Followers

Friday, October 1, 2010

அயோத்தி தீர்ப்பும் உலகளாவிய பார்வையும்

வரலாறு மட்டுமே பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. மனிதனின் வாழ்க்கைச் சக்கரமோ முன்னோக்கியே போய்கொண்டிருக்கிறது.ஆனாலும் இன்றைய நிகழ்வே நாளைய வரலாறு.மொகஞ்சோதாரா துவங்கி வரலாற்று சான்றுகள் இந்தியாவில் பல இருக்கும் போது ஒரு நாட்டை ஆண்ட தசரதனுக்கோ அதற்கு பின் பட்டாபிசேகம் சூடிக்கொண்ட ராமனுக்கோ இதிகாச ராமயாணம் என்ற myth தவிர எந்த ஒரு ஆதாரமும் இல்லாதது ஆச்சரியமே.

இருந்தாலும் பல மனிதர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ராமர் பிறந்தது அயோத்தியே என்பதாலும் லக்னோ நீதிமன்ற தீர்ப்பு எதிர்காலத்தில் எந்த விதமான தாக்கங்களை யார் மூலம் எப்படி கொண்டு போகும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.அயோத்தி ராமர்,பாபர் தீர்ப்பு வரலாற்றை தன்னுள் தக்க வைத்துக்கொண்டு இந்தியாவின் எதிர்கால நல்லிணக்கத்தை நோக்கி நகர்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பு என்றே உணர்கிறேன்.ஆனால் இந்த நல்லிணக்கம் இருபக்க மத உணர்வாளர்களிடமிருந்தும் விடுபட்டு மதச்சார்பின்மையற்ற பெரும்பான்மை எதிர்கால இந்திய மக்களின் கரங்களில் உள்ளது.பெரிதாக hype செய்யப்பட்ட கலவரம் எதுவும் தற்போது வெடிக்காமை மகிழ்ச்சியை தருகிறது.அதற்கான காரணமாக இது வரை தீர்ப்புக்கு திரி வைக்காமையும்,அரசின் முன்னேற்பாட்டால் நாடு தழுவிய நடவடிக்கையும் என்பேன்.The government decision making and precaution has paid a dividend.

இன்றைய NTDVயில் அயோத்தி தீர்ப்பு குறித்த பல தரப்பு கருத்துக்களை பர்கா தத் பல பிரபங்களுடன் (வித் அக்தார்,இந்தியன் எக்ஸ்பிரஸ் குப்தா,ரவிசங்கர்,உமா பாரதி இன்னும் பலர் உட்பட)வழங்கிக்கொண்டிருந்தார். அதில் குப்தா குறிப்பிட்ட ஒன்று இந்தியாவில் தனக்கு பிடித்த இடம் காஞ்சிபுரமென்றும் அதற்கான காரணமாக காஞ்சி மடமும்,அதற்கும் பக்கத்தில் மசூதியும்,பஸ் நிலையத்துக்கருகில் பெரியார் சிலையும் அதன் கீழ் கடவுளை நம்புவன் முட்டாள் என்ற வாசகமும் என்றார்.

இந்திய,பாகிஸ்தானின் பிளவுக்கு காரணிகளான அடிப்படை மதவாதம் நாட்டை இருகூறாக்கியதற்கு பின்பு தற்கால இந்தியாவில் அதேபோன்ற ஒரு நிலை உருவாகிய பின் ஒரு நிலம் எப்படி பிரிக்கப்படும் என்பதை கண்கூடாக காண்கிறோம்.மண்ணாக ஒன்றாக ஒட்டியிருக்கும் நிலம் இனி மனிதன் போடும் கோட்டால் பிரிக்கப்படும்.ஆனால் தற்போதைய சூழலும் நீதிமன்ற தீர்ப்பும் இந்திய,பாகிஸ்தான் என்ற இரு நாடுகள் எப்படி உருவாகியிருக்கும் என்பதை சிந்திக்க வைக்கிறது.இந்தியாவுக்குள் பல பிரச்சினைகள் இருந்தாலும் it is matured enough to followup the long path of democracy.இதையே பாகிஸ்தானும் தொடர்ந்திருந்தால் பிரிந்திருந்தாலும் பிரச்சினைகள் உருவாவதற்கு சந்தர்ப்பங்கள் இல்லாமல் இருந்திருக்கும்.ஆனால் பாகிஸ்தான் மதம் என்ற கற்கள் நிறைந்த பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்டது.இதனைக்கடந்து பாகிஸ்தான் வரும்போது இருநாடுகளும் முன் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுர நினைவுச் சின்னமும் இஸ்லாமிய தொழுகைச் சின்னமும் லக்னோ நீதிமன்ற தீர்ப்பைப்போல் அமெரிக்காவில் ஒரு நிலையை எடுப்பதற்கு இந்தியா ஒரு முன்வழிகாட்டி.இதனை அமெரிக்கா எதிர்காலத்தில் எப்படி கையாளப்போகிறது என்பதும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.

