Followers

Monday, December 31, 2012

ஒரு பதிவு உருவாகும் கதை

இந்த பதிவு திடீர்ன்னு முளைப்பதற்கு இரண்டு காரணங்கள்.முதலாவதாக நணபர் ஜோதிஜி வலைச்சரத்தை அலங்கரிக்கும் முகமாக சொல்லியிருந்த பதிவிடும் திட்டமிடல். திட்டமிடல் எதுவுமே இல்லாமல் அப்படியே இங்கே வந்து உட்கார்ந்து கொள்ளும் நம்ம பதிவு ஸ்டைல்.

இரண்டாவதாக தமிழின் தலையெழுத்து என்ற தலைப்பில் விடுதலை தளத்தின் கருத்தும்.தமிழகத்தில் இந்தி,தமிழ்,ஆங்கிலம் மும்மொழி திட்டம் தோல்வியடைந்ததில் திராவிட இயக்கங்களின் பங்களிப்பும்,மாணவர் போராட்டம் வலுவடைந்து மத்திய அரசின் மறுபரிசீலனையில் இந்தியை பின் தள்ளிவிட்டு தமிழ்,ஆங்கிலம் தமிழகத்தை ஆக்கிரமித்துக்கொண்டது. 

கலைஞரின் குடும்ப நலன் அரசியல் இப்போது சந்திக்கு வந்துவிட்டாலும் கூட அவரது ஆட்சிக்கால கல்வி சீர்திருத்தங்களை பாராட்ட வேண்டும்.இந்தி படம் பார்க்க முடியலை,டெல்லியில் எழுத்தர்,தட்டச்சர்,கணக்குப்பிள்ளை வேலைக்கு தமிழர்கள் போட்டி போட முடியவில்லையென்ற  பொதுவான ஆதங்கங்கள் தவிர தமிழர்களுக்கு எந்த வித இழப்புமில்லை.ஆனால் வாரே வாவ் என்று உச்சுக்கொட்டும் இந்தி கவிதைகள்,ஹிந்துஸ்தானி இசை,கஜல் போன்றவற்றை ரசிக்க முடியாமல் போவதற்கு இந்திமொழி புரியவில்லையே என்ற வருத்தம் சரியாக இருக்கும்.,ஒரு மொழி மண் சார்ந்தே உச்சரிக்கப்படுகிறது என்பதற்கு நல்ல உதாரணம் மெட்ராஸ் (சென்னை) தமிழ்,தஞ்சாவூர்,கும்பகோணம் பகுதி தமிழ்,மதுரை,நெல்லை,கொங்கு,ஈழத்தமிழ் எனலாம்.

அது போலவே இந்தி உச்சரிப்பும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகின்றன.நமக்குத்தான் இந்தி தெரியாதே நம்மை விட்டு விடுவோம்.கேரளாவில் ரயில் பிடித்து சந்திரனில் சாயா கடை போடும் சேட்டன்கள்,ஏமண்டி மரியாதை ஆந்திரகாருகள் இந்தி பேசுகிறார்கள்.இவர்கள் இந்தியை பற்றி சொல்வதற்கு முன் சேட்டன் சாயா கடை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்.முன்பு மெட்ராஸில் கார் உபரி சாதனங்கள் விற்கும் காயலாங்கடை மவுண்ட்ரோட்டின் மத்தியில் இருக்கும.அந்தப்பகுதியை இப்பொழுது நவீன சென்னை மின்பொருள் அங்காடிகளாக மாறி விட்டன.

ஆங்கிலப் படம் பார்ப்பவர்களுக்கும்,அமெரிக்க வாழ் தமிழர்களுக்கும் ஸ்கேரேப் எனப்படும் பழைய கார்களை நொறுக்குமிடம் தெரிந்திருக்கும்.வளைகுடா நாடுகளில் யாருமே நடக்க கூடாதுன்னு எழுதாத சட்டம் என்பதால் எங்கும் வாகன மயமென்பதால் பன்னாட்டு கார் உற்பத்தியாளருக்கு நல்ல போணி.பழைய வாகனங்கள் உபரி பாகங்களுக்காகவும்,விபத்தில் காவல் துறை சேமிப்பு கிடங்காகவும் நகரின் எல்லையை தாண்டி இருக்கிறது.கார் ரேடியேட்டர் ஃபேன் மற்றும் நம்ம வழக்கமாக வண்டி பழுது பார்க்கும் பாகிஸ்தானிய பழுதுபார்க்குமிடமிருப்பதால் சென்ற வாரம் செல்ல நேரிட்டது.

அமெரிக்க ஹம்மர் வண்டியிலிருந்து கொரியாவின் ஹுண்டாய் வரை கடை பரப்பியிருக்கும் ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,ஈரான்,சிரியாக்காரர்களில் ஒரே ஒரு சாயா,பரோட்டா கடையொன்று நம்ம இந்திய சேட்டனுடையது.இப்படி உழைப்பை கொட்டும் சேட்டன்களின் இந்தியும் சரி, இந்தி படங்களில் முதலீடு செய்யும் ஆந்திரக்காரர்களின் இந்தியும் சரி இந்திப்பட உலகில் ஒரு நக்கலான நையாண்டி முறையிலே மெதராஸி இந்தி என சித்தரிக்கபடுகிறது.இந்த நையாண்டியின் வரலாறு நம்ம ஆச்சி மனோரமா இந்தி சிரிப்பு நடிகர் மெஹ்மூத் இருவரும் சேர்ந்து நடித்த குன்வாரா பாப்' என்ற படம். (பிரம்மச்சாரித் தந்தை) என்ற இந்தி படத்தில் மெஹ்மூத் இந்தியை உச்சரிக்கும் முறையில் துவங்குகிறதென்பது எனது ஆராய்ச்சி.மாற்றுக்கருத்து இருந்தாலும் உள்வாங்கிக்கொள்ளலாம்.பிரச்சினையில்லை.

 மேலும் தென் மாநிலங்களில் எந்த மாநிலத்தவர்கள் இந்தியை மெஹ்மூத் ஸ்டைலில் உச்சரிக்கிறார்கள் என்று கவனித்ததில் ஆந்திரவாடுகள் உச்சரிப்பு மெஹ்மூத் உச்சரிப்புடம் கொஞ்சம் ஒட்டிப்போகின்ற மாதிரி தெரிகிறது. இப்பொழுதும் என்னை கிண்டல் செய்யும் ஒரு குஜராத்திக்காரன் மெஹ்மூத் ஸ்டைல் இந்தியிலே என்னோடு பேசுவான்:) அவனுக்கு தெரியுமா நம்ம அரை குறை இந்தியே இந்தி படம் பார்த்துத்தான் கற்றுக்கொண்டதென்பது.

சரி!என்னனென்னமோ உளறுவதற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்ன்னா முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் பல மொழி கற்றுத் தேர்ந்தவராம்.கிட்டத்தட்ட பத்து,பதினெட்டு மொழிப்புலமை கொண்டவராம்.
அப்ப தலைப்பின் விகுதி? எந்த மொழியும் உருப்படியா இல்ல.மூக்கும் முழியுமா இருந்த பெண்ணோடு படித்த பிரெஞ்சு முதல் இன்|றைய அரபி வரை எதுவும் நாக்கில் ஒட்டாமல் சொல் தடுமாற்றங்களில் பேசும் போது வீட்டில் வாங்கிக்கட்டிக்கொள்வது மட்டுமே மிச்சம்.எனக்கே இப்படின்னா இப்ப புரியுதா நரசிம்ம ராவ் ஏன் வாயே திறக்கம இருந்தார்ன்னு?அவர் சொல்லிக்கொடுத்த பேசும் நுட்பத்தைத்தான் இப்ப மன்மோகன் சிங் பயன்படுத்துகிறார்.

கொஞ்சம் உளறுகிற மாதிரி தெரியல!இந்தப் பதிவுக்கு முதலில் வைத்த தலைப்பு  நரசிம்மராவின் மௌனமும் என்னோட உளறுவாயும்.

மனம் போன போக்கில் சொல்லியவை எத்தனையென்று இன்னும் எண்ணிப்பார்க்கவில்லை.2012க்கு இதுதான் கடைசி பதிவு.

நன்றாக தமிழ் பேச முயற்சி செய்வோம்:)

அனைவருக்கும் 2012 வாழ்த்துக்கள்.





Wednesday, December 26, 2012

இது கொத்து பரோட்டா அல்ல! நிஜமாவே பரோட்டா!:)

விடாம கொத்து பரோட்டா சாப்பிடற லோகத்துல பரோட்டா பற்றி ஒரு சின்ன ஆராய்ச்சி.நீ ரொம்ப நல்லவன்னு வருடக்கடைசி கிடங்கு கணக்கு சரி பார்க்க ஊர் கடத்தி விட்டதால் அவசரத்துக்கு சேட்டன் கடைக்கு பரோட்டா சாப்பிட போக சாப்பிடும் நேரத்தில் பரோட்டா சாப்பிடுவது உடலுக்கு கெடுதின்னு யாரோ ஒருவர் பரோட்டா மேல் இருக்குற கோபத்தை இணையத்தில் கொண்டு வந்து கொட்டிய நினைவு வர மெய்யாலுமே பரோட்டா உடலுக்கு கெடுதியான்னு யோசனை செய்ய கும்கி யானை மாதிரி பிளிறிக்கொண்டு வந்த எண்ணங்கள் இவை:)

இணைய தேடலில்
ஒரு கருத்தின் மையமாக மைதாவில்

Benzoyl peroxide,
Alloxan .
Artificial colors,
Mineral oils,
Taste Makers,
Preservatives,
SUgar,
Saccarine,
Ajinamotto

போன்ற பொருட்களை கலப்பதாக யாரோ ஒரு மூல ரிஷி சொன்னதையே காபி பூனைகளாக பெரும்பாலோனோர் பரோட்டா செஞ்சு பதிவு என்னுடையதாக்கும் செய்திருக்கிறார்கள்.மேலும் இணையதேடலில் மாவு பேக்டரியில் பணிபுரிந்த ஒரு மேலாளர் மட்டும் கெடுதி ஆதரவு பதிவு ஒன்றில் ஆங்கில வார்த்தைளை கலப்பு செய்வதில்லை என்கிறார்.எப்படியிருந்த போதிலும் இந்திய தரக்கட்டுப்பாட்டுக்கு நான் கியாரண்டி அல்ல.
படம் தேடியதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்டைலில்  பொராட்டா சுடுகிறார்கள்.பரோட்டா லேயருக்காக எனது தேர்வு இது.

அரிசு மாவுல இட்லி, தோசை தினமும் சாப்பிடுவது கெடுதியா இல்லையா?ஜீரண சக்தியோடு ஒப்பிடும் போது இட்லி,தோசை பரவாயில்லை தான்.ஆனால் நம்ம வீட்டில் கல்லூரிக்குப் போகும் நம் சகோதரிக்கு அம்மா இட்லியை அவசரத்துக்கு டிபன் கேரியரில் அமுக்கி வைத்தால் என்னம்மா!தினமும் இட்லியா என தோழிகளோடு பிசா சாப்பிட போய் விடும்.சரி நாம் பொராட்டாவுக்கே வருவோம்.
புரோட்டாவா,பராட்டாவா.பொராட்டாவா என பெரிய சந்தேகம் இருப்பதால் அவ்வபோது புராட்டா,பரோட்டா,பொராட்டான்னு இடையிடையே ப்ளோவுக்கு தகுந்த மாதிரி சேர்த்துக்குவேன் சரியா?.

மேலே சொன்ன ஆங்கில மூலப்பொருட்கள் கலந்திருப்பது உடலுக்கு கெடுதியென்றால் மேலை நாட்டவர்கள் விடாமல் ரொட்டி,,பிஸ்கெட்,கேக் என செய்து சாப்பிட்டு விட்டு திடமாக இருக்கிறார்களே எப்படி? ம்!அவர்கள் நன்றாக உடற்பயிற்சி செய்கிறார்கள் என சிலர் நினைக்கலாம். மிலிட்டரிக்கும்,தொலைகாட்சி சீரியலுக்கும் உடற்பயிற்சி செய்பவர்களோடு நிஜமாகவே உடற்பயிற்சி வாழ்க்கையின் ஒரு பகுதியென அன்றாட வாழ்வில் திணிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பது போக அமெரிக்கா ஓவர் வெயிட் கொலாஸ்டரல் பூமியென நினைக்கின்றேன். இது தவிர Cheese,Burgar,KFC,Fries என வேறு காரணங்களும் கூட..தமிழ் அமெரிக்கர்கள் கம்ன்னு கிடக்காம கருத்து சொன்னா எனக்கு தெளிஞ்சிரும்:)
பிராந்தியை அப்படியே வாயில் ஊற்றினோமான்னு இல்லாமல் கேக்குக்கு நெருப்பு வைக்கும் சதி:)

கேக் செய்தோமா  சாப்பிட்டோமான்னா இல்லாமல் அதில் பிராந்திய வேற ஊற்றி பிளாம்பே ன்னு ஒரு ஸ்டைல் வேற. புபேன்னு நின்னுகிட்டே சாப்பிட ஆட்கள் ஏற்கனவே சில ரவுண்டு வந்திருப்பார்கள் என்பதால் புபேக்களில் பிளாம்பே செய்வதில்லையென நினைக்கிறேன்.

புபே என்றதும் ஒரு செமினார்ல நீச்சல் குளத்து புபே ஒன்தில்  பார்த்த ருமாலி ரொட்டி ஞாபகம் வந்துடுச்சு..வட நாட்டில் ருமாலி ரொட்டின்னு ஒன்று இருக்குது.நாம் வடை சட்டியில எண்ணை ஊத்தி வடை சுட்டா ராஜஸ்தான்காரர்கள் வடை சட்டியை கவிழ்த்துப்போட்டு ருமாலி ரொட்டி சுடுகிறார்கள். புபேயில் ருமாலி மாஸ்டரை ஷோ காட்டும் பந்தாவுக்கு வைத்திருந்தாலும் கூட ருமாலி மாஸ்டர் ரொம்ப விசயம் தெரிஞ்ச ஆளாக இருக்க கூடும்.ஏன்னா ருமாலி ரொட்டியை ஆகாயத்துல தூக்கி வீசிட்டு கெத்தா திரும்பி நின்னுகிட்டார். ருமாலி ரொட்டி காற்றில் ஒரு நடனமாடி கவிழ்த்துப்போட்ட வடைச்சட்டியில் சரியா வந்து உட்கார்ந்துகிச்சு. ஆச்சரியமான அனுபவம்.
 
ருமாலி ரொட்டி கவிழ்த்துப்போட்ட வடைச்சட்டிக்குள் வந்து உட்கார்வதற்கு முன்னால்.ருமாலி ஷெஃப்!நீங்க வித்தைக்காரன் தான்.

சரி மறுபடியும் பரோட்டா ஆராய்ச்சி.

இட்லி மட்டுமே பெயர் மருவாமல் அப்படியே இருக்குது.தோசை,தோசா என வடநாட்டுல பெயர் மறுவுவது போல் இது இந்த வம்பே வேண்டாமென வளைகுடாவில் இதனை சப்பாத்தி என்றுதான் அழைக்கிறார்கள். வளைகுடாவில் பிரபலமான மூன்று உணவுகள் பிரியாணி,பரோட்டா,சமோசா எனலாம். இதில் பரோட்டாவை மற்றும் இங்கே ஆராயலாம். குப்புஸ் என்ற மைதா,அரிசி மாவு கலந்த ரொட்டி காலை,மதியம்,இரவு உணவுகளில் உண்பது போலவே பரோட்டா காலை,மாலை,இரவு என சாயாவோடு கிடைக்கிறது. இதில் முக்கியமாக காலை உணவாக பணீ அவசரத்தில் இருக்கும் பல உழைப்பாளர்களுக்கும்,ருசி காரணமாக அரபியர்கள், எகிப்தியர்கள், பாகிஸ்தானியர்கள் என காலை உணவாக புரோட்டாவே பிரதானம். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்ன்னா குப்புஸ்ல எண்ணை கலப்பு குறைவு.பரோட்டாவில் எண்ணை வளம் அதிகம்.எண்ணைப் பிசு பிசுப்பு கொலாஸ்ட்ரலுக்கு காரணம் என்பதால் பரோட்டா பயமுறுத்தல்கள் எனலாம்.

மேலும் பரோட்டா ஜவ்வு மாதிரி இழுபடுவதால் நார் சத்து குறைவாக,மற்றும் குறைந்த விலை எண்ணை,வெஜிடபிள் ஆயில் என கலக்க கூடுமென்பதால் உடல் கெடுதிக்கான சாத்தியங்கள் இருக்க கூடும்காபி பூனை பதிவர்கள் சொல்லிய இன்னுமொரு விசயம் கேரளத்தைப் பாரு,பொராட்டாவை தடையே செய்துட்டாங்கன்னு இன்ன்மொரு ஆகா!ஓகோ கேரளத்துக்கு.

ஆனால் வளைகுடாவில் இன்னும் பொராட்டாவை வாழவைத்துக் கொண்டிருப்பவர்கள் சேட்டன்மாரே.சரக்கு மாஸ்டர்கள் அப்படியே நுகர்ந்து பார்த்தே சரக்கின் தரத்தை எடை போடும் மது கொனாசியர்கள் போல் பரோட்டா சாப்பிடுவது எப்படி என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு பரோட்டா செய்வது எப்படி என பார்க்கலாம்.

இப்படி ஆராய்சி செய்ததுல பொராட்டாவுக்கான முக்கியமானதும், சரியானதுமான பொருட் கலவை என்னன்னா மைதா, முட்டை, பால், சர்க்கரை, எண்ணை,இத்துணூண்டு உப்பு,கலந்து பிசைய கொஞ்சம் தண்ணீர்.இந்த கலவையில பொராட்டா செஞ்சாதான் நல்லாயிருக்கும்.ஆனால் பால் விற்கிற விலைக்கு பொராட்டா போட்டு கட்டுபடியாகாதுன்னு  அப்படியும் யாராவது பொராட்டா மாவில் பால் கலக்கும் பொராட்டா மாஸ்டர் விசயம் தெரிந்த அனுபவசாலியாக இருக்க கூடும்..பொராட்டா மாவை உருட்டி உருண்டையா எடுத்து தட்டையா செஞ்சா நல்ல பொராட்டாவே வராது.பொராட்டா நுணுக்கமே துணி மாதிரி துணி போட்டு ஊறவைப்பதிலும்(Fermentaion)மாவை துவைச்சு காயப்போடுவதிலும்தான் இருக்குது.

கும்கி படத்துல யானைக்கு கவளம் தருகிற உருவத்துல இருக்கிற பொராட்டா மாவை மெல்லிடையாள் என எஸ்.பி.பி மென்மையா பாடுகிற மாதிரி பேப்பரை சுத்துற மாதிரி பதத்தில் அடிச்சு மிருதுவாக்கி மாவை வட்டமா சுருட்டி வச்சு மறுபடியும் பொராட்டா அளவு செய்து பொன்னிறத்தில் சுட்டு எடுத்து மாஸ்டர் பொராட்டா சூட்டோடு சூடா பொராட்டாவை இரண்டு உள்ளங்கையாலும் ஒரு குத்து விட்டா பொராட்டா சுருள் சுருளா வரணும்.இந்த நுட்பம் பொராட்டா மாஸ்டருக்கு மட்டுமே கை வந்த கலை.

