.இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு உட்கார்ந்த இடத்திலே உலகத்தை ஆட்டுவிக்கும் திறன் கொண்ட மனித வளங்களை மட்டுமே வல்லரசு பட்டியலில் நிறுத்தும் திறன் கொண்டது.அந்த விதத்தில் சீனாவின் திறன்களை குறைவாக எடை போடவும்,இலங்கையின் வாலையும்,தலையையும் காட்டும் சீன,இந்திய ராஜதந்திரம் நட்புறவாக இருக்கும் பட்சத்தில் ஆபத்தில்லை.அரசியல் நிரந்தர நண்பன்,பகைவன் இல்லை என்ற கோட்பாட்டில் மாற்றங்கள் வருமானால் வடக்கிலே காஷ்மீரப் பிரச்சினையை நீட்டுவித்த மாதிரி தென்பகுதியில் இந்தியாவின் நலன்களை குலைத்ததற்கு இப்போதைய காங்கிரஸ் அரசின் பங்கு நிச்சயமாக இருக்கும்.

ஒரு புறம் மக்களின் எண்ணங்கள், தேவைகளின் குரல்கள் பிரதிபலிக்காமல் பொதுமக்களின் சார்பான அமைப்புகளின் மனம் வன்முறைகளை தேடுவது,இன்னொரு பக்கம் அரசியல் குறுகிய லாப கணக்குகள் கொண்டோ, அல்லது நிகழ்வுகளை மாற்றியமைக்கும் முயற்சி கொண்டோ குற்றமும் செய்து விட்டு பழியையும் மக்கள் மீதே போட்டு பிரச்சினைகளை இன்னும் தீவிரமாக்கும் அரசு கட்டமைப்பின் சில அங்கங்களுமென இரு நிலைகளில் ஏதாவதொன்றில் உண்மையிருக்கிறதென்பதற்கான நிகழ்வாக கடந்த வாரத்தில் நிகழ்ந்த ரயில் தண்டவாள தகர்ப்பு தனது அவல முகத்தை வெளிக்காட்டுகிறது.பொது மக்களின் உயிர்களின் மீது அரசியல் சதுரங்கம் நிகழ்த்துபவர்கள் யாராக எந்த நிலையில் இருந்தாலும் கண்டனத்துக்குரியவர்கள்.

நோஞ்சாண் அணி அமெரிக்கா

இதுவரையில் ஆடிய அணிகளில் வெற்றிக்காக கோல் போடவில்லையென்றாலும் பெரும்பாலாண அணிகள் அதற்கான முயற்சியோடு ஆட்டத்தின் ஓட்டத்திற்கு உயிர் கொடுத்தே ஆடுகிறார்கள்.

குட்டி நாடான ஸ்லோவேனியாவும்,பெரிய நாடான அமெரிக்காவும் மோதி கோலியாத்தை சாம்சன் வீழ்த்துற மாதிரி ஸ்லோவேனியா முதல் பாதியிலேயே இரண்டு கோல் போட்டு அமெரிக்காவுக்கு தண்ணீர் காட்டுகிறது.இரண்டாம் பகுதியின் முதல் பத்து நிமிடங்களில் பழரசம்,பெப்சி குடித்த உற்சாகத்தில் அமெரிக்கா 1 கோல் போட்டு 2-1 என்ற நிலையில் ஆட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.இந்த ஆட்டத்தையும்,அடுத்த ஆட்டத்தையும் வென்றால் மட்டுமே கால் இறுதிக்குள் நுழைவதற்கு அமெரிக்கா தகுதி பெறும்.

கைபந்து,அமெரிக்க கில்லி,ரக்பியெல்லாம் ஓரம் கட்டாவிட்டாலும் கூட கால்பந்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துவது அமெரிக்காவிற்கு பெருமை சேர்க்கும்.முன்பு பெக்கன்பெர் பயிற்சியாளாராக்கியும் கூட முன்னேறங்கள் அதே நிலையிலேயே இருக்கின்றது.