கிட்டத்தட்ட அயோத்தி மாதிரியான ஒரு நிலையை அதாவது myth Vs history என்ற நிலையில் யூதர்களின் கோயிலும்,பாலஸ்தீனியர்களின் மசூதியும் ஒரே இடத்திற்கு ஜெருசலமே எங்கள் தலைநகரம் என்று போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.விரும்பியோ விரும்பாமலோ நிகழ்ந்த வரலாற்று கசப்புக்களை பின்னோக்கி வரலாற்றையே நோண்டி உயிர்ச்சேதம் உருவாக்காமல் அயோத்தி நீதிமன்ற தீர்ப்பின் வழியில் எதிர்காலத்தை கட்டி அமைப்பதே இஸ்ரேல்,பாலஸ்தீனியப் பிரச்சினை தீர்வுக்கு வழிவகுக்கும்.

இந்திய-பாகிஸ்தான், அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் எதிர்காலம், இஸ்ரேல்-பாலஸ்தீனிய பிரச்சினைக்கும் சற்றும் குறைவில்லாத வரலாற்று காயங்களை இலங்கை கொண்டிருக்கிறது.முந்தைய நாடுகள் எல்லாம் ஏதாவது ஒரு வழியில் தங்கள் பிரச்சினை தீர்வுக்கான நிலப்பங்கீடுக்கான சூழல்கள் இருக்கும் போது இனத்தால்,மொழியால் மாறுபட்டிருக்கும் இலங்கையை இரண்டாகப் பிரித்துக் கொடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?2.7 ஏக்கரே சமாதானாத்துக்கு பிரிக்கப்படும் போது இரு இனமும் சம உரிமையோடு தங்கள் கலாச்சாரப்படி வாழ இலங்கையைப் பிரிப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்?முன்பு ராமன் பின்பு பாபர் இருவருமே நூற்றாண்டுகள் கழித்து பங்காளிகளாகும் போது ஈழத்தமிழனும், சிங்களவனும் ஏன் பங்காளியாக முடியாது?வழிகள்?

8 comments:

ராஜ நடராஜன் said...

வித் அக்தார் என்பது ஜாவித் அக்தார்!

ஜாவித் அக்தார் பற்றி சொல்லும் போது ஒரு கவிஞன் எப்படி யோசிப்பான்,ஒரு மதவாதி எப்படி யோசிப்பான் என்ற புரிதல் அயோத்தி தீர்ப்பு NDTV விவாதக்களத்தில் கிட்டியது.

Thekkikattan|தெகா said...

ராஜ நட,

இந்தப் பிரச்சினையை ஒட்டி தனியாக ஒரு பதிவு போடலாம் என்று ஒரு எண்ணம் உள்ளது.

இருப்பினும் இந்தத் தீர்ப்பு ஒரு தீர்வை கொடுத்திருக்கிறது என்று நினைக்கும் உங்கள் எண்ணத்திற்கு எனது வந்தனங்கள். என்னய பொருத்த மட்டில் நவீன வரலாறா (600 வருஷம்) அல்லது புராணக் கதையை மையமாக வைத்து வடித்த வரலாறா என்றால் நான் அண்மைய வரலாற்று பக்கமே நிற்பேன். ஏனெனில் நாம் நிகழ்காலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நிகழ்ந்திருப்பது அடாவடி!

ஜோதிஜி said...

வணக்கம்

இந்த இடுகையை தமிழ்மண பின்னூட்டத்தில் பார்க்க உதவிய தெகா விற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

எழுதுவதே குறைவு. அதிலும் இன்ட்லியில் இணைக்காமல்? இதென்ன கொடுமை?