சரி!பரோட்டாவை தமிழகத்தில் கடையில் வாங்கினால் உண்ணும் முறை பெரும்பாலும் அப்படியே பிச்சுப்போட்டு,சால்னா ஊத்தி முழுங்கிடறது.அதிலும் நம்ம சரக்கு அண்ணாத்தைகள் சாப்பிடற கெத்தே தனி. சிரிச்சிக்கிறேன்:)
பரோட்டாவில் கொஞ்சம் சர்க்கரை தெளித்து பாலை ஊற்றி 3 வயதுக்கும் மேலான குழந்தைகளுக்கு ஊட்டலாம்.நம்ம ஊர்ல டீயில் பண்ணை முக்கி சாப்பிடுவது போல் பரோட்டாவுக்கும்,சாயாவுக்கும் ஏகப்பொருத்தம்.

பரோட்டா பெரும்பாலும் காலை உணவாக சாப்பிடுவது நல்லதென நினைக்கின்றேன்.இரவிலேதான் சாப்பிடுவேன்னு அடம் புடிக்கிறவங்க கல்லூரி வயசா இருந்தா தப்பில்ல. முன்பெல்லாம் ரெண்டாம் ஆட்டம் சினிமா பார்த்துட்டு கால்நடையா நடந்தா கோவை அவினாசி ரோட்டில் காசு போட்டா பாட்டைக்கேளு யந்திரத்தோடு பொராட்டாவும்,மட்டன் குருமாவும் ஈரானி ஓட்டல் ஒன்றில் மட்டுமே கிடைக்கும்.
 தூவிய கொத்துமல்லிக்காக பரோட்டாவுக்கு தொட்டுக்க இந்த படம்.

இப்பொழுது எங்கும்,எதிலும் பொராட்டா மையம் என்பதால் பொராட்டாவோடு ஆட்டை சாப்பிட்டாலோ,கோழிதான் பிடிக்குதுன்னாலோ முக்கியமா கவனிக்க வேண்டியது பொராட்டா, குருமா, பாயாவோடு கேரட், வெள்ளரிக்காய், லெட்யூஸ், முட்டைக்கோஸ், தக்காளி,வெங்காயம், எலுமிச்சம் பழம் என பச்சைக்காய்கறிகளையும் சேர்த்தே உண்ணவேண்டும்.குருமிளகு தூள் சேர்த்துகிட்டா இன்னும் ஒஸ்தி,உப்பு பத்தியமில்லாட்டி உப்புச் சிதறல் கூட கொஞ்சமோ கொஞ்சம்.தமிழகத்தில் அத்தனை காய்கறிகளும் விளையுது.ஆனால் பச்சைக்காய் கறியில்லாத உணவாகவே நிறையபேர் உண்கிறார்கள்.தமிழக ஓட்டல்களில் முதலில் தண்ணீர் தருவது மாதிரி உணவு வரும் வரை சாலடை சாப்பிடச் சொல்லும் பழக்கம் வரவேண்டும்.முடியலைன்னா ஒரு கேரட்,தக்காளியை அப்படியே கொண்டு வந்து கடிக்கச்சொல்லியும் கூட புது ஐடியா கொடுக்கலாம்:) 

சமையல்கட்டு அவசரத்துக்கு வெட்டினாலும் கூட எளிமைக்கான தேர்வு.

கேரட் உடலுக்கு நல்லதுன்னுதான் இதுவரையிலும் பலரும் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.முந்தா நாள் ஒருவர் நீரிழிவு நோய்க்காரர்களுக்கு கேரட்  தரவே கூடாதென்றார்.இதற்கும் யாராவது ஆராய்ச்சி செய்தால் பரவாயில்லை.ஏனென்றால் நீரிழிவு நோயில் இந்தியா ஒலிம்பிக்ஸ் தங்கம் வாங்குதாம்.யாராவது ஒன்றை சொன்னால் அதை அப்படியே பின்பற்றும் காபி,பேஸ்ட் நிறையவே இருக்கிறார்கள்.சிந்திக்க மாட்டீர்களா:)

இந்திய மழை,வெயில்,காற்று முக்கியமாக உழைப்பு,யோகா சூழலில் நீரிழிவு நோயில் இந்தியா முதலிடம் என்பது எனக்கு இன்னும் ஆச்சரியமே.குஜராத்திகள் நிறைய இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதால் சர்க்கரைக்கு வேணும்ன்னா மோடியையும் குஜராத்திகளையும் பிடிக்கலாம்:)நாம் ஹார்போஹைட்ரேட்காரர்கள்.கரைத்து விடலாம்தானே!

வேலை வாய்ப்பு,திரைப்படத் துறையில் நுழையனும்ன்னு மெட்ராஸ்,சென்னை போன இளைஞர்கள், கலைஞர்கள் காலை சாப்பாடுமில்லாமல்,மதிய சாப்பாடுமில்லாத நேரமாப் பார்த்து பசி தாங்கிப் பரோட்டா அல்லது காலை உணவு,இரவு உணவு தவிர்த்த புல்மீல்ஸ் மட்டுமே சாப்பிட்ட நீராகார நினைவுகள் இருக்கலாம்.

படமெல்லாம் போட்டு விட்டு சரியான உணவு கிடைக்காத மக்களும் இந்தியாவில் இருக்கிறார்களே என வினவு தோழர்களின் குரலும் மெல்லிதாக காதில் ஒலிக்கிறது. தீர்வுகளுக்கானவர்கள் இந்தியா வறுமைக்கோட்டுக்கும் அப்பால் நகர்ந்து விட்டதென்கிறார்கள்.

தற்போதைய வாழ்க்கை,உணவு மாற்றங்களில் எதை சாப்பிட்டாலும் சாப்பாடு கறைந்து போகும் உடல் உழைப்பு,உடற்பயிற்சி அவசியம்.உடற்பயிற்சிக்கு சிறந்த நேரம் காலை. பார்வையிட்டவர்களுக்கு நன்றி.






Sunday, December 23, 2012

டெல்லி பஸ்ஸில் உயிரோடு பி.சி. ஸ்ரீராமின் வானம் வசப்படும்

தற்போதைய டெல்லி மருத்துவக்கல்லூரிப் பெண்ணின் பரிதாபம் எப்போதோ பார்த்து மறந்து போய் விட்ட ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கிய படம் என்ற ஒற்றை  பிளாஷ் பேக் நினைவை நினைவுக்கு கொண்டு வந்தது.

ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் என்ற பெயர் பலருக்கு நினைவில் இருந்தாலும் அவர் இயக்கிய படத்தை அப்பொழுதே மறந்து விட்டதால் தமிழகம் இப்பொழுது நிச்சயம் மறந்திருக்கும்.எப்படியோ சில புண்ணியவான்கள் ஒளிப்பதிவாளார் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் பெயரை பதிவு செய்த உதவியோடு அவர் இயக்கிய படத்தை தேடினால் வானம் வசப்படும் என்ற சிறு குறிப்போடு  மேலும் இணைய தேடலில் கூகிள் வேற உருப்படியா வேலையிருந்தா பார் சொல்லுது.இறுதியாக கதாசிரியர் சுஜாதா என்ற குறிப்போடு கூடல் தளம் வானம் வசப்படும் திரை விமர்சனம் ஒன்றை பதிவு செய்திருப்பதை கண்டு பிடிக்க முடிந்தது.

யதார்த்தமான கதை,நிகழும் சாத்தியங்களான சம்பவங்கள்,பெயர் தெரியா புதுமுகங்கள் என படம் வந்த வேகத்திலேயே படப்பெட்டிக்குள் போய் படுத்து உறங்கி விட்டது.இப்பொழுதுதான் கற்பனை டெல்லியில் உயிர் பெற்று வந்து விட்டதே!யாராவது படத்தை இணையத்தில் பி.சி. ஸ்ரீராமின் அனுமதியோடு கொண்டு வரலாமே!

முந்தைய திரை கற்பனை இப்பொழுது டெல்லியில் உயிர் வதை செய்கிறது.

Saturday, December 22, 2012

அருணாச்சலம் முருகானந்தம்!

டிஸ்கி : இந்த பதிவு பதினெட்டுக்கும் மேல்  என்ற முத்திரைக்குரியதா அல்லது சமூக அக்கறை முத்திரைக்குரியதா என்பது அவரவருக்கான கருத்துரிமை சொந்தமானது.

சில நல்ல மனிதர்களும்,செய்திகளும் வெளியுலகுக்கு அதிகம் விளம்பரம் இல்லாமல் போய் விடுகிறார்கள்.அந்த வரிசையில் சமூக அக்கறையோடு எந்த ஆணுமே செய்ய இயலாத அரிய சாதனையாளர் பட்டியலில் அருணாச்சலம் முருகானந்தம் அவர்களை குறிப்பிட்டாக வேண்டும்.

இப்பொழுது சானிடரி நாப்கின் பற்றிய விளம்பரங்களும்,விழிப்புணர்ச்சியும் நகர்ப்புறங்களிலும்,படித்த பெண்களிடையே பரவியிருக்கிறது.முந்தைய காலத்தை நோக்கினால் பெண்களுக்கோ வீட்டுக்கு தூரமாக உட்கார்ந்திருப்பது மற்றும் பழைய துணிகள் போன்ற அனுபவங்களே.முருகானந்தம் கல்யாணமான புதிதில் அவரது மனைவிக்கு உதவி செய்ய வேண்டுமென்ற நோக்கிலும் சானிடரி நாப்கின் செலவு அடிப்படை பொருளாதாரத்தோடு இணைந்த ஒன்று என்ற சிந்தனையில் உருவாகிறது மதர் கேர் சானிடரி நாப்கின் ஆராய்ச்சி முயற்சி. சானிடரி நாப்கின்கள் பெரும் முதலீட்டில் பெரும் இயந்திரங்களைக் கொண்டு இயங்கும் ஒரு கார்பரேட் வியாபாரம்.இதனை சிறு தொழிலாக கிராமத்துப் பெண்களும் செய்ய இயலுமா என்ற ஆராய்ச்சி,முயற்சியில் சிறிய அளவிலான வீட்டிலேயே இருந்து கொண்டு இயக்கும் வடிவத்திலான இயந்திரத்தை உருவாக்குகிறார் முருகானந்தம்.

ஆராய்ச்சியின் முதற் கட்டமாக நாப்கின் உருவாக்கியாச்சு.இதனைப் பரிட்சித்துப் பார்க்க அவரது மனைவி,சகோதரிகள்,மருத்துவக்கல்லூரி மாணவிகள் என்று முயற்சி செய்தும் வெற்றி பெற முடியவில்லை. நித்யானந்தா, பிரம்மானந்தாக்களுக்கு படை சூழ பெண்கள் வரும் போது தனது முயற்சிக்கு ஒரு பெண்ணுமே வாலண்டியராக விரும்பவில்லையென நகைக்கிறார். இறுதியில் தானே ஒரு சிறிய கால் பந்தில் ஆட்டு ரத்தம் செலுத்தி அதனை அழுத்தினால் சானிடரி நாப்கின்னுக்கு ஆட்டு ரத்தம் வந்து விழுகிற மாதிரி செய்த பரிசோதனை அந்த மூன்று நாட்கள் எவ்வளவு சிரமத்துக்குள்ளானவை என்ற பெண்கள் மீதான மரியாதையை அனுபவமாகத் தந்தது என்கிறார் அருணாச்சலம் முருகானந்தம்.நிலவில் கால் வைத்த ஆர்ம்ஸ்டாரங்க் மாதிரி இடுப்பில் சானிடரி நாப்கினை கட்டிக்கொண்டு பரிசோதனை செய்த முதல் மனிதன் தானாகத்தானிருக்கும் என்கிறார் முருகானந்தம்.

கோடிகளில் புரளும் கோடிஸ்வரர்கள் இறுதியில் பொதுசேவை,நன்கொடை என்ற இறுதி நிலைக்கு வந்து விடுவதன் காரணம் வாழ்வின் முக்கால் பகுதி காலத்தில் பணத்தை தனது முன் பாக்கெட்டில் வைத்துக்கொள்வதால்தான்.எனவேதான் தான் பணத்தை பின்பக்கத்தில் வைத்துக்கொள்வதாகவும்,தனது ஆராய்ச்சியின் வெற்றியை பெரும் நிறுவனத்துக்கு தாரை வார்க்காமல் கிராமத்துப் பெண்கள் சுயதொழில் முயற்சியில் வெற்றி பெறவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் மட்டுமே மதர் கேர் சானிடரி நாப்கின் சிறுதொழிலை ஊக்குவிப்பதாக கூறுகிறார் முருகானந்தம்.

சித்ரா ஜெயராம் என்பவர் அருணாச்சலம் முருகானந்தம் பெரும் முயற்சிக்கு ஆதரவாக குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளார். Rags to Pad என்ற இந்தப் படம் குறும்பட தயாரிப்பு போட்டியில் அரையிறுதி  வரை வந்துள்ளது.

பதிவுக்கான உதவி TED and vimeo.

குளிக்காமல் இருந்தா?

தாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு  சிவசேனாவாதி அடைமொழி கொடுத்திடாதீங்க:)

உலகில் 2.5 பில்லியன்,ஆப்பிரிக்காவில் 450 மில்லியன்,தென்னாப்பிரிக்காவில் 5 மில்லியன் பேர் குளிக்க முடியாதபடி தண்ணீர் தட்டுப்பாட்டில் இருப்பதாக லுட்விக் மாரிசன் என்ற பல்கலைக்கழக மாணவர் புள்ளி விபரம் தருகிறார்.இதில் தமிழ்நாட்டில் எவ்வளவு பேர் குளிக்க முடியாத சிரமத்தில் இருக்கிறார்கள் என்ற புள்ளி விபரம் யாருக்காவது தெரியுமா? 

குளிக்காமல் இருப்பது எவ்வளவு சுகமான அனுபவம் என்பது தந்தை பெரியாருக்கு மட்டுமே தெரியும் என்பதோடு காவிரி நீர்ப்பிரச்சினையெல்லாம் வரும்ன்னு சிம்பாலிக்காக குளிக்காம இருந்தாரோ என்னவோ?.ஒரு வேளை தமிழர்கள் குளிக்காமல் இருந்தால் தமிழக நீர்ப்பிரச்சினை ஓரளவுக்கு குறையும் வாய்ப்பு இருக்குமா?

முன்பு ஏரி,குளம்,ஆறு,கடல் என நீர் வளத்தில் சற்றும் குறைவில்லாத ஐந்து வகை நில வளங்களோடு யானை கட்டி போரடித்த தமிழகத்திற்கு இப்பொழுது காவிரி நீர் கிடைப்பதில்லையென்பதே உலக நீர்வநீள பற்றாக்குறையின் முதல் அறிகுறி.தமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினையை அழகாக சொன்ன படம் பாலசந்தரின் தண்ணீர் தண்ணீர். இப்பொழுது தா நீர்! தா நீர்.

யாராவது தண்ணீரை விட பெட்ரோல்தான் விலை அதிகம் என்று நினைத்தால் தவறு.அதிக விலை கொடுப்பது தேவை,உற்பத்தியோடு உபரி செலவுகளையெல்லாம் உங்கள் தலையில் சுமக்க வைக்கும் உலக பொருளாதர விலை..எனக்கெல்லாம் ஒரு லிட்டர் பெட்ரோலை விட ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில்தான் விலை அதிகம்.ஒரு லிட்டர் பெட்ரோல் 60/65 பில்ஸ்.ஒன்றரை லிட்டர் மினரல் வாட்டர் 150 பில்ஸ்.
 
தமிழகத்தில் தண்ணீர் தாகம் தீர்ப்பது தவிர தமிழக சமையல் முறையில் அரிசி கழுவுதல்,சாம்பார்,ரசம்,மோர் என அனைத்திலும் பயன்படுகிறது. இதோடு கை கழுவ, சாப்பிட்ட பாத்திரம் கழுவ,கால் கழுவ,முகம் கழுவ என எங்கும் நீர் மயம்.பல்லாண்டு காலமாக தொடர்ந்து வரும் வாழ்க்கை முறையை மாற்றுவதில் சிரமங்கள்,சிக்கல்கள் இருந்தாலும் கூட மனிதர்கள்,குறிப்பாக தமிழர்கள் குளிக்காமல் இருந்தால் எப்படியிருக்கும்? 

பிரெஞ்சுக்காரன் குளிருக்கு கொஞ்சம் வெந்நீரில் டவலை மட்டும் முக்கி உடலை துடைத்து விட்டு பிரெஞ்சு பாத் செய்து கொள்வது இன்னும் கொஞ்சம் நீர் சிக்கனம் என்ற போதிலும் குளிக்காமலே இருந்தால் எப்படியிருக்கும்? அதற்கு முன்னாடி நாம் ஏன் குளிக்கிறோம்ன்னு யோசித்தால் முதல் காரணம் உடல் நாற்றம் தவிர்க்க,இரண்டாவது காரணம் நோய் கிருமிகள் உடலை தாக்காமல் இருக்க.இரண்டு பிரச்சினைகளையும் தவிர்க்க மாற்று வழிகள் இருக்கிறதா?குளிர் பிரதேசங்களான காஷ்மீர், ஊட்டி, வால்பாறை, கொடைக்கானல் போன்ற இடங்களில் வியர்வைப் பிரச்சினை இல்லையென்பதோடு குளிக்க வேண்டிய அவசியமில்லை.அப்படியே குளிக்க நினைத்தால் சுடு நீர், குளிரில் உடை மாற்றம் போன்ற பிரச்சினைகள் உள்ளன..காஷ்மீர்,ஊட்டி குளிரெல்லாம் சினிமா டூயட் பாடலுக்கு மட்டுமே அழகாக இருக்கும்.

எனவே குளிர் பிரதேசத்தில் இருந்தால்,அக்னி வெயில் சென்னையில் இருந்தாலும் குளிப்பதற்கு மாற்று இருக்குது.நமக்கு தண்ணீர் பிரச்சினை போலவே தென்னாப்பிரிக்காவில் ஒரு பக்கெட் குடிதண்ணீர் கொண்டு வர ஒரு மைல் போக வேண்டியிருந்ததோடு குளிப்பதென்பது சிரமம் என்பதோடு முகம் கழுவாமல் இருந்த பல ஆப்பிரிக்க குழந்தைகள் ட்ரெக்கோமா என்ற நோயால் பாதிக்கப்பட்டு கண்பார்வை இழந்துள்ளார்கள்.