ரஷ்யா,யூகேஸ்லேவியா என்ற வட்டத்துக்கு வெளியே வந்து செர்பியா,ஸ்லோவேனியா போன்றவை களைகட்டுகின்றன.புதிய நாடுகள் தோன்றுவதின் திறன்கள் வெளிப்படுவதற்கு சான்றாக இவை திக்ழ்கின்றன.

அடிச்சு ஆடும் ஆட்டங்கள்

சென்ற இடுகையில் 2.0 என்ற பருந்து ஜோசியம் பலிக்காமல் அர்ஜெண்டினா 4-1 என்ற வித்தியாசத்தில் தென் கொரியாவை வென்றது.பிரான்ஸ்,மெக்ஸிகோ போட்டியில் 2.0 என்ற கணக்கில் மெக்ஸிகோ வென்றது.இன்றைய ஜெர்மனி,செர்பியா முதல் பகுதி 45 நிமிட ஆட்டத்தில் 1-0 என்ற நிலையில் ஜெர்மனியை நிலை குலைய வைத்து ஆடிக்கொண்டிருக்கிறது.

பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற அணிகள் உலக தரத்தில் சிறந்த அணிகளாக இருந்தாலும் காலை தட்டி விட்டு ஆடும் ஆட்டத்தை தொடர்வது அணிகளுக்கு அழகும் சேர்க்காமல் மஞ்சள் அட்டையையும்,சிவப்பு அட்டையையும் வாங்கி ஆட்டத்தின் அழகை குறைக்கின்றது.க்ளாஸ் என்ற ஜெர்மனி முன்னணி ஆட்டக்காரர் நோகாமல் நொங்கு தின்னும் ஆசையில் ஆளில்லாத இடமாக (Offside) பார்த்து நின்று கொண்டு ஆடும் போதே எரிச்சல் வந்தது.குறைந்த பட்சம் எதிரணியில் ஒருவரையாவது கடந்து சென்று பந்தை நகர்த்தி வெற்றி பெறுவதே ஸ்கிப்பரின் பங்காக இருக்க வேண்டும்.

மேலும் பின்புறத்திலிருந்து பந்தை தள்ளவும்,எதிரணிக்காரரை கீழே தள்ளவும் முயற்சி செய்து மஞ்சள் அட்டையையும் வாங்கி,இருக்கிற கூட்டத்தின் சத்தத்தில் நமக்கு கேட்க இயலாமல் மேஸ்திரி(refree)யை என்ன சொன்னாரோ அடுத்த கணத்தில் சிவப்பு அட்டையுடன் வெளியேற்றப்பட்டார்.

Red Card controversy is continuing....

மீதி ஆட்டம் பார்த்துட்டு மனசுல ஏதாவது பட்டால் பின்னூட்டத்தில்....

Wednesday, June 16, 2010

அழுகிணி பந்தாட்ட மேஸ்திரிகள்

கால் பந்தாட்டம்ன்னு சொன்னா கால்,அரைக்கால்,முக்கால் பந்தாட்டமான்னு கேட்டு உதை பந்தாட்டம்தான் சரியென்கிறார் தமிழ் புலவர் பழமை.வம்பு எதுக்குன்னு கால் உதை பந்தாட்டம்ன்னே ஆரம்பிக்கிறேன்.