உள்ளே இருக்கும் தொலைக்காட்சி துண்டிக்கப்பட்டாகி விட்டதா? வாசல் முதல் உள்ளே இருக்கும் காவலாளிகள் அத்தனை பேர்களையும் இன்றும் நாளையும் பணியாளர்கள் தங்கியிருக்கும் இடங்களில் கூர்மையாக கவனிக்கச் சொல்லுங்க?
வெளியே செல்லும் வாகன ஓட்டிகள் கண்டிப்பாக நிறுவனத்தின் முகவரி அடங்கிய அட்டைகளை வைத்து இருக்கச் சொல்லுங்க? இது போன்ற கட்டளைகள் எதற்காக?

அய்யோ தீ தீர்ப்பு வரப்போகும் சற்று ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஒவ்வொருவரும் பம்பரமாக சுழன்று கட்டளை பிறப்பித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

வியப்பாக இருக்கிறது. அரசியல் ஓரங்க நாடகங்களை கூர்ந்து கவனித்துக் கொண்டுருப்பவனுக்கு மின் அஞ்சல் வாயிலாக தகவல் வாயிலாக இந்தியாவில் உள்ள சிவப்பு பகுதிகள் மற்றும் பிரச்சனைக்குரிய பகுதிகள் என்று உள்துறை அமைச்சகம் கொடுத்த தகவல்கள், மாவட்ட ஆட்சியர் எடுத்துக் கொண்டுருக்கும் தகவல்கள் மாலை மூன்று மணி முதல் ஒவ்வொன்றும் நண்பர்கள் தெரிவித்துக் கொண்டுருக்கிறார்கள்?

வெகுஜனத்திற்கு மறுநாள் காலை வந்து சேரக்கூடிய அத்தனை செய்திகளும் சுடசுடச் வந்து கொண்டுருக்கும் போது இணையத் தொடர்புகள் மற்றும் குறுஞ்செய்தி தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு நம்மை செய்ல இழக்கச் செய்கின்றது.

எதற்காக?

இந்த அய்யோ தீ தீர்ப்பு குறித்து அச்சத்திற்காக.

ஈரோட்டில் இருந்து வந்து சேர வேண்டிய ஓவன் ஆடைத்துறை முஸ்லீம் நண்பர்

வேண்டாம் தலைவா இன்று நாளையும் மட்டும் என்னை விட்டு விடுங்கள். வெளியே எங்கும் செல்லமாட்டேன் என்கிறார்.

இது போன்ற பல நிகழ்வுகள் மதியம் முதல்இரவு வரைக்கும்.

எத்தனை எத்தனை குழப்பங்கள் பாதிப்புகள்?

போராடிக்கொண்டுருக்கும் அல்லது மூச்சு விட்டுக் கொண்டுருக்கும் தொழில் துறைகளின் இறுதிக்கட்ட பொற்காலத்தை எந்த வட நாட்டு ஊடகங்களும் ஊதிப் பெரிதாக்க மாட்டார்கள்.

அவர்கள் புத்திசாலிகள்.

புத்திசாலிகளுக்கு வெகுஜனமும் கஞ்சிக்கு அலையும் தொழிலாளர்களும் முக்கியம் அல்ல. காஞ்சி மடமும் பாபரும் தான் முக்கியம்.

செய்திகளில் சூடு இருந்தால் தானே வியாபாரம் நடக்கும்.

தந்திரங்களால் ஆளப்படும் வரைக்கும் நம் நாட்டில் நிலவும் தரித்திரங்கள் மாறும் என்றா நம்புகிறீர்கள்?

இதை அடித்துக் கொண்டுருக்கும் போதே இந்த நடு இரவில் இணையத் தொடர்பு பல் இளித்துக் கொண்டுருக்கிறது.

ராஜ நடராஜன் said...

//என்னய பொருத்த மட்டில் நவீன வரலாறா (600 வருஷம்) அல்லது புராணக் கதையை மையமாக வைத்து வடித்த வரலாறா என்றால் நான் அண்மைய வரலாற்று பக்கமே நிற்பேன். ஏனெனில் நாம் நிகழ்காலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நிகழ்ந்திருப்பது அடாவடி!//

தெகா!தீர்ப்பு மொத்த பெரும்பான்மையின் நம்பிக்கையின் அடிப்படையிலும் 61 வருட வழக்கு முடிவுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே என நினைக்கிறேன்.