குளிப்பதற்கு சோம்பேறித்தனப்பட்ட லுட்விக் மாரிசன் கணினி வசதியில்லாமல் நோக்கியா மொபைல் போனின் இணைய தொடர்போடு விக்கிபீடியா,கூகிள்  என தேடியிருக்கிறார். எது எதுக்கோ மெயில் அனுப்பும் ஆப்பிரிக்கர்கள் இது பற்றி எனக்கு ஒரு ஈமெயில் அனுப்பியிருந்தா ஏனப்பா  லுட்விக் உலகம் முழுதுமா தேடற! இதோ இந்த சுட்டிக்குப் போன்னு  அசின் பிரியர்,புள்ளி விபர நிபுணர்  பெயரை சொல்லியிருக்க மாட்டேனா:)

லுட்விக் இணைய தேடலில் அத்தனை பன்னாட்டு கழிம்பு,கிரிம்   என கண்டுபிடித்ததுதான் உலர் குளியல் கிரிம்.எடுத்து உடம்பு முழுதும் தேய்ச்சால் அன்றைய குளியல் முடிந்தது.லுட்விக் மாரிசன் கண்டுபிடிப்பை  குளிக்க இயலாத நீண்ட விமான பயணம் செய்பவர்களுக்கும்,ராணுவ வீரர்களுக்கும் தரப்படுகிறது.இந்தியாவில் என்னென்னமோ கார்பரேட் கிரிமெல்லாம் வந்தும் கூட உலர் குளியல் கிரிம் எப்படி வராமல் போனது?வியாபாரம் போணியாகாது போயிடும்னு ஜி.எம் நிறுவனம் கண்டு பிடிச்ச எலெக்ட்ரிக் கார்களை திரும்ப வாங்கிக்கொண்ட  கதை மாதிரியாக இருக்குமோ என்னவோ?

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்துலேகா என்ற முடி எண்ணை (ஹேர் ஆயில்) பற்றி ஒருவர் பதிவு போட்டிருந்தார்.சரி!அப்படி என்னதான் இருக்குமென்று பார்த்தால் நம்ம கேரளத்து சேட்டன் யாரோ தேங்காய் எண்ணையோட சில இலைகளையும் சேர்த்து இருப்பார் போல இருக்குது.ஆனால் கொஞ்சம் வேப்பெண்ணை வாடையும் கொஞ்ச நேரத்துக்கு மூக்கை துளைக்கிறது.தலை முடி உதிர்தல் குறைக்குமா என தெரியவில்லை.இன்னும் பரிட்சித்துப் பார்த்து விட்டு பின்பு உறுதி செய்கிறேன்.இதை இங்கே ஏன் சொல்கிறேன்னா அமேசான் காட்டில் விளைந்த இலைகள் கொண்டு தயாரிக்கப்பட்டது எர்வாமெட்டின் என தொலைக்காட்சி விளம்பரங்கள் வர முடி உதிர்தலுக்கு மாற்றாக இந்துலேகா தேங்காய் கலப்பு எண்ணை வருகிறது.

தலைமுடி உதிராம இருக்கணுமின்னா கண்ட கண்ட ஷாம்பு போடுவதை விட தலையைக் கழுவாமல் இருந்தாலே  முடி உதிர்வது குறைந்து விடுமென படித்தேன்.இதுவும் எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல.எப்படியோ நோய்க் கிருமிகள் தோலை தாக்காமலும்,குளிக்காத தைலமோ,கிரிமோ தயாரிப்பது கர்நாடகத்திடமிருந்து தண்ணீருக்கு கெஞ்சுவதை நிறுத்த மாற்று வழிகளையும்,மாற்று வாழ்க்கை முறையையும் உருவாக்கும். நாளைக்கு செவ்வாய் கிரகத்து குடியேறினாலும் கூட தண்ணீர் பஞ்சம் வராத படி குளிக்காமல் இருப்பது உதவியாக இருக்கும்.

பதிவுக்கான கரு: TED

Tuesday, November 20, 2012

பால் தாக்கரே

பால் தாக்கரேயை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் தேவை அரசியல்,இந்தி திரைப்படம் சார்ந்தவர்களுக்கு இருக்கலாம்.ஆனால் நம்மைப் போன்ற சாதாரண இந்திய குடிமகன்களுக்கு தாக்கரேவும் ஒரு சாதாரண மனிதன் தான் என்பதோடு விமர்சன பதிவுகள் சில வெளிவந்துள்ளது வரவேற்க தக்கது.

நேற்று சேட்டைக்காரனுக்கு பின்னூட்டம் போடும் போது கூட பம்பாய்,மும்பாய் மீதான பால் தாக்கரேவின் தாக்கங்கள் என்ற அளவிலே கருத்து சொல்லியிருந்தேன்.ஒரு தனி மனிதனாகவும்,அரசியல் பதவிகள் இல்லாமலும் கூட மராட்டிய மக்களை,அதிலும் குறிப்பாக பம்பாய்-மும்பாய் மராட்டிய மக்களை தன்பால் ஈர்த்த வசீகர வலிமை தவிர ஒரு காட்பாதர்க்கான பயம் மட்டுமே தாக்கரேயின் பலம் எனலாம்.

 கால வெள்ளத்தில் தென்னிந்தியர்களுக்கு எதிராக மதராசி வெளியே போ என பம்பாய் மராட்டியர்களை ஒன்று திரட்டிய கலவரத்தில் தாராவி வர்தா பாய்,இன்னும் கேரளத்து சேட்டன்களின் எதிர் தாக்குதலில் பால் தாக்கரேயின் கோசம் வெற்றி பெறாமல் இன்றும் தாராவி தென்னிந்தியர்களில் குறிப்பாக தமிழர்களின் வாழ்விடமாகவும்,இந்தியாவின் மிகப்பெரிய சேரியாகவும் விளங்குகிறது.சேரியாக இருந்தாலும் மும்பாய்க்குள் நிகழும் மைக்ரோ பொருளாதார வளம் கொண்டது தாராவி.1960-70 பதுகளில் இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்பட்ட பம்பாயின் மில் தொழிலாளிகளின் போராட்ட பின்னடைவுக்கும்,கேரளா,வங்காளம் போல் கம்யூனிசம் வளர்வதற்கான அத்தனை கூறுகள் இருந்தும் கூட கம்யூனிசத்தை பின் தள்ளி சிவசேனா வளர்ந்ததற்கு தாக்கரே என்ற பெயர் சொல்லே காரணம்.

பிஜேபியின் இந்துத்வா வளர்ந்த காலத்தில் இந்து முஸ்லீம் பிரிவினையை பாம்பேயில் தூண்டியதற்கு சிவசேனா ஒரு முக்கிய காரணம்.வர்தா பாயை வேலு நாயக்கர் என  நாயகனில் பெயர் மாற்றம் செய்த இயக்குநர் மணிரத்னம் சூழல்கள் அறிந்து பம்பாயின் முதல் கலவரத்தை தொடாமல் போனாலும் கூட பம்பாய் படத்தில் தாக்கரேயை மெல்லியதாய் தொட்டதில் இயக்குநர் மணிரத்னத்துக்கு பயமுறுத்தல் வந்ததாக செய்திகள் கசிந்தன.கசிந்த செய்தியை விடவும் தமிழக இஸ்லாமிய சகோக்கள் கதாநாயகி மனிஷா கொய்ராலாவை முஸ்லீம் பெண்ணாக உருவகப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து மணிரத்னம் வீட்டில் கல்லெறிந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள்.கல்லெறிந்து எதிர்ப்பு காட்டுவதிலிருந்து இப்பொழுது துப்பாக்கி சென்சார் போர்டாக பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறார்கள்.உண்மைகளை அப்படியே முன்வைப்பது மட்டுமே இந்த பதிவின் நோக்கமென்பதோடு மீண்டும் தாக்கரே பக்கம் திரும்புவோம்.

முந்தைய காலகட்டத்தில் கிரிக்கெட் மீதான வெறித்தனமென்பது இந்தியா-பாகிஸ்தான் விளையாடும் போது மட்டுமே என்பதை சொல்லித் தெரிவதில்லை.முன்பு போல் கிரிக்கெட் பார்ப்பதில் மஜா இல்லையென போன மாதம் ஒரு பாகிஸ்தானிய நண்பர் புலம்பிக் கொண்டார்.இரு நாட்டு அரசியல் செயல்பாடுகள் சாதாரண மனிதர்களை எப்படி பாதிக்குமென்பத//ற்கு முந்தைய இந்தியா,பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தாக்கமும்,வாஜ்பாய் அரசு ரயிலு விட்டும்,முஷ்ரப் டெல்லி வந்தும்,காஷ்மீர் பிரச்சினை கொஞ்சம் பிசுபிசுத்த பின் இப்பொழுது thaw (பனிக்கட்டியிலிருந்து உருகிய நிலை) ஆகிப் போனதால் கிரிக்கெட்டின் முந்தைய நிலை இப்பொழுது இல்லை.தாக்கரே மும்பாய்க்குள் பாகிஸ்தானியரை விளையாட விட மாட்டோம் என்ற அறைகூவல் சரியானதா தவறானதா என்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது என்ற போதிலும் முந்தைய சூழலில் தாக்கரேவுக்கான துணிச்சல் என்பதோடு கிரிக்கெட் சார்ந்து பெரிதாக எதுவும் பிரச்சினை வளரவில்லையென்பது பாராட்ட தக்கது.

இன்றைக்கு சமாதி புகழாரம் அரசியல்வாதிகள் பலர் பாடினாலும் கூட தாக்கரேவின் நீதிமன்ற வாரண்டு புறக்கணிப்பெல்லாம்  இந்திய இறையாண்மையை கேலி செய்வதாகவே இருந்தது.சத்ரபதி சிவாஜி, விடுதலைப்புலிகள் ஆதரவு,ஹிட்லர் பற்றிய புகழாரம் போன்றவை பல விமர்சனங்களுக்குட் பட்டதாயினும் வலிமையான ஆளுமையை தாக்கரே விரும்புகிறார் என்பது மட்டும் புரிகிறது.

இதுவரை சொல்லி வந்தவை முன்கதை சுருக்கம் மட்டுமே.மெயின் கதை என்னன்னா மும்பாய் பெண்களின் பேஸ்புக் கருத்து துணிவு.உண்மையான பெண் கல்வியென்ற வெளிப்பாடு இதுவே.அதிலும் இஸ்லாமிய சமூகத்திலிருந்து கொண்டு ஒரு பெண்ணின் கருத்து வெளிப்பாடு சுற்றுசூழலில் பாதிக்கப்பட்டோ அல்லது கேள்வி ஞானத்தாலோ இப்படியானதாகத்தான் இருக்க முடியும்.இஸ்லாமிய குண்டு வெடிப்பு தீவிரவாதங்கள் எப்படி இந்திய இறையாண்மைக்கு தீங்கானதோ அதுபோலவே சிவசேனாவின் இந்து இஸ்லாமிய பிரிவினையும். நம்ம பதிவுலக சகோக்கள் போல் பெயர்சொல் காரணமான ஆதரவும்,எதிர்ப்புமென்பதல்ல,.சரியானது எதுவாக இருக்க முடியும் என்பதே நமது நிலைப்பாடு.அந்த விதத்தில் அனைவருக்குமான கருத்துரிமை பேஸ்புக் கருத்து தெரிவித்த பெண்ணுக்குமுண்டு..கருத்து தெரிவிப்பது பொது வெளியில் நடமாடுபவர்களுக்கு எதிரானது என்றால் இணைய வளர்ச்சியை இந்தியாவில் முடக்கி விடலாம்.இல்லையென்றால் சுதந்திரமான கருத்துக்கள் வெளிவரவேண்டும்.

Tuesday, November 6, 2012

Me oppose present I-T Act 66A, Demanding change on it

ஒவ்வொருவரின் எண்ண வெளிப்பாட்டின் விகிதம் வித்தியாசப்படுகிறது.அதன் காரணமாகவே சார்ந்தும்,சாராத பதிவுகளும்,பின்னூட்டங்களும் இணையதள பகிர்வாக அமைகின்றது.என்னைப்பொறுத்த வரையில் எனது கருத்து வெளிப்பாடுகளை விட யார் என்ன சொல்கின்றார்கள் என்பதை உள்வாங்கிக் கொள்ளுவதையே முதன்மை படுத்துகிறேன்.தற்போதைய பதிவுலக விவாதங்கள் பலரின் மனதிலும் ஒரு திருப்பத்தையும், வேண்டாம் ஆணி என்ற சிந்தனையையும் தோற்றுவித்திருக்கும்.பணி,குடும்பம்,பதிவுகள் என்ற முக்கோணத்தில் பதிவுகளுக்கான கால நேரத்தை அதிகம் ஒதுக்க முடியாத முந்தைய தருணங்களில் வெறுமனே பார்வையாளனாக மட்டும் இருந்து விடலாமே என்று தோன்றியதுண்டு.

ஆனால் தற்போதைய சூழலில் ஒதுங்கி கொள்ளலாமே என்ற யோசனையை விட இது எதுவரை போகும் தூரம் என்ற எண்ணமே வலுவாக நிற்கிறது.பதிவுலகில் முதல் அடி எடுத்து வைக்கும் போது விட்டுப்போன தமிழை தொட்டுப்பார்க்கலாமே என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.அடுத்து பின்னூட்டங்களின் பல பரிமாண கவர்ச்சி பதிவுலகில்  சிக்க வைத்தாலும் கூட  தொடர் நடையில் சமூக ரீதியாக என்னை பாதித்த விசயங்கள் இரண்டு.ஒன்று ஈழப்போராட்டமும்,அதனோடு தொடர்புடைய தி.மு.கவின் ஆட்சி முறையும்.தி.மு.க பற்றி சொல்வதாலேயே தற்போதைய அ.தி.மு.கவுக்கான அங்கீகாரமென்று பொருளில்லை.இப்போதைய ஆட்சி சூழலை திருப்பி போடும் வலு ஜனநாயக தேர்தல் என்ற ஆயுதத்திலும் மக்கள் மறதி என்ற குணத்தாலும் மாறிப்போகலாம்.ஆனால் வரலாற்றை திருப்பி போட முடியாத நிகழ்வின் ரணங்களை மாற்றும் சக்தி ஒட்டு மொத்த தமிழர்களுக்குமில்லாத சோகத்தை எங்கே புலம்புவது?

இன்னொரு புறம் இந்திய அரசியல் கோமாளித்தனங்களும்  அதனால் வருங்கால சந்ததிகளின் பாதிப்புக்கான கவலையும்,உலக நாடுகளின் சுயநலங்கள் மட்டுமே கலந்த வியாபாரத்தனமும் நோக்கும் போது எவையும் என்னோடு சக்திக்கு அப்பாற்பட்ட விசயமே என்ற போதிலும் மனதில் தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்த கிடைத்த ஒரே ஆயுதம் பதிவுகள் மட்டுமே.சமூகம் எப்படியோ நாசமாகப் போகட்டும் என்று ஒதுங்கிக் கொண்டால் நுகர்வு கலாச்சாரத்துக்கென பலவழிகள் இருக்கின்றன.ஆனால் கருத்து வெளிப்பாடுகளுக்கு ஏதாவது ஒரு விதத்தில் பொருள் இருக்கிறது.குறைந்த பட்சம் பின்னாளில் சொன்னதை எடை போடும்,அசை போடும் அனுபவமிருக்கிறது.

மேலே சொன்னது போல் விட்டுப்போன பழக்கமான வாசிப்பே முதன்மையென்பதாலும் தினத்தந்தி,குமுதம் என்ற அரிச்சுவடிகளிலிருந்து இலக்கிய வாசம் வரை கொஞ்சமோ கொஞ்சம் முதிர்ச்சியடைந்து இப்போதைய இணையகாலத்தில் பொது ஊடகங்களை நோக்கும் போது வியாபாரமும்,சார்பு நிலையும் மட்டுமே முதன்மையாக நிற்பதால் நீ சொல்!நான் கேட்கிறேன் என்றும் சமரசம் செய்ய முடியாத சூழலில் ஜார்ஜ் புஷ் சொன்னமாதிரி இரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால்.....
பதிவுலக இரண்டு பெருசுக பதிவை அப்படியே ஒத்தி எடுத்து  ஒட்டவெச்சுடலாமென்றுதான் பார்த்தேன்.அப்புறம் தட்டச்சு செய்தவுடன் பதிவு இப்படி பிரசவமாகி விட்டது.அதனால் பெருசுகளை இணைப்பில் கட்டிப்போட்டுவிட்டேன்.


பெருசு 2: http://vovalpaarvai.blogspot.com/

சுருக்கமாக ரவி சீனிவாசன் என்ற அறிமுகமேயில்லாத அடக்கி வாசித்த பதிவருக்கும் குரல் கொடுக்க வேண்டிய அவசியமிருப்பதால்

நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம்.
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்.


Saturday, September 22, 2012

பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதாரக் கொள்கைகள்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் சமீபத்திய பொருளாதாரக் கொள்கைகளான டீசல் விலை உயர்வு,சிறு வியாபாரங்களில் அன்னிய முதலீடு போன்றவற்றிற்கு நிறைய எதிர்ப்புக்கள் தென்படுகின்றன.மன்மோகன் ஒரு சிறந்த பொருளாதாரவாதி ஆனால் மோசமான அரசியல்(தெரியாத)வாதின்னு சொன்னதுக்கு கீச் கீச்ன்னு  வவ்வால் கத்தியது நினைவுக்கு வருகிறது.:)
இப்பவும் நான் அந்த வாதத்தில் உறுதியாக இருக்கிறேன்.

1990களின் பொருளாதார மாற்றங்கள் இன்று வரையிலும் இரண்டு விதமாக நன்மையும் தீமையும் கலந்து இருந்தாலும் கூட சீனாவுடன் பொருளாதாரத்தில் போட்டி போடும் நாடாக உயர்த்தியது..அதில் சரிவுகள் நிறைய என்பது வேறு.இந்தியா மெதுவாக அவசரப்படாமல் ஆமை மாதிரி பொருளாதார வேகத்தில் நகர சீனா எட்டுக்கால் பூச்சியாய் ஓடி ஆமையை எட்டுக்கால் பூச்சியே வென்றது.இருந்த போதிலும் உலகம் தழுவிய பொருளாதார மந்தநிலையில் இந்தியா ஓரளவுக்கு தாக்குப்பிடித்து வந்துள்ளதும் உண்மை.

பிரச்சினைகளுக்கெல்லாம் வாய்மூடி பரிதாபமாக பார்க்கும் பிரதமர் பொருளாதாரம் என்றவுடன் இது நம்ம பேட்டைன்னு பணமென்ன மரத்திலா காய்க்கிறது என நேற்று வாய் திறந்து விட்டார்.பிரதமர் வாய் திறந்த ஒரே காரணத்துக்கான ஆதரவே இந்தப் பதிவு.டீசல் விலையை ஏற்றாவிட்டால் வரவு எட்டணா செலவு பத்தணா என்ற சூழலுக்கு வந்து விடும் என்பதாலும் இரண்டணா அதிக செலவை ஈடுகட்டவே சிறுதொழில் அந்நிய முதலீட்டைக் கொண்டு வருவதாகவும் மன்மோகன் சிங்கின் வாதம்.

பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயம் நிரந்தரமானதல்ல.உலகின் எந்த ஒரு அசைவும்,சலசலப்பும் பெட்ரோலிய பொருட்களின் விலையை பாதிக்கும்.இதற்கு சமீபத்து உதாரணம் சொன்னால் ஒரு டாலருக்கு உதவாத சாம் பாசில் என்ற நகுல பாசில் எடுத்த முஸ்லீம்களின் அறியாமை ட்ரெய்லர் கூட பார்க்காத நியாயமான போராட்டம் ட்ரெய்லர் சொல்வது சரிதான் என்பது மாதிரி வன்முறையாக மாறிய நிகழ்வும் கூட பெட்ரோலிய விலையை பாதிக்கும்

.மக்களின் போராட்டங்கள் மட்டுமல்ல,அமெரிக்கா லிபியாவுக்கு 2 ராணுவக்கப்பலை அனுப்புகிறேன்ன்னு அறிக்கை விட்டாலும் விலை எகிறும்.பிரெஞ்சுக்காரன் கார்ட்டூன் போட்டாலும் சரி! கிரிஸ் பொருளாதாரம் சரிந்தாலும் சரி விலை நிர்ணயம் ஆடுபுலி ஆட்டம்தான்.டீசல் உபயோகிப்பாளர்கள் காசு இருக்குற ஆசாமிகள்தான் எனவும் பெட்ரோல் மக்கள் அதிகம் உபயோகிப்பதை மனதில் கொண்டு விலையேற்ற வில்லையென்றும் மன்மோகன் சொல்கிறார்.

மேலோட்டமாக பார்த்தால் இது சரிதான் என்று தோன்றினாலும் பொருட்களை கொண்டு செல்லும் லாரி உரிமையாளர்கள் டீசல் விலை ஏறினால் ஒரு லோடு பொருளுக்கான விலை,இதர செலவுகளையும் ஏற்றி விடுவார்கள்.இந்த விலையேற்றம் மறுபடியும் உபயோகிப்பாளர்களான மக்கள் மீதே மறைமுகமாக சுமத்தப்படும்.தங்கம் எவ்வளவு விலை உயர்ந்தாலும் மக்கள் வாங்குவதைப் போல் நுகர்வுப் பொருட்கள் எவ்வளவு விலை அதிகமானாலும் மக்கள் வாங்கியே தீர்வார்கள்.இன்று  ஏழைகள் ஆயிரங்களிலும்,நடுத்தர வர்க்கம் லட்சங்களிலும்,பணக்காரர்கள் கோடிகளிலுமே பேசுகிறார்கள்.

அத்தியாவசிய தேவைகள்,தேவைகள்.ஆடம்பர தேவைகள் என்ற மூன்று நுகர்விலும் மக்களின் வாங்கும் சக்தி இன்று அதிகரித்துள்ளது.இதனை மனதில் கொண்டே பொருளாதார மாற்றங்கள் சலசலப்பை உருவாக்கினாலும் காலப்போக்கில் மக்கள் பழகிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் பொருளாதார மாற்ற கொள்கையை அரசு கையில் எடுத்துள்ளது.

அந்நிய முதலீட்டு சூப்பர் மார்க்கெட்டையெல்லாம் ஏற்கனவே நீரோட்டமிடப்பட்டு விட்டன.மொரார்ஜி தேசாயின் கோகாகோலாவுக்கான எதிர்ப்பையும் மீறி மறுபடியும் கோகாகோலாவும்,பெப்சியும் திரும்ப வந்து விட்டன.சாரு போகின்ற ஓசி ஐந்து நட்சத்திர பாரில் கோக் கலந்து விஸ்கி அடிப்பதெல்லாம் பேஷா பேசனாகிய மாதிரி சரக்குக்கும் கோக்,பெப்சி கலந்து குடிக்கும் அண்ணாத்தைகளுக்கு விஸ்கிக்கு பக்கவாத்தியமே சோடாவும்,ஐஸ் விரும்பினால் லெமன் சிலைஸ் ஆன் த நெக் என்பதை யாரும் சொல்லித்தருவதில்லை.

எல்லாமே மெல்ல மெல்ல பழகிப்போகும் என்பதோடு சிறுதொழிலில் அந்நிய முதலீடு இன்னும் பல நுகர்வுப்பொருட்களை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தும் என்பதோடு அந்நிய முதலீட்டுக் கொள்கையை சோதித்து பார்த்தே விளைவுகளை இனியும் பேசமுடியும்.

பிரதமர் மன்மோகன் சிங் மக்கா அல்லது கொக்கா என்பதை அடுத்து வரும் பி.ஜே.பியின் ஆட்சி காலத்தில் அசைபோடுவோம்.

ஒரே மன்மோகன் புகழ் பாடுற மாதிரி இருக்குதேன்னு சிலர் புலம்புவார்கள் என்பதால் இம்புட்டு பொருளாதார கொள்கை பற்றியெல்லாம் அக்கறைப்படும் பிரதமர் ஸ்விஸ் பேங்கில் இருக்கும் பணத்தையெல்லாம் வாய் திறப்பதேயில்லையே என்பதையும் சொல்லி வைப்போம்.கல்லுளி மங்கன் பிரணாப் எப்படியோ ஜனாதிபதி பதவியில் உட்கார்ந்து கொண்டு தப்பித்து விட்டார்.சிதம்பரத்தின் பெயரும் ரப்பர் ஸ்டாம்ப் ஒட்டி ஸ்விஸ் வங்கிக்காரன் முடக்கி வைத்துள்ளதாக நேற்று சாய்ராம் பதிவொன்றில் பார்த்தேன். இந்தியாவின் ஸ்விஸ் சேமிப்பு மட்டும் 56% என முதலிடத்தில்.ரஷ்யாக்காரன் 18% என இரண்டாம் இடத்தில்.மற்ற நாடுகள் அனைத்தும் குட்டி பயில்வான்கள்தான்.இதையெல்லாம் திரும்ப கொண்டு வரவும் மன்மோகனை வலியுறுத்துவோம்.

சாத்வீகமான போராட்டங்கள் எந்த பலனையும் அளிப்பதில்லை.போராட்டங்கள் மக்களின் உணர்வுகளைக் கொட்டும் ஒரு வடிகாலாக மட்டுமே தென்படுகிறது.ரோடு சரியில்லை,குழாயில் தண்ணீர் வரவில்லை,மணலை அள்ளிக்கொண்டு போகிறான் ,மின்சாரமில்லை என்ற் நியாயமான போராட்டங்களாகட்டும்,காவிரி நீர்,ராஜபக்சே நேற்று சாஞ்சியில் ஓதிய அகிம்சை வேதாள குரலுக்கு எதிராக வை.கோவும் ஏனைய தோழர்களும் மாநிலம் கடந்து சென்ற போராட்டமாகட்டும் அரசு இயந்திரம் மயிரே போச்சுன்னுதான் இயங்கிக்கொண்டிருக்கிறது.

தொட்ட தொண்ணூறுக்குமான போராட்டத்தை நிறுத்துவது முக்கியமென படுகிறது.போராட்டமற்ற  வாழ்க்கையாவது சுபிட்சத்தைக் கொண்டு வருகிறதா என பரிட்சிப்போம்.அதுவும் மக்கள் வாழ்க்கையில் வசந்தத்தை தரவில்லையென்றால் இந்திய தலைவிதியை நிர்ணயிக்கும் ஒரே ஒற்றைப் போராட்டத்தில் இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றுவது அவசியம்.

Thursday, September 20, 2012

(பதுமை) புதுமை ஹிஜாப் (பர்தா) பெண்!

சி.என்.என் தற்போதைய சூழலுக்கேற்றவாறு கொஞ்சம் மசாலா சேர்த்துடுச்சான்னு தெரியல.ஆனால் ஈரானின் கிராமம் ஒன்றில் கலாச்சாரப் போலிஸ் பணி செய்யும் மத போதகர் ஒருவர் மயக்கமாகி மருத்துவ மனைக்குப் போனது மட்டும் உண்மை.நடந்தது என்ன?இதைப்படிப்பவர்களுக்கு ஒன்று சிரிப்பு வரவேண்டும்.இல்லாட்டி எரிச்சல் வரவேண்டும்

கிளரிக் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஈரானிய போதகர் ஹஜடோலிஸ்லாம் அலி பிகெஸ்டி (Hojatoleslam Ali Beheshti) வழிபாட்டுக்கு செல்லும் வழியில் கண்ட இரு பெண்களை முழுக்க முகத்தை மூட சொல்லி நமது ஊரில் விண்ணப்ப படிவத்தில் போடும் சொல்லான மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொண்டும் கூட இரண்டு பெண்களில் ஒருவர் வேணுமின்னா நீங்க உங்க கண்ணை மூடிக்கொள்ளுங்கள் என்று சொல்ல இதனால் தான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்த ஹெஸ்ட்டி மறுபடியும் முகத்தை மூடச்சொல்லி அருகில் செல்ல கோபமடைந்த பெண்கள் போதகரின் ஆடையைப் பற்றி இழுக்க நிலை தடுமாறி கீழே விழுந்த போதகருக்கு அப்புறம் என்ன ஆனோம் என்று தெரியவில்லையாம்.பாதி மயக்கத்தில் பெண்கள் உதை கொடுத்து அவரை திட்டுவது மட்டுமே கேட்டதாம்.

மூன்று நாட்கள் கழித்து மருத்துவமனையிலிருந்து திரும்பிய ஹெஸ்ட்டி இதுவரை காவல்நிலையத்தில் குற்றம் சுமத்தவில்லையாம்.ஆனால் இஸ்லாமிய ஹிஜாப் மரபைக் காக்க வேண்டி கிராமத்து நாட்டாமை இது பற்றி விசாரணை செய்தாலும் தனக்கு ஆட்சேபனையில்லை என்கிறார் ஹெஸ்ட்டி.
பெரும்பாலும் நகர்ப்புறங்களில்தான் இந்த மூடு வேலைகள் நிகழுமென்றும் கிராமப்புறங்களில் இது போன்று யாரும் அறிவுறுத்துவதில்லையென்றும் அரசு சார்பு மெகர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

Monday, September 10, 2012

பகிர்தலும் நன்றே - TED ideas worth spreading

பனிப்போருக்கு அப்பாற்பட்ட மாற்றமாக சோவியத் உடைந்ததும்,ஜெர்மன் சுவர் வீழ்ந்ததையும் விடவும்  உலகின் 21ம் நூற்றாண்டின்  புரட்சியாக தகவல் தொழில் நுட்பமும் இணையம் சார்ந்த மாற்றங்களுமே முக்கியமானவை.(தலைப்பு இன்னும்  ஒரே கன்பூசன்னா இருக்கே:))

இது வரையிலும் மேசைக்கணினி,மடிக்கணினி என்ற நிலையிலிருந்து கணினி திரையுடன் கூடிய மூடித்திறக்காதவாறு கணினி திரை,தட்டச்சு கீபோர்டு ,எலிக்குட்டி என மூன்றும் தனித்தனியாக வயரும் வேண்டாம் கயிறும் வேண்டாம் என புதுக்கணினிகள் எட்டிப்பார்க்கின்றன.

இதை விட  காணொளிகள்,வீடியோ,தொலைக்காட்சி போன்றவைகளைக் காண கணினியே தேவையில்லையென்ற இணைய தொடர்புகள் கூடிய Sling box,Tivo,Roku என பல சாதனங்கள் சந்தைக்கு வந்து விட்டாலும் இவை அமெரிக்காவின் நுகர்வை ஒட்டியே கிடைக்கிறது. மற்றவர்களுக்கும் மாற்று வழிகள் சிலவும் இருக்கின்றன.இதனையெல்லாம் தொட்டால் பதிவு இன்னும் நீளமாகப் போய்விடும் என்பதோட நாடுகளின் சட்ட சிக்கல்கள் என்பதால் தற்போதைக்கான தேவையாக கணினி சார்ந்தே இயங்குவதும் தேடல் தேடி அலைவதும் ரசனை சார்ந்து மட்டுமல்ல புதிய சிந்தனைகளை நோக்கி செல்ல TED பற்றி பேசுவோம்.



அமெரிக்காவின் போர் முக கெட்ட குணங்களுக்கு மாற்றாகவும் உலகின் அடுத்த தலைமுறைக்கு எதையாவது விட்டுச்செல்ல வேண்டும் என்ற நோக்கிலும் மேற்கத்திய சிந்தனைகளோடு பலர் இருப்பதை காணமுடிகிறது.நாம் பெரும்பாலும் அரசியல், பொருளாதாரம்,சமூகம்,மதம்அறிவியல் சார்ந்தே சிந்திக்கிறோம். இங்குமங்கும் சில சலசலப்புக்கள் உருவானாலும் கூட திரட்டிகளும்,பிளாக்கர்களும் கருத்து பரிமாறல் என்ற எல்லையை நோக்கியே பயணம் செல்கிறார்கள்.
 
நாம் வலையர்களாக தினமும் தட்டச்சி பேசிக்கொள்வதைப் போல் ideas worth spreading என்ற வாசகங்களோடு TED என்ற குழுவும் நேரில் பேசிக்கொள்கிறார்கள். TED குழுவினர் மதம்,தேசம்,பணம் என்ற எல்லைகளைக் கடந்து உலகின் புதிய சிந்தனைகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.கேபிடலிச,கம்யூனிச,சோசியலிச கொள்கைகளின் நிறை குறைகள் அலசுகிறார்கள்.உலக மயமாக்கல்,ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் சீனா எப்படி இந்தியாவை முந்திக்கொண்டது எனவும் மனித உரிமைகள்,ஜனநாயகம் சார்ந்து சீனா இன்னும் பின் தங்கியிருப்பது போன்றவையெல்லாம் பேசப்படுகின்றன. 

எகிப்தின் அரேபிய வசந்தத்தில் அல்ஜசிரா தொலைக்காட்சியின் நேரலை பங்கு பற்றி அலசப்படுகிறது. TED குறித்த தேடலில் இந்த குழு பற்றி ஏற்கனவே சிலர் அறிந்திருக்கிறார்கள்.அவர்களுக்கான சுட்டி,காணொளி,தமிழில் இதனைக் கொண்டு வந்து விடவேண்டுமென்ற ஆர்வலர்கள் சிலர் இருப்பதையெல்லாம் பிள்ளையாண்டான் என்பவர் பதிவு செய்திருக்கிறார்.நம்ம கே.ஆர்.பி செந்திலும் TED பற்றி அவரது தளத்தில் பேசியிருக்கிறார்.ஆனால் இவை பரவலாக போய்ச் சேரவில்லையென்பதை உணரமுடிகிறது.

    (புதிய மத அடையாளக் குறியீடுகள்)
மத அடையாளங்களை தமது பாரம்பரிய நம்பிக்கைகள் என்ற அளவிலும் பல தனி மனிதர்களை நல்வழிப்படுத்த உதவும் ஊன்று கோல் மட்டுமே என்பதை உணர்ந்து கொண்டு கோள்களின் உருவாக்கம்,முதல் செல், நியாண்டர்தால்,ஹோமோசெபியன் என்பதன் தொடராகவே இன்றைய மனிதன் என்பதை காணொளிப் பிரியர் சகோ.சார்வாகன் தமிழில் அழகாக வைத்தாலும் கூட நம்பிக்கை பழக்கத்தில் அதனை ஏற்றுக்கொள்ள பலருக்கும் விருப்பமின்மை மனரீதியானது.அறிவியல் உண்மைகளை வெறுமனே வெளிப்படுத்தி விட முடியாது.அதற்கான ஆதாரங்கள்,ஜர்னல் தியரி, உறுதிபடுத்தல் என பலவும் அடங்கியுள்ளன.அதன்படி ஹோமோ ஹேபிலிஸ் என்ற குரங்கின் வழியே இன்றைய மனிதன் என்பதையெல்லாம் TED குழுவில் பேசப்படுகிறது.TED குழு சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்றால் ஒவ்வொரு துறை வல்லுனர்ளும் ஆய்வு செய்பவர்களுமே உலகளாவிய அளவில் சாதனை படைத்தவர்கள் மட்டுமே கருத்து பகிர்வு செய்கிறார்கள்.

(தலைப்பு பிள்ளையார் பிடிக்க குரங்கான கதைன்னு இகி...இகி க்க வேண்டாம்.நம்ம தாத்தாவுக்கும் தாத்தா ஹோமோ ஹெபிலிஸ் இவர்தானாம்!நம்பினால் நம்புங்க)
பரிணாமம் சார்ந்து மட்டுமல்ல சமூகம், பொருளாதாரம், அரசியல், கல்வி, விவசாயம் என பலவும் பேசப்படுகின்றன.நம்ம ஊர் சசி தரூர் கூட கேபிடலிசத்தின் இரு பக்கங்கள் என இந்தியாவின் பரிமாணங்களை சொல்லி இத்தாலியில் பிறந்த சோனியாவின் தலைமையில் தாரளமயமாக்கலின் பிரதமர் மன்மோகன் சிங்கை இஸ்லாமிய அப்துல் கலாம் பதவியேற்பு செய்து வைத்தது உலகில் எங்கும் நிகழாத அதிசயம் என தனது இந்திய விசுவாசத்தைக் காட்டிக்கொண்டார். இன்னொருவர் கொரியாவா,சீனாவா என தெரியவில்லை இந்தியாவுக்கும்,சீனாவுக்கும் உள்ள பொருளாதார,,ஜனநாயக வித்தியாசங்களை பட்டியலிட்டு விட்டார்.பார்க்கும் போது நம்மீது நமக்கே பரிதாபம் ஏற்படுவதோடு ஜனநாயகத்துக்கு ஏற்படும் கெட்ட பெயருக்கான நிர்வாக சீர்கேடுகள் குறித்த கோபமும் எழுகின்றது.ஆமை நடை வெற்ரியெல்லாம் பள்ளிப்பாடத்துக்கே உதவும்.பொருளாதாரத்தில் முயல் அல்ல ஓடும் பந்தய குதிரையே வெல்லும்.

இதில் Anthropology எனும் பழைய மண்டையோடுகளின் காலம்,வயது,ஆணா பெண்ணா எனவும்,டைனோசர்கள் வாழ்ந்த காலம் பற்றியும்,கோளங்களின் ஆண்டுகள்,முதல் உயிருக்கான குரோம்சாம்கள்,நியாண்டர்தால் காலத்திற்கு பின்பான ஹோமோசெபியன் என பலவும் பேசப்படுகின்றன.

குற்றங்களும்,தண்டனைகளும் என்ற தலைப்பில் சிறு குற்றங்களுக்கான காரணங்களிலிருந்து என்ரோன்,ஷேர் மார்க்கெட் வரையிலான கார்பரேட் குற்றங்களும் விவாதிக்கப்படுகின்றன.இதில் குறிப்பிடும்படியாக காவல்துறைக்கு தனிமனிதர்களை துன்புறுத்தும் அதிகாரம் கொடுக்கக்கூடாது எனவும்,இதனை சீனா சட்டபூர்வமாக்கியிருப்பதாகவும் கூறுவது இந்தியா சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

மும்பாய் தீவிரவாத தாக்குதலில் காவல்துறை குண்டு வைத்தது யாராக இருக்கும் என்ற கோணத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்க 1298 என்ற தனியார் குழு ஆம்புலன்ஸ் உடனடி சிகிச்சைக்கு உதவியதில் சுமார் 150 உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்பதை அறிய முடிகிறது.