பான் கி மூன் கிட்ட ரெப்ரி செய்யச் சொன்னா எப்படி ஒரு பக்கமாவே பார்த்து கோல் போடச் சொல்வாரோ அதே மாதிரி ஆட்டத்தின் ரசனையைக் கலைக்க,குலைக்கவென்றே நான்கு வருடத்துக்கு ஒரு முறை சில ஆட்கள் மேஸ்திரி வேலை பார்க்க கிடைத்து விடுகிறார்கள்.இன்றைய தென் ஆப்பிரிக்கா,உருகுவே போட்டியில் தென் ஆப்பிரிக்கா கோல் புடிப்பவருக்கு தண்டனையாக சிவப்பு அட்டையும் காண்பித்து கோல் போட அனுமதியும் தந்து ஆட்டத்தையும் கூட்டத்தையும் கலைத்து விட்டார் ரெப்ரி மேஸ்திரி.உலக கோப்பையை நடத்தும் நாடாக மஞ்சள் அட்டையை கோல் பிடிப்பவருக்கு கொடுத்தாவது ஆட்டத்தின் ஓட்டத்தை மாற்றியிருக்கலாம்.முந்தைய காலத்துக்கான பிரேசில் அணிக்கான பயிற்சியாளர்,உடல் வலிமை போன்ற அனுகூலங்கள் இருந்தும் தென் ஆப்பிரிக்காவின் ஆட்டம் சோபிக்கவில்லை.தண்டனையாக முதல் கோல் உருகுவே போட்ட போதே அரங்கிலிருந்து தென் ஆப்ரிக்க ரசிகர்கள் இடத்தை காலி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.அடி வாங்கினவனை மேலும் அடிச்சு காயப்போட்டு 3-0 என்ற நிலையில் உருகுவே சிரித்து அரங்கை காலி செய்தது.

இதே மாதிரி முந்தா நாள் ஒரு மேஸ்திரி கொடுத்த சிவப்பு அட்டையை பிஃபா தள்ளுபடியும் செய்து ரெப்ரிகளில் சிலர் ஆட்டத்தின் ரசனையை கலைக்கிறார்கள் என்பதும் உறுதியாகிறது.

ஆட்டத்திற்கு முன் அர்ஜெண்டினா,ஜெர்மனி (1990?)தங்கத்திற்கான இறுதி ஆட்டத்தை காண்பித்தார்கள்.86ம் நிமிடம் வரை இருபக்கமும் 0-0 என்ற நிலையிலிருந்து அர்ஜெண்டினாவுக்கு தண்டனையாக ஒரு கோல் போடச் சொல்லி ஜெர்மனிக்கு தங்கத்தை எடுத்து கொடுத்து விட்டார்கள்.

விளையாட்டுத் திறன்,உலகப்புகழ்,நட்சத்திர தகுதியிலேயே அரசல் புரசலாக போதைப் பொருட்கள் உபயோகிப்பது மற்றும் வலுக்கட்டாயம் போன்றவற்றால் போதைக் கடத்தல்காரர்களுக்கு கை மாற்றுவது போன்ற செய்திகள் கசிந்தாலும் ஜெர்மனியினுடனான விளையாட்டில் அர்ஜெண்டினா கேப்டனாக இறுதிக் கட்ட விளையாட்டில் மஞ்சள் அட்டை, தங்கம் கிடைக்காத தோல்வி காரணத்தாலும், சொந்த விசயங்களாலும் மரடோனா போதைக்கு அடிமையாகியே போனார். அப்படியிருந்தும் அவற்றையெல்லாம் கடந்து 2010 உலக கோப்பைக்காக அர்ஜெண்டினா அணியின் மேலாளராக திரும்பி வந்ததற்கு மரடோனாவை பாராட்டவே செய்யலாம். அர்ஜெண்டினா குழுவுக்கான அணியாக நைஜீரியா, கொரியா, கிரிஸ் என கால்சுற்று தகுதிக்கு செல்வதற்கு அர்ஜெண்டினாவுக்கு எளிதாக இருக்க கூடும். நாளைய போட்டியான தென் கொரியாவுடனான போட்டி கணிப்பு 2-0 என்ற விகிதத்தில் வெற்றி பெறும் என வளைகுடா பருந்து ஜோசியம் சொல்கிறேன்.

Tuesday, June 15, 2010

பிரேசில் தங்கத்தை வெல்லுமா?