தீர்ப்புக்கு முன் எனது ஆர்வம் அந்த இடத்தில் ராமர் கோயில் இருந்து அதை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதா அல்லது புனைவா என்பதாக மட்டுமே இருந்தது.ஆனால் நீதிமன்ற தீர்ப்புபடி பல ஆண்டுகளுக்கு முன்பே மண்ணோடு மூழ்கியிருந்த இடத்திலேயே பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதும் அதனை டிசம்பர் 6 1992ல் இந்துத்வா சக்திகள் இடித்தது தவறே!

அதே சமயத்தில் மதத்தைக் கடந்து இஸ்லாமிய மதவாதிகள் சிந்திக்க மறுப்பதும் பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தாது.

மக்கள் வாழ்வு செழிக்க இன்னும் பல மாற்றங்கள் தேவைப்படுகிறது.இதனை இந்தியர்கள் கடந்து போகவேண்டும் என்பதே எனது நிலை.

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி!நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி.


முன்னெச்சரிக்கை கட்டளைகள் நான் வரவேற்கிறேன்.இல்லையென்றால் ஒரு புறம் இனிப்பு வழங்கலும் இன்னொரு பக்கம் குண்டுவெடிப்பு செய்தியும் ஊடகங்களை நிரப்பியிருக்கும்.மத விசயத்தில் தென்னகத்தை விட வட மாநிலங்கள் தீவிரவாதம் காட்டுகின்றன.

நேற்றைய தீர்ப்பின் சூழலில் அறிவுஜீவிகளின் விவாதங்களே சிறப்பாக இருந்தது.பிஜேபி சார்பில் உமாபாரதி கொஞ்சம் அடக்கி வாசித்தார்.பிஜேபியில் முக்கியமானவரும்,இந்துத்வா சார்பு வக்கீலுமான ரவிசங்கர் குரல் தொனியும் அறிவுஜீவிகள்,செகுலரிஸ்ட்கள் இந்தியாவை ஆக்கிரமிப்பதே நல்லது என்ற எண்ணத்தை தோற்றுவித்தது.


தேவையில்லாத ஒரு பிரச்சினைக்கே 61 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் போது மக்கள் பிரச்சினையும்,கஞ்சிக்கு அலையும் தொழிலாளர் வாழ்க்கையும் எப்படி தீர்க்கப்படும்?வேகம் போதாது என்றபோதும் Comparatively India is moving forward.இது எந்த prism வழியாகப் பார்க்கிறோம் என்பதை பொறுத்தது.

Thekkikattan|தெகா said...

டிசம்பர் 6 1992ல் இந்துத்வா சக்திகள் இடித்தது தவறே!//

இந்த அடிப்படையிலேயே என்னுடைய பார்வை இருக்கிறது. என்னோட முப்பாட்டன் இந்த இடத்திலதான் வாழ்ந்தாருன்னு திடீர்னு ஒரு நாள் சில தலமுறைகளா வாழ்ந்திட்டு இருக்கிற வீட்டை இடிச்சிப் போட்டு ஆதாரமில்லாத கேசை கோர்டிற்கு கொண்டு வந்து பங்கு போட்டு கொடுக்கிறது என்ன மாதிரியான நியாயம். அதில எப்படி அந்த வீட்டில இன்னிக்கு வாழ்ந்துட்டு வந்தவங்களுக்கு நல்ல தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கின்னு அவ நம்பிக்கை வராம அவங்க ஏத்துக்கிடணும். சொல்லுங்க?

அப்புறமா நாம சாதாரணமா இதனை எல்லாரும் இந்தியர்கள் என்று நீங்க சொன்ன மாதிரி .....இதனை இந்தியர்கள் கடந்து போகவேண்டும் என்பதே எனது நிலை... எடுத்துக்கிட்டு கடந்து போவோம்.

ராஜ நடராஜன் said...

தெகா!எந்தப் பிரச்சினைக்கும் ஒரு முடிவு வேண்டும்.இந்தப் பிரச்சினையின் தீர்ப்பு 8000 பக்கத்துக்கு மேல்.யாரும் முழு தீர்ப்பை படிக்கவில்லை.அதன சாராம்சத்தையே இதுவரை அனைவரும் விவாதிக்கிறோம்.

இதனைத் தொடந்து இன்னுமொரு இடுகையிட்டு முடித்துக் கொள்கிறேன்

smart said...

இந்த இடுகையில் உங்களுக்கு விடை கிடைக்கலாம்