Followers

Sunday, June 20, 2010

ராவணனை மிஞ்சும் ஆட்டங்கள்.

இஃபா இடுகையிட்ட போதே ராவணன் பற்றிய கோபம்,ஆர்வம் பற்றி பின் தணிந்த கோபத்துக்காக வேண்டியாவது எனது 2 தினாரை கொடுத்து விட வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்.ஆனால் கால் பந்தாட்டமும்,திரையரங்கு நேரமும் ஒரே காலத்தில் இருப்பதாலும் அம்மணிகிட்ட படத்துக்கு போகலாம் என்றதற்கு அனுமதி கிடைக்காததாலும் (மனசுக்குள்ளே போட்டி நிம்மதியா பார்க்கலாம் என்ற மகிழ்ச்சி:)) எனவே ராவணனை உலக கோப்பை ஆட்டங்கள் மிஞ்சிக் கொண்டன.இந்த வாரத்தில் எப்படியாவது ஒரு நாள் தூங்கும் ஆட்ட அணியாய் பார்த்து அலுவலகத்திற்கு கட் அடித்தாவது பட பரிகாரம் செய்து விட நினைத்துள்ளேன்.

50 டிகிரியிலிருந்து 55 வரையும் எகிறும் வெப்பம்.அதையும் பொருட்படுத்தாது உச்சி வெயிலில் சில வீட்டு வேலைகளுக்காக வெளியே போய் விட்டு வந்து மண்டை சூட்டிலும்,அரைத் தூக்கத்திலும் நெதர்லாந்து V ஜப்பான் 1-0 மற்றும் ஆஸ்திரேலியா V கானா 1-1 போட்டிகளை பார்த்ததில் போட்டியை ரசிக்க இயலவில்லை.கேம்ரூன் டென்மார்க்கை வெல்லும் என்று எதிர்பார்த்து முதலில் 1 கோல் போட்டு பின் டென்மார்க் 2 கோல் போட்டு கேம்ரூனை வீழ்த்தியுள்ளது.கேம்ரூனுக்கு நிறைய சந்தர்ப்பங்கள் இருந்தும் கோட்டை விட்டதுதான் மிச்சம்.அழுகுணி மேஸ்திரிகள் பற்றி சொன்னது யாரோ FIFA கிட்ட போய் வத்தி வெச்சிட்டாங்க போல தெரியுது இந்த முறை ரெப்ரி, இரு அணி வீரர்களும் மோதி கீழே விழுந்தாலும் கண்டு கொள்ளாமல் ஆட்டத்தின் ஓட்டத்தை தடை செய்யாதது விளையாட்டுக்கு வலு சேர்த்தது.இதனை தொடர்ந்தால் விளையாட்டு ரசிக்கும் படியாக இருக்கும்.

இந்த நாட்டின் முந்தைய அமீரின் மகனை அவரது மாமாவுடனான கார் தகராறால் மாமா இளவரசனை சுட்டுக் கொன்று விட்டாராம்.இந்த செய்தி வெளியாகும் வரை அமீரின் மகனைப் பற்றி இந்த நாட்டு மக்களுக்கு கூட தெரிந்துருக்குமா என்பது சந்தேகம்.தமிழக கடையடைப்பு ,குண்டாந்தடி என்ற கலாச்சாரங்கள் எதுவும் இல்லாமல் ,பத்திரிகை, ஊடக செய்திகளில் எங்கோ ஒன்று, இரண்டு கடைசிக் கட்ட மூலை பத்தி செய்தியோடு யாருக்கும் தெரியாமல் முடிந்து விட்டது.

4 comments:

ஜோதிஜி said...

இன்னும் கொஞ்சம் விரிவாக பேசியிருக்கலாம். பட்டும் படாமல் ஒதுங்கியது போல் இருக்கிறது.

vasu balaji said...

அடிக்கு உதை மேலுன்னு இருந்திட்டீங்களோ:))

ராஜ நடராஜன் said...

//இன்னும் கொஞ்சம் விரிவாக பேசியிருக்கலாம். பட்டும் படாமல் ஒதுங்கியது போல் இருக்கிறது.//

சட்டியில இருக்குறத சுரண்டியே இவ்வளவுதான் வந்ததுங்க:)

ராஜ நடராஜன் said...

//அடிக்கு உதை மேலுன்னு இருந்திட்டீங்களோ:))//

எல்லோரும் ராவணனை காய்ச்சு காச்சுன்னு காய்ச்சுறாங்களேன்னு இன்றைக்கு இத்தாலி V நியூசி உதை பார்க்காட்டியும் பரவாயில்லைன்னு இன்னும் ஒரு மணி நேரத்தில் பயணம்:)