இடுகை இடும் இந்த நேரத்தில் முதல் பாதி விளையாட்டை 0-0 என்ற கணக்கில் பிரேசிலும்,அதிக நாட்கள் தலையைக் காட்டாத வடகொரியாவும் ஆடி முடித்திருக்கின்றன.பிரேசில் மேஜிக் என்ற பதத்தை ஆட்டத்தின் முதல் பாதி வரை காணமுடியவில்லை.பாதுகாப்பு வட்டத்திலேயே நின்றும் அவ்வப்போது தாக்குதல் நுணுக்கத்தையும் வடகொரியா செய்தாலும் பந்து பிரேசில் கால்களிலேயே பெரும்பாலும் விளையாடியது.

இரண்டாம் சுற்றில் பிரேசில் கோல் போடுவதற்கான சாத்தியம் இருக்கலாம்.இருந்தாலும் இதே முறையில் பிரேசில் வரும் நாட்களிலும் ஆடினால் முன்னணி அண்ணாத்தைகளுக்கு ஆட்டம் காண்பிப்பது சிரமமாகவே இருக்கும்.

எப்படியோ அர்ஜெண்டினாவுக்கு வழிய விட்டா சரி:)

இரண்டாம் பகுதி துவங்கி விட்டது.இங்கே உட்கார்ந்துகிட்டு இருந்தால் ஆட்டத்தை யார் பார்ப்பது.வருகிறேன்.

Sunday, June 13, 2010

கால் பந்தாட்டம் 2010

ஜல்லிக்கட்டு தவிர விளையாட்டுல மூத்தவனா கால்பந்தாட்டம்தான் இருந்திருக்கணும்.ஆனா இப்பா தம்பி கிரிக்கெட்டுதான் களைகட்டுகிறார்.வளைகுடா நாடுகளில் கிரிக்கெட் என்ற பெயரே தெரியாதவர்கள் நிறையபேர்.நாலு வருசத்துக்கு ஒரு முறை என்பதாலும்,உடல் அணுவின் அத்தனைக்கும் பரவும் உற்சாகத்தாலும்,மந்திரக்கால்களின் தனிப்பட்ட நளினங்களாலும் உலக கால்பந்தாட்டம் எப்போதும் உற்சாகம் தருபவை.எ

பெரும்பாலோருக்கு பிரேசில் பிரேமம் என்றால் நான் அர்ஜெண்டினா ரசிகன்.என்ன கொஞ்சம் இடிச்சு தள்ளி போங்காட்டம் என்பது மட்டுமே குறை.இருந்தாலும் மைதானத்தில் பந்து மாற்றும் லாவகம்,முன்னணியில் பந்து மாறும் லாவகம் எல்லாம் பிரேசிலுக்கு நிகரானவையே.இந்த முறை மரடோனா அர்ஜெண்டினா வின் மேலாளர் என்பதாலும் ஐரோப்பிய கோப்பையில் பார்சலோனா சார்பாக தனது திறமைகளை வெளிப்படுத்திய மெஸ்ஸியின் விளையாட்டுத் திறன் என்பதாலும் அர்ஜெண்டினாவுக்கு உலகளாவிய ரசிகர் வட்டம் உண்டு .

கடந்த இரண்டு நாட்களின் போட்டிகளில் அர்ஜெண்டினா vs நைஜீரியாவே ஆட்டம் களைகட்டியது. நேற்றைய போட்டியில் மெஸ்ஸியின் மெஸ்மரிஸம் தெரிந்தாலும் நிறைய சந்தர்ப்பங்கள் கோல்கள் எதையும் அள்ளவில்லை.இங்கிலாந்தும்,அமெரிக்காவும் பேசி வச்சிகிட்ட மாதிரி தூங்கிகிட்டே ஆடியதில் ஆட்டம் ரசிக்க இயலவில்லை.கடந்த காலத்து தங்கத்துக்கு அடித்துக்கொண்டு ஆடுவதை விட இந்த முறை இதுவரை ஓரளவுக்கு பரவாயில்லை எனவே தோன்றுகிறது.கால் பந்தாட்ட ஆர்வலர்கள் யாருக்காவது பயன்படட்டும் என்ற எண்ணத்தில் தேதி வாரியாக இங்கே குவைத் நேரப்படியான தேதிவாரியான போட்டிகள்.GMT + 3 மணி நேர வித்தியாசத்தில்.இந்தியாவில் தூங்காமல் பதிவு போடுபவர்களுக்கு மாற்று மருந்தாக சில விளையாட்டு நேர அட்டவணை உதவ கூடும்.