நாம் சுவரொட்டிகள் ஒட்டுவதைப் போல் சுவர்களில் வண்னங்களால் கிறுக்கி வைத்ததைப் பார்த்த ஒரு பெண் சுவர் முழுவதும் 

before I die I want to--------------

என்று நிரப்பி வைக்க பலரும் ஆக்கபூர்வமாக எழுதி வைத்ததை காணமுடிந்தது என்கிறார்.டெல்லி, குஜராத், உதயபூர், மும்பாய், கோவா, கேரளா, பஞ்சாப், வாரனாசி என பல இடங்களில் இந்தியாவில் செயல்படும் இந்த குழுமம் தமிழகத்தில் இல்லாததன் காரணம் என்ன?

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக  விமானம் ஏர்போர்ஸ் 1ல் பயணம் செய்து விட்டு இப்பொழுது விமான நிலையத்தில் கையை நீட்டிக்கொண்டு விமான பயண பாதுகாப்புக்காக மற்ற பயணிகளோடு நிற்கும் என்னோட நிலையைப் பார்த்தீர்களா என்று சொல்லி சிரிப்பூட்டும் முந்தைய அமெரிக்க துணை ஜனாதிபதி அல்கோர், இங்கிலாந்தின் முந்தைய பிரதமர் கார்டன் பிரவுன், இப்போதைய டேவிட் கெமரான் என்பவர்களோடு மொஹஞ்சோ தாரோ அடையாளங்கள் சித்திர வடிவான மொழி வடிவமே எனும் இந்திய ராவ் வரை   TED குழுமத்தின் அங்கத்தினர்கள்.TED Talks போன்ற கலந்துரையாடல்கள் புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதியின் கனவை நோக்கிய மேற்கத்திய சிந்தனை.படம் பார்த்தால் போதும்.நன்றி.


சுட்டிகளுக்கும் நன்றி நன்றி:

நம்ம கே.ஆர்.பி செந்தில்

http://krpsenthil.blogspot.com/2010/07/ted.html

http://pillaiyaandaan.blogspot.com/2011/02/ted.html
பிள்ளையாண்டான் சொன்ன சுட்டிகள்

இன்னும் கூகிளில் தேடியவை

மரிசா பிக் ஜோர்டன் அவர்கள் சுலு கம்பி கலையின் அற்புதத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.


http://www.ted.com/talks/lang/ta/marisa_fick_jordan_shares_the_wonder_of_zulu_wire_art.html

அதிதி சங்கரதாஸ்: கற்றல் குறைபாடுகள் பற்றிய இரண்டாம் அபிப்ராயம்
http://www.ted.com/talks/lang/ta/aditi_shankardass_a_second_opinion_on_learning_disorders.html

அதிசயிக்கும் ஊக்கவியல் விஞ்ஞானம் பற்றி டண் பிங்க்

http://www.ted.com/talks/lang/ta/dan_pink_on_motivation.html

மனம் திறக்கிறார் பில் கேட்ஸ்

http://www.ted.com/talks/lang/ta/bill_gates_unplugged.html


மிஷ்கின் இங்வாலே: இரத்தக் கசிவில்லா இரத்தப் பரிசோதனை
http://www.ted.com/talks/lang/ta/myshkin_ingawale_a_blood_test_without_bleeding.html

ப்யாடீ மேஸ் விளக்கும் "ஆறாவது புலன்" என்கிற புரட்சிகரமான அணிந்து கொள்ளும் தொழில்நுட்பம்

http://www.ted.com/talks/lang/ta/pattie_maes_demos_the_sixth_sense.html

வாதா கான்பரின் அரபு உலகின் வரலாற்று சிறப்பு தருணம்
http://www.ted.com/talks/lang/ta/wadah_khanfar_a_historic_moment_in_the_arab_world.html

லலிதேஷ் கட்ரகட்டா: பேரழிவை எதிர்த்து போராடவும், பொருளாதரத்தை வளர்க்கவும் வரைபடம் செய்தல்
http://www.ted.com/talks/lang/ta/lalitesh_katragadda_making_maps_to_fight_disaster_build_economies.html

























Sunday, September 9, 2012

விட்டேனா பார்!பனிப்போருக்கும் அப்பால்

முன்னோட்டம் விட்டதுக்கே (ட்ரெய்லர்) நண்பர்கள் படம் ஒரே மொக்கைன்னு பின்னூட்ட விமர்சனம் போட்டுட்டாங்க.பிலிமே இனி மேல்தான் வருது.என்ன பேசிகிட்டிருந்தோம்?சி.ஐ.ஏவும்,கே.பாலசந்தரைப் பற்றியுமா?இப்படி பேசினாத்தான் சம்பந்தமில்லாமல் தலைப்புங்கண்ணா.நாம் பேசுவது பனிப்போருக்கும் அப்பாலான மாற்றங்கள் பற்றி!ஒரு வேளை முன்பு மாதிரி இரட்டை அமெரிக்க,சோவியத் யூனியன் சூழ்நிலை இருந்திருந்தால் யூரி ககேரின்,ஆர்ம்ஸ்ட்ராங்க் பேசிக்கொண்ட சங்கேத கோடுகள் இணையம் தழுவி வந்திருக்குமா என்பதும் கூட சந்தேகமே.நான் எங்கோ டீ ஆத்திகிட்டிருக்க நீங்க தினமணியும்,தினத்தந்தியும் வாசிச்சுகிட்டு உலகளாவிய அரசியலை அளசிகிட்டும் கூட இருந்திருக்க கூடும்:)

 அமெரிக்க முதலாளித்துவம் இன்னும் நிலைப்பதால் சிஐஏ வும் இன்னும் நிலைக்கிறது.ஆனால் சோவியத் ரஷ்யா பிரிஞ்சு போன பின் கேஜிபி யும் அதில் பணிபுரிந்தவர்களும் என்ன ஆனார்கள்?சமீபத்து உதாரணமாக சதாம் ஹுசைனின் ராணுவத்தில் பணி புரிந்தவர்கள் அமெரிக்க படையெடுப்புக்குப் பின் இவர்களை ராணுவத்தில் இணைத்தால் சதாமின் மற்றொரு முகமாக இவர்கள் செயல்படுவார்கள் என்று ராணுவத்தில் இணைக்காததால் தங்கள் ராணுவ திறன்களை அமெரிக்காவின் எதிர்ப்புக்கும் குண்டுவெடிப்புக்கும், ஈராக்கை விட்டு வேறு நாடுகளில் குடிபுகுந்தது என பலவிதமாக சிதறிப்போனது மாதிரி கேஜிபியில் பணிபுரிந்தவர்களும் பலவாறு சிதறிப்போனார்கள்.

இவற்றில் ராணுவ,அணு ஆயுத,வானியல் நுட்ப (Space Technology )ரகசியங்கள் கடத்தல் என்பவற்றோடு சிலர்,இணைய தளத்திற்குள்ளும் நுழைந்தார்கள். இணைய உபயோகிப்பாளர்களின் பெரும்பாலோனோர் இணையத்தை நேரடியான பயன்பாட்டுக்கு உபயோகிப்பவர்களாக இருந்தாலும் இதனை மாற்று பயன்பாட்டாக உபயோகிப்பவர்களை மூன்று விதமாக பிரிக்கலாம்.

1.பொருளாதார நலத்தோடு செயல்படும் ஆன்லைன் ஹேக்கர்ஸ்,
2.பின்னூட்டம் போன்று சில்மிச வேலைகள் மற்றும் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளாத ஆபத்தில்லாத அனானி குழுவினர்,
3.தனது நாட்டு மக்களையும்,நாட்டுக்கு எதிரான செயல்பாடுகளை கண்காணிக்கும் அரசு சார்ந்த நிறுவனங்கள்.

அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு உதாரணமாக எகிப்தில் நிகழ்ந்த அரேபிய வசந்தத்தை குறிப்பிடலாம்.எகிப்திய புரட்சிக்கு முக்கிய காரணமாக தகவல் பரிமாற்றத்திற்கு பங்கு வகுத்தது யூடியுப்,முகநூல்,ட்விட்டர்,பிளாக்கர் குழுவினரும் மற்றும் ஜிமெயில் போன்ற கடித தொடர்புகளே. இவற்றையெல்லாம் கண்காணிக்க ஹோஸ்னி முபாரக்கின் அரசு அமெரிக்காவிலிருந்து ஒரு மென் பொருளை அதிக விலை கொடுத்து வாங்கியதுடன் மக்கள் புரட்சி கட்டுக்குள் அடங்காமல் போனதும் இணையதள தொடர்பை துண்டிக்க இஸ்ரேலின் உதவியை (Narus of Sunnyvale, California-Isreal based American co)நாடியது.இந்த நிறுவனம் சவுதி அரேபியா,பாகிஸ்தான் போன்ற அரசுகளுக்கும் உதவுவதாக இணைய தகவல்கள் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன.பாகிஸ்தான் பற்றி குறிப்பிடும் போது 5.1/4 பிளாப்பி டிஸ்க் வலம் வந்துகிட்டிருந்த காலத்தில்   1990களின் கால வாக்கில் ட்ராஜன் மாதிரி பிளாப்பிக்குள் வைரஸ் புகுத்தி விளையாடிய பசீர்,அம்ஜத் என்ற இரண்டு வைரஸ்ரர்களை! இப்போதைய கணினி நுட்ப வளர்ச்சிக்குப் பின் விலாசம்,போன் எண்களை கண்டுபிடித்து 2008 வாக்கில் பாகிஸ்தான் சென்று கதவை தட்ட கதவை திறந்தது அதே பிளாப்பி டிஸ்க் அம்ஜத் என்ற கதையெல்லாம் அடுத்த பதிவு வரை சஸ்பென்ஸ்:)

தங்களை வெளிப்படுத்திக்கொண்டு ஆக்கபூர்வமாகவும்,சிறந்த தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்ளும் போட்டிகள் கூட நிகழ்த்தும் ஹேக்கர்ஸ் நிறைய பேர் இருந்தாலும் பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டும்,தாங்கள் எங்கிருந்து செயல்படுகிறார்கள் என்று தெரியாமல் செயல்படும் குழுக்களில் முக்கிய பங்கு வகிப்பவை ரஷ்யாவை சார்ந்தவை.இப்பொழுது பனிப்போருக்குப் பின்னால் என்ற முந்தைய தலைப்பை ஒட்டி கிட்டத்தட்ட நகர்ந்து விட்டாலும் படத்தோட க்ளைமாக்ஸே இனி அடுத்த பதிவில்தான் வருகிறது.

Thursday, September 6, 2012

பனிப்போருக்கும் அப்பால்

அமெரிக்க, சோவியத் ரஷ்ய பனிப்போர் காலத்தில் இரு நாடுகளின் கொள்கைகளை மட்டுமல்ல உலக நாடுகளின் கொள்கைகளையும் தீர்மானித்ததில் முக்கிய பங்கு வகித்தவை அமெரிக்காவின் சி.ஐ.ஏ மற்றும் சோவியத் ரஷ்யாவின் கேஜிபி உளவு நிறுவனங்கள்.கேஜிபியின் குறிக்கோள் கம்யூனிசம் சார்ந்து நாடுகளை உருவாக்குவதும் அமெரிக்காவிற்கான எதிர்ப்பும்.அமெரிக்க சி.ஐ.ஏ  நோக்கம் ஜப்பானின் பேர்ல் ஹார்பர் தாக்குதல் போன்று உருவாகாமல் தடுப்பதும் (அப்ப 9/11?) பல துறைகளாக இயங்கும் PD,FBI,Pentagon,Congress,Foreign Policy போன்றவற்றின் செயல்பாடுகளை துறை சார்ந்தும் இவை அனைத்தையும் சார்ந்து நேரடியாக ஜனாதிபதிக்கு தெரிவிப்பதுமாகும்.

கியூபா ,சிலி போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் தலையீடு,பனாமா ராணுவ தாக்குதல்,ஈராக்கில் சதாம் ஹுசைன் பதவியேற்பு,ஈரானின் இஸ்லாமிய ஆட்சி,ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு, முஜாஹிதீன்களுக்கான அமெரிக்க ஆதரவு, காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்க தலையீடு என பலவற்றை சொல்லலாம்.

இதன் பின்ணனியில் இரு நாடுகளின் பொருளாதார நலன்களோடு தம்மைச் சார்ந்து மட்டுமே ஏனைய நாடுகள் இயங்க வேண்டுமென்ற அழுத்தங்களாக நாட்டை ஆள்பவர்களுக்கு அன்பளிப்பு என்று ஸ்விஸ் வங்கி கணக்கு திறக்குமளவுக்கு பணம் தருவதோ தமது நலன்களுக்கு உதவவில்லையென்றால் பயமுறுத்தல்,விபத்து போன்று மரணத்தை ஏற்படுத்துவதோ அல்லது மக்களே கலவரம் உருவாக்கட்டும் என கலவரங்களுக்கான சூழல்களை உருவாக்குவதோ நிகழும்.

இணங்கிப் போவதின் மூலம் தனது நலன்,தன்னை சார்ந்து ஆட்சி புரிபவர்கள் நலன்,இவர்களோடு மேல் நிலையில் உள்ள பீரோகிராட்டிக்காரர்களோடு வசதி வாய்ப்புக்கள் நின்று விடும்.இணங்கிப் போகாமல் நாட்டுப்பற்று என்ற கொள்கைகளோடு ஆட்சி செய்ய முடிந்தாலும் பொருளாதார தடைகளை ஏற்படுத்துவது போன்றவைகள் நிகழும்.எப்படியிருந்த போதிலும் ஆட்சி நிர்வாகத்தில் பாதிக்கப்படுபவர்கள் நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களே.மேலும் ஊழலுக்கான சூழலை உருவாக்குவதும் கூட உளவுத்துறைகளின் முக்கிய பணியாகும்.

இவ்வாறான பனிப்போர் காலத்தில் இந்தியாவில் நுழைந்த ஊழல் இந்திரா காந்தியின் கால கட்டமும் அதன் தொடர்ச்சியாகவே அரசு அலுவலகங்களில் உதவியாளர் ( பியூன் ) காசு கேட்பதோ வாகன,சாலை விதி ஒழுங்குபடுத்திலில் துவங்கி அரசு அலுவலர்கள்,மண்,மணல்,நிலம்,,கார்பரேட் 2G,பிரதமர் மன்மோகன் மீதான நிலக்கரி சுரங்க ஊழல் என எங்கும் எதிலும் வியாபித்திருக்கிறது.இந்தியா போன்ற பெரிய பெடரல் அமைப்பில் ஊழல் பரவுவது எளிதாகவும் அமைகிறது என்பதோடு நாட்டின் விரைவான வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கிறது.

இப்போதைய நிலையில் பனிப்போர் காலத்து ரஷ்யாவையோ, அமெரிக்காவையோ குறை சொல்லி விட முடியாது என்ற போதிலும் அப்போதைய விதை விருட்சமாக வளர்ந்துள்ளதை மக்களின் மனம் பிரதிபலிக்கிறது.முன்பிருந்த பனிப்போர் சூழல் இல்லாததை உலக வங்கி கடன்,என்ரோன் போன்ற மின்சார திட்டங்கள்,பொருளாதார,விவசாய திட்டங்கள் என புதிய நவீன முறைகள் கையாளப்படுகின்றன.

ஒரு நாளைக்கு ஒரு டாலர் என எந்தப் பணியுமில்லாத ஆயிரக்கணக்கான சீனர்களுக்கு நைக் போன்ற காலணிகள் நிறுவனங்கள் மேலோட்டமாக மக்களுக்கு கிடைத்த வரம் மாதிரியாக தோன்றினாலும் மூன்று மாத காலவரைக்குள் நிறுவனத்தின் லாபம் எவ்வளவு என்பதில்தான் நிறுவனம் குறியாக இருக்கும்.உலகப் பொருளாதார பின்னடைவு போன்ற சிக்கல்களில் நிறுவனத்தின் பணியாளர் வேலை குறைப்பு,நிறுவனம் இயங்காமலே போவது அல்லது இன்னொரு தேசத்திற்கு மாற்றி விடுவதென பொருளாதார தடுமாற்றங்கள் தொடர்கதையாகவே இருக்கின்றன.

உலக மக்கள் தொகையில் 5 சதவீதமுள்ள அமெரிக்கா கிட்டத்தட்ட 25 சதவீத உலக வளங்களை அனுபவிக்கிறது.உயர்ந்த கட்டிடங்கள்,முதலாளித்துவ திட்டங்கள்,கண்டுபிடிப்புக்கள்,பாதுகாப்பு என வளமாக அமெரிக்கா இருப்பதைப் பார்த்து ஏனைய நாடுகளும் அதுமாதிரியான வாழ்க்கை முறையை விரும்புகினறன. உலகப்போருக்குப் பின் ஜப்பான் தன்னை உருவாக்கிக்கொண்டது.ஐரோப்பிய நாடுகள் உலகப்போரில் இழந்தவை அதிகம் என்ற போதிலும் ஓரளவுக்கு வலுவாகவே உள்ளன.பெட்ரோலிய பொருளாதாரத்தால் அரேபிய நாடுகள் வளமாக இருக்கின்றன.இதே நிலை இந்தியா,சீனா போன்ற வளரும் நாடுகளுக்கு சாத்தியப்படுமா?

Tuesday, September 4, 2012

லங்காபதியே! என்னை அசத்தாத முகமூடியே!

ஒரு முறையாவது அனானி முகமூடி அணிந்து பார்க்க வேண்டுமென்ற ஆசையை முந்தா நாள் ஒரு பாய் "ஒசூர் பாய் முகமூடியே நீதானய்யான்னு" புது கொலம்பஸ் கண்டுபிடிப்பாய் யுரேக்கா என கத்தி விட்டார்:)

ஆசை,தோசை,பின்னூட்ட வடை! இப்படியெல்லாம் சொன்னால் இது பதிவுலக முகமூடியென்றோ,அனானி பின்னூட்டம் பற்றியென்றோ யாராவது நினைத்தால் அடுத்த வருட ஏப்ரம் 1 ம் தேதி இப்பவே தமிழ் புத்தாண்டு எப்பங்கிற மாதிரி இப்பவே கொண்டாடி வேண்டியதுதான்..இன்றைக்கு அதிகமா வியாபரம் ஆவது இந்த  முகமூடிதான்.நம்ம பதிவுலக நண்பர்கள் போட்டுக்கிற முகமூடியெல்லாம் ஏதோ திருவிழாவுக்கு போற குழந்தைக்கு கண்ணாடி வாங்கிப் போட்ட மாதிரியும் ஜவ்வு மிட்டாய் கடிகாரம் கட்டின மாதிரியான முகமூடிகள் இவை.

 எந்திரனுக்கு மாற்று சிம்கார்டு போட்டு விட்ட மாதிரி வெளியே பார்த்தால் அரசியல்,வெளியுறவுக்கொள்கை.உள்ளே பார்த்தால் ரகசிய ஒப்பந்தம், சுவற்றுக்குள் பேச்சு வார்த்தை.ஊடகத்துக்கு ஒன்ரை சொல்.இன்னொன்றை செயல்படுத்துன்னு அரசியல் முகமூடி உத்தம புத்திரனில் சிவாஜி சிவாஜிக்கு மாட்டிவிட்ட முகமூடி மாதிரி அரசியல் ஆசனத்து இரட்டை வேடங்கள்.