தேதி மோதுற நாடு மோதும் நாடு
11-06-10 17:00 தென் ஆப்ரிக்கா மெக்சிகோ
11-06-10 21:30 உருகுவே பிரான்ஸ்
12-06-10 14:30 தென் கொரியா தென் கொரியா
12-06-10 17:00 அர்ஜெண்டினா நைஜீரியா
12-06-10 21:30 இங்கிலாந்து அமெரிக்கா
13-06-10 14:30 அல்ஜீரியா ஸ்லோவேனியா
13-06-10 17:00 செர்பியா கானா
13-06-10 21:30 ஜெர்மனி ஆஸ்திரேலியா
14-06-10 14:30 நெதர்லாந்து டென்மார்க்
14-06-10 17:00 ஜப்பான் கேம்ரூன்
14-06-10 21:30 இத்தாலி பருகுவே
15-06-10 14:30 நியுசிலாந்து ஸ்லோவேக்கியா
15-06-10 17:00 கோத் தீவூர் போர்சுகல்
15-06-10 21:30 பிரேசில் வடகொரியா
16-06-10 14:30 ஹோண்டுராஸ் சிலி
16-06-10 17:00 ஸ்பெய்ன் ஸ்விட்சர்லாந்து
16-06-10 21:30 தென் ஆப்ரிக்கா உருகுவே
17-06-10 14:30 அர்ஜெண்டினா தென் கொரியா
17-06-10 17:00 கிரிஸ் நைஜீரியா
17-06-10 21:30 பிரான்ஸ் மெக்சிகோ
18-06-10 14:30 ஜெர்மனி செர்பியா
18-06-10 17:00 ஸ்லோவேனியா அமெரிக்கா
18-06-10 21:30 இங்கிலாந்து அல்ஜீரியா
19-06-10 14:30 நெதர்லாந்து ஜப்பான்
19-06-10 17:00 கானா ஆஸ்திரேலியா
19-06-10 21:30 கேம்ரூன் டென்மார்க்
20-06-10 14:30 ஸ்லோவேக்கியா பருகுவே
20-06-10 17:00 இத்தாலி நியுசிலாந்து
20-06-10 21:30 பிரேசில் கோத் தீவூர்
21-06-10 14:30 போர்சுகல் வடகொரியா
21-06-10 17:00 சிலி ஸ்விட்சர்லாந்து
21-06-10 21:30 ஸ்பெய்ன் ஹோண்டுராஸ்
22-06-10 17:00 மெக்சிகோ உருகுவே
22-06-10 17:00 பிரான்ஸ் தென் ஆப்ரிக்கா
22-06-10 21:30 நைஜீரியா தென் கொரியா
22-06-10 21:30 கிரிஸ் அர்ஜெண்டினா
23-06-10 17:00 ஸ்லோவேனியா இங்கிலாந்து
23-06-10 17:00 அமெரிக்கா அல்ஜீரியா
23-06-10 21:30 கானா ஜெர்மனி
23-06-10 21:30 ஆஸ்திரேலியா செர்பியா
24-06-10 17:00 ஸ்லோவேக்கியா இத்தாலி
24-06-10 17:00 பருகுவே நியுசிலாந்து
24-06-10 21:30 டென்மார்க் ஜப்பான்
24-06-10 21:30 கேம்ரூன் நெதர்லாந்து
25-06-10 17:00 போர்சுகல் பிரேசில்
25-06-10 17:00 வடகொரியா கோத் தீவூர்
25-06-10 21:30 சிலி ஸ்பெய்ன்
25-06-10 21:30 ஸ்விட்சர்லாந்து ஹோண்டுராஸ்






வழக்கமாக பிரேசில்,அர்ஜெண்டினா,இத்தாலி,ஜெர்மனி,நெதர்லாந்து,இங்கிலாந்து போன்றவர்கள் அடிச்சு ஆடும் ஆட்டக்காரர்கள்.அர்ஜெண்டினாவை கேம்ரூன் முன்பு ஆட்டம் காட்டியது போல் பேட்டைக்கு புது தாதாக்கள் வந்தாலும் வரவேற்கலாம்.

முதல் சுற்று முடிந்த பின்னரே ஆட்டம் களை கட்டும்.இருந்தாலும் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கால்பந்தாட்ட ரசிகர்கள்,மூணு சீட்டுல குத்து மதிப்பா கணிப்பவர்கள், அதிர்ஷ்டம் பார்ப்பவர்கள் சொல்லலாம்.








































































































































































































































































































































































































































































































































Thursday, June 10, 2010

இடுகை சூட்டு மகுடம் இல்லாமல்

இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரையாய்
மறுமொழிகளே இபோதைய முன்னணி ஆட்டக்காரர்கள்

பரிந்துரைகளின் மோடி மஸ்தான்கள் யார்?
கொத்தும் சொற்களின் பாம்பாட்டிகள் யார்?

வாசகர் பரிந்துரைகள் புரிந்துரைகளாய் இல்லாமல் போனதால்
தமிழ்மணத்தின் இடது கண் இப்போது மருத்துவ விடுதியில்

நெற்றிப் பொட்டு நட்சத்திரம் இன்னும் மினுமினுக்கிறது
மகுடமே இல்லாமல் சூடான இடுகையும் இல்லாமல்
தமிழ்மணமே!உன் முகப்பூச்சே சரியில்லை.....


.

Monday, June 7, 2010

லாபி

லாபி என்ற ஆங்கில வார்த்தைக்கு நலன்கள் என்று பொருள் கொள்ளலாமா? வாழ்க்கையிலும், அரசியலிலும் , ஏன் பதிவுலகில் கூட லாபி என்ற நலன்கள் ஒரு முக்கியமான சொல்லாக அங்கம் வகிக்கிறது.பள்ளி பருவத்தில் நண்பர்களுடன் விளையாடுவது ,பெண்கள் வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு அரசல் புரசலாக கதை பேசுவது,குழாயடிச் சண்டை, கல்லூரியில் மாணவர் தேர்தல்,தேர்தல் காலத்து நம்ம சனத்தான் பார்த்தல், நடிகரின் ரசிகர் மன்றம் இப்படி பல உருவங்களில் லாபி ஒளிந்து கொண்டிருக்கிறது.

அங்காடித் தெரு இப்போதைக்கு மட்டும் ஒரு பக்கத்து கதை சொல்வதாகவே நினைக்கிறேன்.ஆனால் வி.ஜி.பி சகோதரர்கள் முதல், எவர்சில்வர் பாத்திரங்களை தலையில் வைத்து சுமந்து பின் பாத்திரக்கடை, அழகுப்பொருட்கள் , தேநீர் கடை இன்னும் பல வியாபாரங்களில் தங்களை வறுத்திக் கொண்டு வியாபார ரீதியாக தங்களை நிலை நாட்டிக்கொண்ட திருநெல்வேலி போன்ற மாவட்டத்துக்காரர்கள் உயர்ந்திருப்பதும் கூட லாபிக்கான அடையாளங்களே. வெளிநாடுகளில் தங்கள் பாரம்பரியம், கலாச்சாரம் தெரிய கோயில் கட்டியவை போன்றவை கூட சமூகம் சார்ந்த லாபியின் கூறு எனலாம்.