வெளுத்ததெல்லாம் பால் அல்ல,வெள்ளை உடுத்தியவரெல்லாம் காந்தியின் பேரனுமல்ல.தமிழகத்திற்கு மஞ்சள்தான் மங்களம்.அது அமங்களமாகிப் போய் ஆண்டுகள் பலவாகி விட்டன..பழகிய தோசத்துக்காக இன்னும் மஞ்சள் பையிலும்,திருமண அழைப்பிதழலின் மூலையிலும் ஒட்டிக்கொண்டிருக்கின்றன.

கறுப்பு நிறம் அழுகிறதா என்று இருட்டுக்குள் இருட்டாக....பார்க்கவே முடியவில்லை சிரிப்பு சத்தம் கேட்காவிட்டாலும் அவ்வப்போது விசும்பல் மட்டுமே கேட்கின்றது.

சிவப்பு?அது ஏதோ தொழிலாளர் குரலாக இங்குமங்கும் ஒலிக்கிறது.ராஜா மாதிரி இருக்க வேண்டியது.ரஷ்யாவுல கேட்டாங்க,சீனாவுல கேட்டாங்க,கியூபாவுல கேட்டாங்கன்னு சுக்கிர திசை அடிக்காத செவ்வாய் தோசமாம்.குடுகுடுப்பை ஜோஸ்யக்காரன்  ராவுல வந்து உடுக்கை அடிச்சுட்டுட்டார்.

சிவப்பும் கறுப்பும் கலந்த மாதிரி ராஜ பார்வையிருந்தாலும் காலை நேரத்தில் சிவப்பாவேன்,சூரியன் மறைந்தால் கறுப்புதான் எனக்கு புடிச்ச கலர் மாதிரி இரட்டை மன கலர்

காவி!பிரம்மச்சரியத்தின் அடையாளம் என்பதை புரட்டிப் போட்டு ரத்தம் பூசிக்கொண்டும் நீண்ட நாட்களாகின்றன.

இந்திய அரசியல் வர்ணங்களே வேண்டாமென விட்டாலாச்சார்யா குகை மந்திரவாதி மண்டையோடுகளை கழுத்தில் மாட்டிக்கொள்வது மாதிரி சிவப்போடு ரத்தம் தோய்த்த நீண்ட துண்டு போட்டுக்கொண்டு லங்காவதி.முன்பு பதவி பயத்தால் சத்தம் போடாதே பக்சே என்ற அம்ஜத்கான் வந்து புடிச்சிட்டுப் போயிடுவான் என்ற பூச்சாண்டி காட்ட தலீவர் இல்லாததால் இங்கே குரல் கொடுத்தால் அங்கே அப்பாவிகளை அடிப்பான் என்று குழந்தையை தூங்க வைக்கும் முயற்சியில் ஒரு சில கதர் கலரும்.கத்துவதே இந்திய ஜனநாயகம்ன்னு நாம சொன்னா கத்திக் கத்தி என்ன பலன்? டெல்லி வரும்போது  தமிழ் தலைகள் நேரா லங்காவதிகிட்டேயே சாஷ்டாங்கமாக காலில் விழுந்து பார்க்கலாமே என  நேத்தைக்கு ஒரு அதி புத்திசாலி மூத்த பத்திரிகையாளன். போர்க்குற்றமாவது வார்க்குற்றமாவது? 

தனித்தனியா நண்டு வளையமா இருந்தாலும் இப்போதைக்கு இருக்கிற வலுவானதோ அல்லது வலுவற்றதோ ஒரே ஆப்பு தமிழ்நாட்டுலருந்து வரும் குரல்தான்.அதனையும் புடிஙகி போட்டுட்டா கேட்கறதுக்கு ஆளே இல்லை.லங்காபதி ஆடு சிங்கே ஆடுன்னா எசப்பாட்டும் சேர்ந்தே பாடுறேன்னு 13க்கு அடுத்த 14 அல்ல 13+ புகழ் பாடும் தெக்கச்சிக்கு வில்லி சுஷ்மா என்ற கட்டச்சி.இருக்குறதெல்லாம் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம்தான்.சில்வர் முகம் பூசிக்கொண்ட ஈயக்கம்பிகள்தான்.எதற்கும் சூரிய ஒளிப்பிரகாசமில்லை.

சூரியனே மானோடும் மயிலோடும் சக்கர நாற்காலியில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கிட்ட போது ஓட்டுப்பிச்சைக்காக பறந்து வரும் வால் நட்சத்திர ஒளியை நம்பிப் பயனில்லையென்பதை காவி(ய) காதலனுக்கு பட்டு குஞ்சம் சுத்திகிட்ட சுஷ்மிதமாக சொல்லி விட்டார்.நமக்கு பிறந்து வீடும் சரியில்லை.ஆமைகள் புகுந்த வீடும் சரியில்லை.

.பழைய காலத்து அனுமான்  வாலோடு லங்காவுக்கு பறந்த மாதிரி நவீனமா அனுமாளுக்கு பட்டுச்சேலை கட்டி விட்டு விமானத்தில் பறக்க விட சந்தித்தேன் உன்னை நான் சந்தித்தேன்!என்னை நீ  எப்போ சந்திப்பாய் என்று சுஷ்மிதமா டூயட் பாட கிடைத்த லொகேசன் தான் சாஞ்சி.நான் சீனாவோடு சோரம் போனாலும் ராத்திரியானா என்னைக் கட்டி அணைக்கத்தான் வேண்டுமென்ற வேண்டாத பொண்டாட்டியாய் இந்தியா.

இரண்டு பொண்டாட்டிக்காரன் மாதிரி சீனாவோடும்,இந்தியாவோடும் லங்காவுக்கு ஒரே அஜால் குஜால் குத்துப்பாட்டுத்தான்..சின்ன வீடும் பெரிய வீடும் குடுமி சண்டை போடுமா இல்ல சக்களத்திகளாகவே இருந்து சமாதானமாகிப் போகுமான்னு போக போகத்தான் தெரியும்.எப்பவும் பெரிய வீடுதான் மூக்கை சிந்திகிட்டு முகாரம் பாடும்ங்கிற குடும்ப விதிக்கேற்ப இந்தியாவும் மூக்கை சிந்துவதற்கு இப்பவே சளி பிடித்து விட்டது.இந்தியா பெரியண்ணன் என்பதை பெரியக்கான்னு மாத்தி வருடம் மூணாச்சு. சின்ன வீடு சீனா மேலதான் லங்காவதியோட கண்ணே மணியே தாலாட்டு.எப்படியோ ரெண்டு பொண்டாட்டிக்காரன் அதிர்ஷடக்காரன்தான்.பெரியக்கா பாடுதான் பார்க்க சகிக்கல.

லங்காபதியின் இந்திய வருகை சுஷ்மா தூபம் போட்டு சாஞ்சிக்கு வந்த சாபம்.

Sunday, September 2, 2012

ஹொவார்ட் ஜீன் ( Howard Zinn)

அமெரிக்க வரலாற்றில் முதலாளித்துவம் சார்ந்த ஊடகங்களே முன்னிலை வகிப்பதால் கம்யூனிஸம் சாராத சோசியலிச சிந்தனைகள் அமெரிக்காவில் வலம் வந்தாலும் அவை உலகளாவிய அளவில் தெரிவதில்லை.சோசியலிசம் என்ற சொல்லை ரஷ்ய கம்யூனிசம் ஹைஜாக் செய்து கொண்டு போய் விட்டதால் அதன் முழுப்பொருள் கம்யூனிசம் சார்ந்து அமெரிக்காவில் முதன்மைப் படுத்தப் படவில்லை.உணவு,வீடு,சுகாதாரம்,குறைந்த நேர வேலை,அதிக நேர ஓய்வு அனைத்து மக்களுக்கும் உலகளாவிய அளவில் கிடைப்பதே சோசியலிசத்தின் அடிப்படை என்கிறார் ஹொவார்ட் ஜீன் (Howard Zinn).
 படம் போட்டு ரொம்ப நாளாச்சு!ஹோவார்ட் ஜீன் படம் சேர்ப்பது இந்த பதிவுக்கு அழகு சேர்க்கும்.பட உதவி: அவரது தளமே!Howard Zinn.org மேலும் பல தகவல்களை தரக்கூடும்.

முந்தைய அமெரிக்க ஜனாதிபதி நிக்சனின் காலத்து வியட்நாம் போருக்கு எதிர்ப்புக் குரல்கள் பலரிடமிருந்து வந்தாலும் வியட்நாம் போருக்கான முதல் குரல் ஒலித்தது ஹொவார்ட் ஜீனிடமே!மார்ட்டின் லூதர் கிங் பிரபலமான அளவுக்கு ஹொவார்ட் ஜீன் உலகளவில் அறியாமல் போனது வரலாற்றுப் பிழையே!1922ல் பிறந்த ஹோவார்ட் ஜீனின் பெற்றோர்கள் புருக்ளின் பகுதியில் வாழ்ந்த உழைப்பாளர் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதால் புத்தகங்களையே கண்ணில் பார்க்காமல் வளர்ந்தவர்.சில பக்கங்கள் சிதைந்து கீழே வீசப்பட்ட புத்தகமொன்றை கொண்டு வந்து படிக்கும் ஹோவார்ட் ஜீனின் ஆர்வம் கண்ட பெற்றோர்கள் 10 சென்ட் உடன் கூப்பன் ஒன்றை நியுயார்க் போஸ்ட்டுக்கு அனுப்ப தொடர்ந்து வந்த சார்ல்ஸ் டிக்கன்சனின் எழுத்துக்கள் ஹோவார்டின் வாசிப்புக்கு தளம் அமைக்கிறது.

தனது பதின்ம வயதில் கப்பல் கட்டுமானத்துறையில் பணி புரிந்த அனுபவத்தின் அடிப்படையிலும்  விமானப்படையில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கிறது.ஹிட்லரின் பாசிஸத்திற்கு எதிராக பெர்லின், செக்கோஸ்லா விக்கியா,ஹங்கேரி போன்ற இடங்களில் விமானம் மூலம் குண்டு வீசும் 490 விமான குண்டு வீச்சு குழுவினரோடு பணிபுரிகிறார்.1945ம் வருடம் பிரான்ஸின் ரோயன் பகுதியில் நப்தீனிக் ஆஸிட்,பால்மிடிக் ஆஸிட்.பெட்ரோலியம் கலந்த நபால்ம் என்ற குண்டுகளை ஜெர்மன் வீரர்களை நோக்கி வீச கட்டளையிடப்படுகிறார்..ஒன்பது வருடங்கள் கழித்து தனது டாக்டரேட் ஆய்வுக்காக பிரான்ஸில் வசிப்பவர்களிடம் நேர்காணல,முனிசிபல் ஆவணங்கள்,நூலகத்தின் பழைய செய்தி துணுக்குகள் போன்றவற்றை சேகரிக்கிறார்.தனது குண்டு வீச்சால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரெஞ்சு குடிமக்களும்,போர் முடிவதற்காக காத்திருந்த ஜெர்மன் வீரர்கள் சிலரும் இறந்து போனதை அறிவது ஹோவார்ட் ஜீனின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைகிறது.

இதனை அரசியல் வரலாறு (The politics of History) என்ற புத்தகத்தில் பதிவு செய்கிறார்.பிரான்ஸ் அமெரிக்காவுடன் நட்பு நாடாக இருந்தாலும் போர் முடிவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு ராணுவ அதிகாரிகள் தங்கள் பதவி உயர்வுக்காக எப்படி குண்டு வீச்சுக்காக கட்டளையிடுகிறார்கள் என்பதை சொல்கிறார்.

வியட்நாம் போருக்கு எதிராக குரல் கொடுத்தது மட்டுமலாமல் போரில் பிடிபட்ட முதல் மூன்று விமானிகளை அமெரிக்கா கொண்டு வந்த சேர்த்த பெருமை ஹோவார்டுக்கே உரியது.

பின்பு அமெரிக்க்காவின் தென்பகுதியில் கறுப்பு நிறம் கொண்டவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தனது வரலாற்று ஆசிரியர் பணியை தொடர்கிறார்.இங்கேயிருந்து ஹோவர்டின் சோசியலிச கலகம் துவங்குகிறது. தொழிலாளர் யூனியன் போராட்டங்களில் பங்கு கொண்டு FBIன் பார்வைக்கு வருகிறார்.நீதிமன்றத்தில் கறுப்பு இனத்தவர்கள் தனியாகவும் வெள்ளை நிறத்தவர்கள் தனியாகவும் உட்கார வேண்டுமென்ற நீதிபதியின் கட்டளையைப் புறக்கணித்து அரசியல் சாசன விதிகளை நீதிபதிக்கு அறிவுறுத்தி அனைவரையும் கலந்து உட்கார வைக்கிறார்.கல்லூரியின் முதல்வருக்கு பதவி,பொருளாதார் பலமிருந்த போதும் தன்னோடு 400 மாணவர்களின் பலத்தோடு போராடியதை சொல்லி சிரிக்கிறார்.

இரண்டாம் உலகப்போர்,வியட்நாம்,பனாமா,கிரனடா என அமெரிக்காவின் போருக்கு முடிவேயில்லை என்ற விமர்சனத்தோடு ஈராக் போரையும் எதிர்க்கிறார்.

மனித உரிமை,உழைப்பாளர் நலன்,போர்களுக்கு எதிர்ப்பு,நிற வேற்றுமைக்கு எதிர்ப்பு,போஸ்டன்,யேல் பல்கலைக்கழகங்கள் உட்பட கல்லூரி மாணவர் களிடையே சொற்பொழிவு,விழிப்புணர்ச்சி,ஆய்வு,அமெரிக்க வரலாற்றுக் கட்டுரைகள்,புத்தகங்கள், நேர்காணல் என்று ஹோவார்ட் ஜீனின் மனித நலன்களுக்கான பணி அளவிட முடியாதது.அமெரிக்காவின் முதலாளித்துவ தவறுகளை விமர்சிக்கும் நோம் சாம்ஸ்கிக்கும் முன்னோடி ஹோவர்ட் ஜீன்.

பதிவுக்கான கரு:

Ellis, Deb and Mueller, Denis. Howard Zinn: You Can't Be Neutral on a Moving Train. (film 2004)

மேலும் தகவல் இணைய தேடலில் January 27, 2010ல் நீச்சல் குளத்தில் குளித்துக்கொன்டிருக்கும் போது இதய அழுத்தத்தால் இறந்து விட்டார் என்கிறது விக்கிபீடியா.



Thursday, August 30, 2012

அச்சு பதிவுகள் சாத்தியமா?

மச்சி!மறுபடியும் ஓப்பன் த பாட்டில்!நான் என்னைச் சொன்னேன்:)

முதற்கண் பதிவர் குழுமம் விவாதங்களையும் தாண்டி வெற்றிகரமாக அமைந்ததற்கு மகிழ்ச்சியோடு அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நேரலை,பதிவுகள்,புகைப்படங்கள் காணும் போது பதிவர் குழுமத்தாரின் உழைப்பு,நிர்வாகத் திறன் போன்றவற்றை உணர முடிகிறது.சந்திப்பை தொடர்ந்து பட்ஜெட் தணிக்கை அறிக்கை வெளியிட்ட வெளிப்படத்தன்மை போன்றவையும் வரவேற்க கூடியவை.

முந்தைய கால கட்டமான பதிவர் குழுமம் வேண்டும் என்று பலரும்,இப்படியே போகட்டுமென்று சிலரும் நினைத்த இரட்டை குணத்தை தாண்டி பதிவர் குழுமம் அவசியம் என்பதை ஒன்று கூடல் உறுதிப்படுத்துகிறது.பலரின் எண்ணங்களுக்கு வடிகாலாக திரட்டிங்கள் உதவுகின்றன என்ற போதிலும் பதிவுகளின் சாரம் கணினி உபயோகிப்பாளர்களுக்கு மட்டுமே சென்றடைகிறது. தமிழகத்தின் மின்சார பற்றாக்குறை,கணினி உபயோகிப்பாளரகளின் எண்ணிக்கை போன்றவற்றை நோக்கும் போது இன்னும் பத்திரிகை, புத்தகங்கள் சார்ந்தே மக்களின் வாசிப்பு நிலை இருக்கிறது.

கூகிள் இடத்தைப் பட்டா போடச் சொல்லி பதிவுகள் எழுத இலவசமாக தளம் அமைத்துக்கொடுத்தாலும் கூட கூகிளுக்கு பொருளாதார ரீதியான நலன்களும் உள்ளடங்கியிருக்கிறது.பலர் தங்கள் கால நேரத்தை செலவழித்து சொல்லும் கருத்துக்கான அன்பளிப்பு பின்னூட்ட உற்சாகம்  மட்டுமே.

பதிவுகள் பொருளாதார ரீதியாகவும், கருத்துக்கள் பலரையும் சென்றடையும் சாத்தியமாக பதிவுகளை அச்சுப்படுத்தும் சாத்தியம் உள்ளதா?அப்படி ஒரு சாத்தியமேற்படும் நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளை பெரும்பாலோனோருக்கு கொண்டு செல்வது இயலும்.

பத்திரிகைகள் வாசிப்போரின் கட்டணத்தொகையை விட விளம்பரங்களின் மூலம் வரும் வருமானத்தை நம்பியே பத்திரிகை நடத்துகின்றன.பதிவுகளும் பத்திரிகை,புத்தக வடிவாகும் போது கட்டணத்தொகையோடு விளம்பரஙகளை  பெறவும் முடியும்.

மருத்துவம்,சட்டம்,கவிதை,திரைப்படம்,உரையாடல்கள்,உலக அரசியல்,ஈழம், மொழி,அறிவியல்,தொழில் நுட்பம்,சமையல் என ஒரு பத்திரிகை தருவதற்கும் அதிக பங்களிப்பை பதிவுலகம் மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடியும்.அச்சுத்துறை சார்ந்தும் கூட நம்மிடம் பதிவர்கள் இருக்கிறார்கள்.இதே குழும சிந்தனையோடு பதிவுகள் அச்சாவதில் உள்ள சாதக பாதகங்களை பதிவுகளாக, பின்னூட்டங்களாக வருவதை வரவேற்கிறேன்.

Wednesday, August 8, 2012

முந்தைய பதிவுக்கும் முந்தைய பதிவு - பின்னூட்ட பகுதி 2

கருத்தும் சொல்றாங்க அதை விட  கொம்பு மான்கள் டமால்ன்னு முட்டிக்கிற மாதிரி இருக்குது பின்னூட்ட ஹெவி வெயிட் சாம்பியன்களின் சில பின்னூட்டங்கள்.அழுவதா அல்லது சிரிப்பதா அல்லது சிவாஜிகணேசன் மாதிரி சிரித்துக்கொண்டே அழுவதான்னு தெரியவில்லை.கருத்துக்கு கடை பொறுப்புன்னு..பேச அனுமதி கொடுத்தால் வாஷிங்கடனிலிருந்தோ, பரங்கிமலைல விமானம புடிச்சு இதோ வாரேன் பார்ன்னு உதார் விடுவதற்கும் இத்துணூண்டு இந்த டீக்கடை என்ன செய்ய முடியும்?வடிவேலு செய்யும் அலம்பலுக்கு.டீ ஆத்துபவர் அப்பாவித்தனமா பார்த்துகிட்டிருக்கிற நிலமை எனக்கு.ஆட்டத்தை துவங்கி வச்சதே நான் என்பதால் வேறு வழியில்லாமல்
இனி விட்டேனா பார்ன்னு முந்தைய பதிவுக்கு முந்தின பதிவுக்கான பின்னூட்டஙகளின் தொடர்ச்சியாக விட்டுப்போன கருத்துக்களின் தொடர்ச்சி.