கடந்த நாட்களில் இந்தியாவும் கூட ஐ.நாவின் அகலமாகும் நிரந்தர அங்கத்தினர் இருக்கைக்கான லாபியில் மீண்டும் ஒரு முறை வலம் வருகிறது.ஐக்கிய நாட்டு சபை,அரசாங்கம்,வெள்ளை மாளிகை என லாபியின் வட்டம் இப்படி நீண்டு கொண்டே போகிறது.கடந்த வாரத்தில் பாலஸ்தீனிய காசா பகுதிக்கு சென்ற கப்பல் பயணித்தில் 9 பேரை இஸ்ரேலிய ராணுவம் சுட்டுக்கொன்றதை பி.பி.சி,சி.என்.என்,அல்ஜசிரா இன்னும் பல தொலைக்காட்சி ஊடகங்கள் முன்நிறுத்தி செய்திகளை வெளியிட்டன.நேற்று இன்னுமொரு கப்பல் ராகேல் கோரி கப்பல் மெல்ல நகர்வதையும் கூட சி.என்.என் உயிரோடு காண்பிக்கிறோம் என்கிறது.இன்னொரு பக்கம் வளைகுடா தொலைக்காட்சிகள் இதனை முதன்மை படுத்தியது.ஐ.நா,அமெரிக்கா முதற் கொண்டு தமது கண்டனங்களை வெளியிட்டது.இவைகளும் கூட லாபி என்ற சொல்லின் உள்ளடக்கம்.இலண்டனில் இஸ்ரேல் தீவிரவாதத்தை நிறுத்து போன்ற எழுத்துப்பலகைகளுடன் மக்களை தெருவுக்கு அழைத்து வர முடிகிறது லாபியால்.இவைகளுக்குப் பின்னால் வலுவான பொருளாதார பக்கபலங்கள் பின் நிற்கின்றன இரு பக்கமும்.

சமூக அக்கறை கொண்ட சமுதாயமாகவே நம்மை நான் பார்க்கிறேன்.ஆனாலும் சறுக்கல்கள் நிறையவே சமூக,அரசியல்,பொருளாதார,பூகோள ரீதியாக.நமது நலன்களின் மொத்த மதிப்பீடுகளை உங்கள் பார்வைக்கும் சிந்தனைக்கும் விட்டு விடுகிறேன்.

Sunday, June 6, 2010

யாராவது போனாலும் போய்வாங்க!

IIFA பிரச்சினை துவங்கும் முன்பே அதனை நோண்டிப்பார்த்தது பதிவுலகமே.அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான எனது பத்து ரூபாயாக(அதென்ன எப்ப பார்த்தாலும் 2 செண்ட்ன்னு சொல்லிகிட்டு:)) இங்கே சொல்லியாகி விட்டது.

மீண்டும் ஒரு முறை சொன்னைவைகளை அசை போடும் நோக்கில் பின்நோக்கி சென்று நோக்கும் போது பதிவர் வானம்பாடிகள் சொன்னது பலித்திருக்கிற காரணத்தால் அதுவே தலைப்பாக மாறியிருக்கிறது.சில நேரங்களில் போராட்டங்கள் நீர்த்துப் போயிருக்கின்றன,சில சமயங்களில் மக்களின் போராட்டங்கள் சிறு அதிர்வையாவது இப்போதைக்கு நிகழ்த்தியிருக்கிறது.அந்த விதத்தில் மும்பாயில் போராடிய நாம் தமிழர் இயக்கத்துக்கும்,தமிழக திரைப்படத்துறையினருக்கும் முக்கியமாக மணிரத்னம்,அமிதாப் அவர்களுக்கும் நன்றிகள்.மனித உறவுகளை மேம்படுத்தாமல் விழாக்கள் என்ற முகப்பூச்சுக்களால் நிரந்தரமான பயன் எதுவுமில்லை.

மூலையில் கடுகு மாதிரி கண்ணுக்குத் தெரியாமல் உட்கார்ந்து கொண்டு யோசிக்கும் நமக்கே நன்மை தீமைகள் பற்றிய ஒரு விரிவான பார்வை இருக்கிறது எனும் போது அரசு நாற்காலியின் அதிகாரத்தில் இருக்கும் எந்த தனி மனிதனுக்கும் இதனை விட அகன்ற பார்வையிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.