உண்மைகள்: வெளி நாடு வாழ் இந்தியர்கள் தங்கம் கொண்டு வர மீண்டும் கட்டுப்பாடு என்றால் இந்தியா மறுபடியும் 1990 கால கட்டங்களை மீண்டும் நெருங்கிக் கொண்டிருக்கிறதா அல்லது அதிக தங்க பயன்பாட்டால் உற்பத்தி தேவை என்ற அடிப்படையில் தங்க விலையைக் கட்டுப்படுத்தும் முயற்சியா இது?

தங்கத்துக்கு நிகராக வெள்ளியின் மீது ஏன் இந்தியர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை.நாம் தங்கத்துக்கு தரும் மதிப்பை அமெரிக்காகாரர்கள் வெள்ளிக்கு தந்து சேமிக்கிறார்கள்.

நரேன்: வழக்கமாக சகோ.சார்வாகன்,பாஸ் வவ்வால் கடையில்தானே டீ குடிப்பீர்கள்:) இணைந்து கொண்டதில் மகிழ்ச்சி.

செஞ்சிலுவை சங்க சுட்டி கொடுத்தமைக்கு நன்றி.ஒரு தேசம் மக்களையும்,மரணத்தையும் எவ்வளவு மதிக்கிறார்கள் என்பது போர் காலகட்டத்தில் புரிந்து விடும்.ருவாண்டா மற்றும் ஏனைய ஆப்பிரிக்க நாடுகளோடு ஆசிய நாட்டின் சாட்சியாக கம்போடியா கேமர் ரூச் படுகொலைகளும்,புத்த பூமியாய் இலங்கையின் கொலைக்களமும் சாட்சி.

இந்தியாவில் அரசாங்க ஊழியர்கள், அமைப்புகள், இறந்தவரின் உடலை நடத்தும் விதம், உண்மையில் மனிதாபிமானமற்றது. சென்னை பொது மருத்துவமனை சவகிடங்கில் ஒரு நாள் இருந்தால் அதன் உண்மை, வலி தெரியும். என்ற உங்கள் கருத்தோடு துளசி டீச்சரும் ஏற்கனவே சென்னையின் மரண அவலங்களை பதிவு செய்திருக்கிறார்.

//இந்தியாவில் பலரும் பலவிஷயத்துக்கும் இலஞ்சம் வாங்குகிறார்கள், சவுதியில் மன்னர் குடும்பம் மட்டுமே அனைத்து விஷயத்துக்கும் இலஞ்சம் வாங்கிவிடுகிறது, மற்றவர்கள் வாங்கினால் அதோகதிதான். அதனால் இந்தியாவில் இலஞ்சம் சவுதையை விட அதிகம் இருப்பதை போல வெளித்தோற்றத்தில் தெரிகிறது. //

இந்தக் கருத்து சவுதிக்கு பொருந்துமா என்பது தெரியவில்லை.நம்மூரில் மேசைக்கு அடியில் நிகழும் Kick backs மேசையின் மீதே சதவீத ஒதுக்கீடு என்ற முறையில் நாட்டின் பெரும் திட்டங்களில் நிகழ்ந்து விடக்கூடும்.ஆனால் பெட்ரோலிய வருமானத்தின் தொகையை நாட்டின் நலன் திட்டங்களுக்கும் செலவிடுகிறார்கள் என்பதும் உண்மை.குவைத் ஒரு படி மேல் போய் நாளை பெட்ரோல் தீர்ந்து விட்டால் எதிர்கால சந்ததி என்ன செய்யும் என்ற தூரப்பார்வையில் விற்கும் பெட்ரோல் பேரலின் ஒரு விகிதாச்சார டாலரை குவைத் பண்ட் என உருவாக்கி வளர்ச்சியற்ற நாடுகளின் உதவிக்கு கடன் வாங்கிக்கொள்ளும் படி உதவி வருகிறார்கள்.

நீங்களும் அரேபிய நாடுகள் குறித்த கலந்துரையாடலில் தொடர்ந்து கலந்து கொள்கிறீர்கள் என்று அவதானிப்பதால் மொத்த வளைகுடா நாடுகளுக்கான எதிர் விமர்சனங்களும் சவுதியின் காரணம் கொண்டே எழுகிறதென நினைக்கின்றேன்.

இந்தியாவில் இலஞ்சம் சவுதியை விட அதிகம் இருப்பதை போல வெளித்தோற்றத்தில் தெரிகிறது என்பது எப்படியிருக்கிறதென்றால் வக்கீல்  குற்றம் செய்த தனது கேஸ்காரருக்கு எப்படியும் வெற்றியைப் பெற்றுத்தந்து விடவேண்டுமென்று வாதாடுகிற மாதிரி இருக்கிறது:)

வருண்: மல்லுக்கட்டனுமின்னே சுத்துவீங்களா? இல்ல சுத்திகிட்டே மல்லுக்கட்டுவீங்களா?போன பின்னூட்டத்துல வேகநரிகிட்ட உங்களுக்குத்தான் சிபாரிசு செய்து பேசினேன்.இப்ப வேகநரிக்கு வக்காலத்து வாங்கறேன்.ஓடி ஓடிப் போய் பின்னூட்டம் போடறதால அவர் வேகநரின்னு ஆங்கிலத்தில் பெயர் வச்சுகிட்டார்.பின்னூட்டங்களில் ஆங்கில புலமை காட்டுவதில்லையே என்பது அவரது வாதம்.முன்னாடியெல்லாம் ஒருத்தர திட்டனுமின்னா ஆங்கிலத்தை பயன்படுத்துவீங்க.இப்ப தமிழ்பாண்டித்யமும் தெரியுது.எப்படித்தான் எல்லோருடமும் வாங்கி கட்டிக்கனுமின்னே அலட்டிக்காம சிக்ஸர் அடிக்கிறீங்களோ! வேகநரியெல்லாம் ஜுஜுபி.போன வருசமோ அதுக்கு முந்தின வருசமோ  ஒருத்தர்(பெயர் மறந்து விட்டதே) உங்க பதிவில் அசராம ஆடுனார் பாருங்க.அது ஆட்டம்:)

ராவா இருந்தாலும் சரக்கு நல்லா இருக்குதுங்கிற மாதிரி காட்டுமிராண்டி நாட்டுல போயி எதுக்கு நிக்கிற?  என்ற கேள்வி சரியான ஒன்றே.

மறுபடியும் உங்க பின்னூடத்துக்கான தொடர்ச்சி

எதையாவது உளறுவதற்கும் கூட மேதாவித்தனம் தேவையானதுதான் வருண்:! அதுவும் இரவலாக தேடி கண்டுப்டிச்சாலும் கூட அதனை எழுத்துக்குள்,பதிவுக்குள் கொண்டு வருவது கடின உழைப்பு.அதனைக் கொச்சைப்படுத்தாதீங்க.முடிஞ்சா வவ்வாலின் பதிவுகளில் உள்ள குறையை அவரது பதிவுகளில் சுட்டிக்காட்டுவது உங்க புத்திசாலித்தனத்தைக் காட்டும்.

உங்கமாதிரியே வவ்வாலும் எதிர் விமர்சனங்களை நோக்காமல் தனது கருத்தை ஆழமாக எங்கேயும் முன்வைப்பவர். என்பதால் வாங்கி கட்டிக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் உண்டாக கூடும்.ஆனால் கருத்து விவாதத்தில் யார் வெல்கிறார்களா என்பதே முக்கியம்.வவ்வால் செய்வது சண்டித்தனமென்றால் நீங்க செய்வதற்கு பெயர் என்னங்க வருண்?உடனே முன்பு நீங்க சொன்ன மாதிரி வவ்வாலுக்கு சார்ந்து பேசுறேன்னு சொல்லாதீங்க.அவரிடமும் சில சமயம் சண்டித்தனம் வெளிப்பட்டாலும் உங்க சண்டியர்தனம் நீங்க சொல்லும் பட்டைச் சாராயம் மாதிரியே ரொம்ப ராவாத்தான் இருக்குது:)

வவ்வால்:அப்பாலிக்க ஒப்பாறி வச்சு அய்யோ வவ்வால் என்னை கொல்லுறான்னு ராஜ நடைக்கிட்டே பஞ்சாயத்து வைக்க கூடாதுங்கிற வரிகளைப் படிக்காமல் மனதில் இருந்தைதான் மேலே வருணுக்கு பதில் சொன்னேன்:).உங்க இரண்டு பேருக்கும் என்னதான் பிரச்சினை?யார் எட்டடியிலிருந்து பதினாறு பாய்வதென்ற போட்டியா?அல்லது பேட்டைக்கு சண்டியர் யாருன்னா? இருவருக்குமான பதிவுலக நிலைப்பாடு இதுதான்னு தெரிந்த பின்பும் கண்டுக்காம விலகிச் செல்வதை விட்டு விட்டு இது என்ன சின்னபுள்ளத்தனமா ஒருத்தருக்கு ஒருத்தர் எகிறிகிட்டு.வருண் சொல்லும் கருத்துக்களில் நியாயமில்லாமலில்லை.அதே போல் இந்தியாவை கொண்டு வந்து முட்டுக்கொடுக்காமலிருந்தால உங்கள் விவாதத்திலும், சகோ.சார்வாகன் வாதத்திலும் பொருள் இருப்பதோடு சரியான விவாதமும் அதுவாகத்தான் இருக்க முடியும்.ஆனால் நடைமுறை சாத்தியம் என்ன என்று ஒப்பிடும் போது இந்திய ஒப்பீடு உங்கள் கருத்துக்களை பின் தள்ளி விடுகிறது என்ற உண்மையையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆமா!ஓல்டு மாங்கா ன்னா:? மாங்கேதானா,மாங்கா அல்லது மிலிட்டரியா:)

வருண்:எதுக்குய்யா காட்டுமிராண்டி நாட்டுக்குப் போயி வாழனும்?நம்ம ஊர்லேயே இருக்க வேண்டியதுதானே என்ற உங்க கேள்வியும் பதிலும் சரியே.ஆனால் வெற்றிக்கொடு கட்டு படம் வந்த பின்பும் காட்டுமிராண்டி ஊருக்குப் போவதில் மாற்றமிருக்கிறதா என்றால் இல்லையென்பதுதான் உண்மை.

பச்சை லேபிள் ஜானிவாக்கரை ஏர்போர்ட்ல பார்த்தேன்.பிளடி மேரியக்கூடத் தெரியும்.யாரது க்ளெண்டிஃபிஷ் மாரி?

வேகநரி:வவ்வாலும்,வருணும் நல்லா விவாதம் செய்றாங்க என்ற போதிலும் அவஙக மொழி நடை  பதிவின் விவாத களத்தை திசை மாற்றுகிறது என்பதில் சந்தேகமேயில்லை.கூட மத்தளம் போடும் நீங்களும் அதே தவறைத்தான் மென்டலான்னு கேள்வி கேட்டவரையே மென்டலான்னு வடிவேலு மாதிரி திருப்பிக் கேட்கிறீங்க;கச்சேரி நடத்துறவங்களையே பூட்டி வச்சிட்டா அப்புறம் உட்கார்ந்து சங்கீதம் கேட்பது யார்?மாடரேசன் பதிவுலகில் இதுவரை எனக்குப் பிடிக்காத வார்த்தை..போகும் வரை போகட்டும்.

வருண்: இதோ மேலே வேகநரி சொல்லி முடிக்கலை.நீங்க கச்சேரியை ஆரம்பிச்சிட்டீங்க.பொறம்போக்கு ஐடி வச்சிருக்கிறது தப்புன்னா முதலில் கூகிளைத்தான் திட்டனும் நீங்க.பக்கத்துலதானே இருக்கிறீங்க.ஒரு எட்டு கூகிள் ஆபிஸ் போயிட்டு வர்றது:)

வவ்வால்: இதோ வந்துட்டாரு எதிர்ப்பாட்டு வில்லு:)வாய் மட்டும் வாஷிங்க்டன் வரைக்கும் கிழியுது:-)) எங்கிருந்துதான் சுரம் பிடிக்கிறீங்களோ:)

இஸ்லாமியர்கள் அமெரிக்கா போனால் ஏர்ப்போர்ட்டில் கடுமையாக நடத்துறாங்கன்னு நிறைய பேர் அமெரிக்காவே போவதில்லை.என்னோட சின்ன பாஸே அமெரிக்காவில் படிச்ச படிப்பை விட்டுட்டுத்தான் இங்கே என்னோடு குப்பை கொட்டுகிறார்.9/11 க்குப் பின் விரும்பியோ அல்லது விரும்பாமலோ அமெரிக்காவை விட்டு விலகியவர்களின் எண்ணிக்கை அதிகம்.அதேபோல் போகவிரும்பாதவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

அதே போலவே இங்கு இருந்தும் காட்டுமிராண்டி நாட்டுக்கு ஒரு கும்பல் போகுது, என்ன செய்ய,அதுக்காக சாகடிச்சா கேட்காம இருப்பாங்களா? என்ற உங்கள் கேள்வி நியாயமானதுதான்.ஆனால் சில நேரங்களில் கேட்காமல் இருக்கின்ற சூழலே என்பதால் உங்கள் விவாதம் வெற்றி பெறுகிறது.இதோ இந்தப் பின்னூட்டத்தை தட்டச்சு செய்யும் போது உபவாச காலங்கள் புனித நாட்களாக கருதப்படும் இந்த நேரத்திலும் Raped victims cry for help என்ற தலைப்போடு இரண்டு பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட irreversible திரைப்படம் மாதிரியான  செய்தி வருகிறது. இது மொத்த மக்களின் குணநலன் பிரதிபலிப்பாக இல்லாத போதும் இந்தியாவில் இதுபோன்ற தவறுகளுக்கு குறைந்த பட்சம் சட்டப்படி குற்றங்களுக்கான புகார் செய்து விடமுடியும்.

வருண்:அவன் நாட்டு சட்டம் பிடிக்கலைனா போகக்கூடாது, அம்புட்டுத்தான். இல்ல நான் போவேன்னு நின்னா, அது முட்டாள்த்தனம். என்பதை மேலே அமெரிக்காவிலிருந்து 9/11க்குப் பின் திரும்பியவர்களோடு ஒப்பிடலாம்.நிறைய பேர் அப்படி வந்திருக்காங்க.ஆனால் இந்தியர்களும் அப்படி செய்ய முடியாத பொருளாதார சூழ்நிலைகள் இன்னபிற காரணிகள் இருக்கின்றன என்பதே பிரச்சினை.

சுவனப்பிரியன்: நீங்க வருணுக்குப் போடும் அடிச்சு விளையாடுறீங்க முதுகு தட்டல் கருத்து சார்ந்து சரியானதே.இந்திய பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்கும் ஒரு காரணியாக வளைகுடாப் பொருளாதாரம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.வீட்டுப் பணிப் பெண்கள் உட்பட முடிந்தவரை பணத்தை தமது நாட்டுக்கே அனுப்பி விடுகின்றனர்.

இந்தியர்களை அரபு நாட்டுக்கு அனுப்ப நம் அரசு தடை விதித்தால் அவர்கள் பங்களாதேஷிலிருந்தோ பாகிஸ்தானிலிருந்தோ ஆட்களை எடுத்துக் கொள்வார்கள். இந்த வகையிலும் நஷ்டம் நமக்குத்தான். என்ற உங்கள் கருத்தை நானும் பிரதிபலித்திருக்கிறேன்.

ஒரு அரபி பணிப்பெண்களிடம் தவறாக நடந்தால் அதற்கான தண்டனை பெற்றுத்தரும் சட்டமுறை இல்லையென்பதுதான் வவ்வாலின் வாதம்.நீண்ட நேர பணி,உடலியல் தவறுகள் அரபுநாடுகளில் இல்லாமல் இல்லையென்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டிய வாதமே.ஆண்களை விட பெண்களே தூதரகங்களில் அதிகம் தஞ்சம் புகுவது இதற்கு சாட்சியாக இருக்கின்றன.

ரியாஸ்: நீங்களுமா திட்டக் குழுவில் சேர்த்தி!அவ்வ்வ்வ்வ்.

வருண்: தவறில்லாத இடம் ஏது என்பது மேல்பார்வைக்கு சரியாக இருந்தாலும் இந்தியாவில் கத்த முடியும்,சண்டை போட முடியும்,போலிசுக்கு புகார் செய்ய முடியும்.தர்ணா செய்ய முடியும்,முடிந்தளவுக்கு தவறுக்கு ஆமை வேகத்தில் தண்டனையும் வாங்கித் தந்து விடமுடியும் என்பதால் இந்தியா உசத்தி.இங்கே சட்டப்படி வேகமாக தண்டனை வாங்கிக்கொடுக்கும் சட்டவரைவுகள் இருந்தாலும் இறுதி வாய்ப்பான நீதிமன்ற படிக்கட்டுக்களை நெருங்குவதில் சிரமங்கள் உள்ளன என்பதால் உடனடி நிவாரணங்களுக்கான சாத்தியங்கள் இல்லாமல் போகிறது.

இன்னொரு நாட்டுக்குப் போனால் அங்கே உள்ள சட்டதிட்டங்கள் படி நடந்தால் பிரச்சினை வராது என்பது நீங்கள் குறிப்பிடும் கள்ளக்குடி,தப்பு செய்வது  போன்றவற்றில் உங்கள் வாதம் சரியானது.

வவ்வால்:பின்னூட்டங்கள் முடிஞ்சிடுச்சுன்னு நினைச்சா இப்பத்தான் பார்ம் ஆகிறீங்கன்னு நீங்களும் வருணும் பார்ம் ஆகுறதைப் பார்த்தா கருத்துக்களிடையேயும் நீங்க சொன்ன வாய் வாஷிங்கடனுக்கும் பரங்கிமலையையும் தாண்டி கூவத்து பாலம் வரைக்கும் வந்துடுச்சு.இனி தொபுக்கடீர்ன்னு கீழே குதிக்க வேண்டியதுதான்.இரண்டு பேருக்கும் விவாதிக்கிற திறமை எவ்வளவு இருக்குதோ அந்தளவுக்கு முண்டாசு தட்டறதிலேயும் குறைவேயில்லை.அந்தக்கடைசிக்கும் இந்தக்கடைசிக்கும் உட்கார்ந்துகிட்டே இவ்வளவு வாயாடித்தனம்ன்னா சட்டசபை சண்டைகளையெல்லாம் குறை சொல்லவே முடியாதுங்கிற மாதிரி இருக்குது உங்க வாய்ச்சண்டை. இருவருக்குமிடையேயான பொது வாக்கு வாதத்திற்கு பரம்பரையையெல்லாம் ஏன் இழுக்கனும்?இளுக்கு.
வருண் வாயாடும் சந்தர்ப்பத்தையும் நீங்களேதான் உருவாக்கிக் கொடுக்கிறீங்க.

மீண்டும் உங்கள் பின்னூட்டத்துக்கே தொடர்ச்சி

கமரூதீன் நிலையிலிருந்து கொஞ்சம் யோசியுங்கள்.நீங்க சுவனப்பிரியனை வாக்குவாதத்திற்காக கேட்கிற கேள்வி சரி மாதிரி தோன்றினாலும் மனிதாபிமான அடிப்படையில் சரியாக இருக்காது.நிகழ்வுகள் எதுவென்று சரியாக நமக்குத்தெரியாது.ஆனால் ஒருவருக்கு உதவி செய்யும் முயற்சியை விமர்சனம் செய்வானேன்?

வருண்:யாருக்கு மறை கழண்டுடுச்சுன்னு பின்னூட்டங்களைப் படிப்பவர்களுக்கே இப்ப மறை கழண்டிருக்கும்:) சங்கரராமன் கொலை வழக்கில் சட்டம் இதுவரை வளைஞ்சு கொடுக்குது என்பது மட்டும் உண்மை.தெய்வம் இன்றும் கொல்லவில்லை.அரசு நின்று கொல்லுமா என பார்க்கலாம்.

வவ்வால்:கமரூதினுக்கான தண்டனையாகட்டும் அல்லது சங்கர ராமன் கொலை வழக்காகட்டும் உங்கள் நிலைப்பாடு இரண்டுக்கான விமர்சனங்களோடு அடிப்படையில் மனித நேயம் என்பதை உங்களுக்கான ஏகமொத்த பதிவுலக பின்னூட்டங்கள் பறைசாற்றும் என்பதில் சந்தேகமில்லை.வக்கீலுக்கான பணம் செலவழிக்கும் திறமையைப் பொறுத்தும்,குற்றத்தின் தன்மை பொறுத்தும் தீர்ப்புக்கள் எழுதப்படுகின்றன. ஆனால் கமாரூதினுக்கு ஒரு சட்டம்,கந்தசாமிக்கு ஒரு சட்டமென பாகுபாடுகள் இல்லை.குற்றத்தின் தீவிரத்தன்மையாக கொலைக்குற்றம், போதை மருந்துகள் கடத்தல் போன்றவற்றிற்கு கடும்தண்டனைகள் உள்ளன.இரண்டு வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன்.அரச பரம்பரையின் இளம் ஷேக் ஒருவனே போதை மருந்து வியாபாரத்தை இந்தியாவில் ஆந்திராவை சார்ந்த வாகன ஓட்டி உட்பட பெருமளவில் செய்ததை வாகன ஓட்டி போலிஸால் அகப்பட்டு  குற்றம் நீதிமன்றம் வரை சென்று இளம் ஷேக்குக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. 
சில நியாயம்,போராடும் வலிமையைப் பொறுத்து நீதிமன்றத்தில் வென்று விடலாம்.என்னை ஏமாற்றியதுமில்லாமல் நாய்க்குட்டி வளர்த்தற்காக ஒரு மணிநேரம் கம்பியில்லா லாக்கப்பில் என்னை நிறுத்தி வைத்த பக்கத்து வீட்டு சேட்டனுக்கு தண்டனை வாங்கித் தந்ததை முன்பு பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளேன் என்பதும் கூட கொசுறு தகவல்:)

கைக்கு கை,கண்ணுக்கு கண் என்ற தண்டனையிருந்தால் உலகில் பார்வையுடையவர்களாக ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்ற காந்தியின் வாக்குப்படியென்றால் மரண தண்டனை உட்பட காட்டுமிராண்டி சட்டம் என்பதில் உங்கள் விவாதம் வெல்கிறது.

சுவனப்பிரியன்:கமரூதின் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டாரோ அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சிறைவாசம் அனுபவிக்கிறாரோ அவரை சிறைத்தண்டனையிலிருந்து விடுவிக்க நீங்க போட்ட பதிவுக்கு பாராட்டுக்கள்.விவாதத்திற்கு வேண்டுமென்றால் வவ்வாலின் வாதம் சரியாக இருக்ககூடும்.கமரூதீனின் பெற்றோர்,உறவினர்கள் நிலையிலிருந்து கமரூதீன் பிரச்சனையை அணுகவேண்டும்.

ஏற்கனவே பதிவும்,பின்னூட்டங்களும் ஜவ்வுமிட்டாய் மாதிரி இழுத்துகிட்டுப் போகுது.ஆத்தாவையும்,தாத்தாவையும் இங்கே இழுத்தால் இந்த விவாதக்களம் இப்போதைக்கு முடிஞ்ச மாதிரிதான்:)

வேகநரி:வந்துட்டீகளா ஷேக்சாபோன் வாத்தியக்காரரே:)செந்துறை என்ற தமிழ்கிராமத்தை சார்ந்த கமரூதீன் என்று நீங்க துப்பறிவதைப் பார்த்தால் நீங்க என்னமோ எனக்கு தெரிஞ்ச நரி மாதிரி தெரியுதே!ஐ.பி இன்னபிற துப்பறியும் உபகரணங்கள் மீதெல்லாம் எனக்கு விருப்பமே கிடையாது.தொடர்ந்து பின்னூட்டம் போடுங்கள்.நரியை லபக்கென்று பிடித்து விடலாம்:)

சிறைத்தண்டனை பல அனுபவத்தை கொடுக்குமென்பதால் யாருக்கும் ஏண்ண மாற்றங்கள் வருவது இயல்பானதுதான்.

வருண்:மறுபடியும் சங்கரராமனா!நீங்க சொன்னமாதிரி அவரோட ஆவி அலையறதுங்கிறது உண்மையாக இருக்குமோ?
உங்களுக்கு வவ்வால்,வேகநரின்னு இரண்டு (அப்)பிராணிகள் கிடைச்சுருக்குங்ற குசில எப்படியாவது சூப்பு வச்சு குடிச்சிடனுமின்னு சுத்திறீங்க போல இருக்குதே:)சரி இவங்கதான் உங்களைக் கடிக்கிறாங்கன்னா பார்ப்பான்ங்கிற வேதாளம் எங்கே வந்து தொலைந்தது?வருண் நீங்க நல்லவரா இல்ல கெட்ட கெட்டவரா?
என்னமோ நரிதான் தண்டனையை ஒழிச்சு வச்சிருக்கிற மாதிரி உண்மையை சொல்லு!!கொலை செஞ்சவன் சாகிறதுக்காக காத்து இருக்கீங்களா??ன்னு கொட்டையெழுத்து போடுறீங்க:)
கிரிமினல் சட்டத்தின் ஓட்டைகளையெல்லாம் நீங்களே சொல்லிக்கொடுத்து கேஸை கவிழ்த்துப்போடுவேள் போல இருக்கே!

Srinivasan: You sound great but an applause in english also prohibited here:) However your comment of "there are people different in all place" is valid here.Thank you sir.

வவ்வால்: வருணுக்கு சரக்கு தீர்ந்து போச்சுன்னா வேணுமின்னா சொல்லுங்க.சுவனப்பிரியன் வெறும் ஹலால் பீர்தான்.இப்ப அதுவுமில்லாமத்தான் இருக்கார்.

”கமாருதீன் நிராபராதி என்று சொன்னால் ,சவுதி சட்டம் காட்டுமிராண்டித்தனமானது என்பது உண்மை ஆகிவிடும்,

சவுதி சட்டம் சரியானது என்றால் கமரூதீன் குற்றவாளி என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்”


உங்களுக்கும் ஜெத்மலானிக்கும் ரியால் கொடுத்து டிக்கெட் எடுத்து சவுதிக்கு அனுப்பித்தான் வாதாட வைக்க வேண்டும்.அருமையான வாதம்.என்ற போதிலும் நாம் அனைவருக்குமே நம்மையறியாமல் இந்திய,அரபு தேச ஒப்பீடுகள் வந்து விடுவதால் ஒரு தேசத்தின் குறை இன்னொரு தேசத்துக்கான வலுவாகவும் இன்னொரு தேசத்தின் வலு மற்றொரு தேசத்தின் குறையாகவும் காணப்படுகிறது.இந்திய பிரச்சினையை இந்தியாவொடும்,அரேபிய பிரச்சினையை அரேபிய தேசம் சார்ந்து விவாதித்தால் மட்டுமே ஒரு நிலையான தீர்ப்புக்கு நாம் வர இயலும்.

வருண்: தட்டச்சில் கீழே நீங்க நின்று கூவுவதை நான் கவனிக்காமலே இந்திய பிரச்சினையை தனியாகவும் அரேபிய பிரச்சினையை தனியாகவும் பார்க்கலாமென்றேன்.கமரூதீன் பிரச்சினையென்றாலும்,சங்கரராமன் பிரச்சினையென்றாலும் அவரவர்களுக்கான துயரப்பிரச்சினை.என்ற நினைப்பில் பேசுவோமே?உங்கள் மொழியியல் நீங்கள் வைக்கும் கருத்தின் தரத்தை குறைக்கிறது என்பதோடு எழவு சொற்கள் நீங்கள் கமரூதீனுக்கும்,சங்கரராமனுக்கும் வாதாடுகிறீர்களா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தாமலில்லை.

சுவனப்பிரியன்: சகோ.வவ்வாலின் வாதம் நியாயமான ஒன்றே.ஆனால் கமரூதீனுக்கும்,அவர் குடும்பத்துக்குமான மனிதாபிமான உதவிகளை யோசிப்போம்.குறைந்த சம்பளத்திற்காக பீகாரிகளை வேலைக்கு அமர்த்திக்கொள்வது இப்பொழுது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.இதனை எப்படி கையாள்கிறோம்,உணர்கிறோம் என்பதைப் பொறுத்து கிட்டத்தட்ட அரேபிய நாடுகளுக்கான உள்ளூரி தீர்வுகள் தெரிந்து விடும்.

வேகநரி: கிரியா ஊக்கியா திரி பத்த வைக்க ஒரு தீர்மானமாகத்தான் சுத்துறீங்க.வருண் உங்களை திட்டுவது தப்பேயில்லைங்கிற மாதிரியே அவருக்கு எதிர்க்கேள்வி போடறீங்களே!எப்படித்தான் இப்படியெல்லாம் பின்னூட்டம் போட மனசு வருதோ:(

இக்பால் செல்வன்: சகோ.சுவனப்பிரியனுக்கு நீங்க வைக்கும் கேள்வி சரியாக இருந்தாலும் வேதங்களின் காலமும் இந்துக்கள் என்பவர்களின் வரலாற்றின் ஆதி மூலம்தான்.ஆனால் நம்மைப்பொறுத்த வரை வரலாறு சைவ,சமண மதங்களின் போராட்ட காலமாகவும் தற்போதைய தசாதவர ராமனுஜ நம்பியாக கமலஹாசனின் நடிப்பு அரிதாரமும் அதையும் கூட பின் தள்ளிய இலங்கைப் போரட்ட சமகாலமே.

மதங்கள் குறித்தும் குறிப்பாக இஸ்லாமியம் குறித்தும் உங்களுடன் விவாதிப்பது சரியாக இருக்கும்.தற்போதைய சூழலில் 9/11க்குப் பின்பு இஸ்லாமியத்திற்கு எதிரான குரல்கள் அதிகமாகவே ஒலிக்கின்றன. பதிவுலகமும் அதற்கு விதிவிலக்கில்லாமல் சார்ந்தும்,எதிர்த்தும் குரல்கள் ஒலிக்கவே செய்கின்றன.பைபிளின் பழைய ஏற்பாடு மாதிரி புனித நூல் என்றளவில் வார இறுதி பிரார்த்தனைகளில் எடுத்துக்காட்டாக மட்டும் இருந்தால் பரவாயில்லை.இதுவே வாழ்க்கை முறை,சட்ட முறை என்கிற போது நவீன வாழ்க்கைக்கான முரண்பாடுகளுடன் மோத வேண்டிய அவசியமிருப்பதால்தான் பிரச்சினைகள் உருவாகின்றன.ஆனாலும் இஸ்லாமியத்தின் மறுபக்கங்களான மென்மையான தன்மைகளும்,உலகம் சார்ந்த பெட்ரோலிய சார்புகளும் இன்னும் இஸ்லாமியத்தை உலக மதங்களில் ஒன்றாக தக்கவைத்துக்கொள்ளூம்.

பெட்ரோலிய வளங்கள் இல்லாமல் ஆனால் பெட்ரோலிய விலையை நிர்ணயிக்குமளவுக்கும்,திட்டமிடல்,கடின உழைப்பாலும் முன்னேறிய சிங்கப்பூர் ஆசியநாடுகளில் ஒரு வித்தியாசமான நாடுதான்.

வவ்வால்: எங்கே இடி இடிச்சு மழைத்தூறல் மட்டும் வீசுதேன்னு பார்த்தேன்.வருண பகவானை தேடிகிட்டு ஓடியாங்க! சு.பி ஒன்னும் சுண்ணாம்பு இல்ல.நீங்கதான் இருட்டுக்குள்ளேயே சுத்திகிட்டிருந்துட்டு வெள்ளையா இருப்பதெல்லாம் சுண்ணாம்புன்னு நினைக்கிறீங்க. வேகநரி,வருண்,உங்ககூட ஒப்பிடும் போது அவர்மீதான தாக்குதலுக்கும் அவர் பொறுமையாகத்தானே பதில் சொல்கிறார்.ஹதீஸ்களை இடைச்செறுகல்கள் செய்தாலும் திட்டாமலே பதில் சொல்வது அவரது பலம் என நினைக்கிறேன்.

வேதாளம்தான் முருங்கை மரமேறுமென விக்கிரமாதித்தன் கதைகள் சொல்லுது.வவ்வாலும் சுத்தி சுத்தி காட்டுமிராண்டி காட்டுக்குள்ளேயே சுத்துதே.டேவிட் ஆட்டன்பரோவை விட்டுத்தான் இன்பிரா ரெட் காமிராவில் வவ்வாலைப் புடிக்கனும்.ஆஹா!பீகாரிகளுக்கான மாற்றுப் பார்வையில் மறுபடியும் ஒரு பாயிண்ட் ஸ்கோர் செய்றீங்க.அருமையான வாதம்.

சுவனப்பிரியன்: சகோ.இந்திய சட்டத்தில் ஓட்டைகள் இருக்கின்றன.ஆனால் வாதாடவும்,போராடவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பது வவ்வாலின் வாதம்.நியாயமாகப் பார்த்தால் கோயில்களுக்குள் துப்பாக்கியே போகக்கூடாது.ஆனால் வி.ஐ.பிகள் பாதுகாப்புக் கருதி காவல் சகிதம் கோயில்களுக்குப் போய் பிரார்த்தனை செய்து விடலாம்.இப்போ வி.ஐ.பிக்களுக்கு தனி மரியாதை கிடையாதுன்னு கோர்ட் மூலமாகவே சொல்லி வச்ச மாதிரி சட்டங்களை தேவைக்கேற்ப வளைத்து விட முடியும்.இவை ஷரியத் சட்டங்களால் இயலாதல்லவா?

வவ்வாலுடன் சண்டை போட வருணை இழுக்காதீங்க.இருவரும் சேர்ந்தால் எனக்குத்தான் டங்குவார் அவிறுது.

வருண்: இதோ சுவனப்பிரியன் சொல்லி முடிக்கல.உள்ளேன் அய்யா சொல்லிட்டார்:)வவ்வாலுக்கு காட்டுமிராண்டி சட்டம்ன்னா வருணுக்கு சங்கரராமன்.காட்டுமிராண்டி சட்டமும் சரி,சங்கரராமனின் ஆவியும் சரி சும்மா விடாது தெரியுமோ?வெள்ளைக்காரன் சட்டத்துக்கு தாத்தாதான் புதுசட்டம் வரையனுமின்னா நிறைய தாத்தாக்கள் புது சட்டவரைவுகள் மாற்றங்கள் செய்திருக்காங்க. செய்றாங்க.செய்வாங்க.காட்டுமிராண்டி சட்டம்ன்னு வவ்வால் சொல்வதும் ஒரு தாத்தா வரைஞ்சது.அதுவும் வெள்ளக்காரன் காலத்துக்கு முந்தியோ முந்தி.எது சிறப்புன்னு நீங்க நினைக்கிறீங்க வருண்.வவ்வால் மேல இருக்குற கொடைச்சலுக்கு பதில் சொல்லாமல் நீங்க உணர்வதை சொல்லுங்க.

நல்லாவே கேள்வி கேட்டுகிட்டு வந்து திடீர்ன்னு இதோ துவேசத்துக்கு மாறிட்டீங்க.ஊரெல்லாம் பட்டம் தருகிறேன் பேர்வழின்னு எத்தனை பேர் சுத்துறீங்க! திட்டல் மன்னன் வருண என்று யாராவது பட்டம் கொடுங்களேன்.
வேகநரி மேலும் ஒரு பிராண்டலா?வேகநரிக்கு தேவைதான்.

கோவி கண்ணன்: அதானே!உங்க கண் சுவனப்பிரியன் மேல்தானே இருக்கும்:) நாலு ஸ்வரங்கள் பாடறதுன்னா குளியலறையில் பாடுபவர்கள் கூட பாடகர்கள்தான்.ஆசையப்பாரு!!பூணுல் போடனுமாம்!ஏன் நீங்க முதலில் போட்டுக்காட்டறது:).

வவ்வால்:சரக்கு காலியாயிடுச்சு சரக்கு காலியாயிடுச்சுன்னே சொல்லிகிட்டிருக்கீங்க!நீங்க கேட்காமலேதானே வருண் ஊத்திகிட்டிருக்கார். என்னா போதையோ இருவருக்கும்.இதுல சு.பியை வேற கம்பெனி கேட்பது கொடுமையிலும் கொடுமை:)

வருண்:ஒலிம்பிக்ஸ் போனா பரிசு நிச்சயம்.இங்கே முதல் பரிசு யாருக்குன்னு நீங்க இரண்டு பேரும் முட்டிக்கிறதுதானே பிரச்சினை.

வந்து சேர்ந்தீங்க பாரு இரண்டு பேரும்.கூடவே வேகநரியும் நேரம் பார்த்து பிடில் வாசிக்கவும்,மத்தளம் கொட்டவும்,சண்டை போட்டு கருத்து மோதல் செய்தவர்களுக்கும் மோதாமலே நாசுக்காக கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.



.




.





Sunday, August 5, 2012

சென்ற பதிவின் பின்னூட்ட நண்பர்களுக்கான பதில் -பகுதி 1

சென்ற பதிவின் சாரத்துக்கு பல கோணங்களில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தின அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.பதிவிலேயே எனது பதிலை தெரியப்படுத்தினால் நான் தாளிக்கிற வேகத்துக்கு ஒரு வேளை பின்னூட்ட பகுதி இன்னும் நீளமாக போய் விடுமோ என்ற கருதி பின்னூட்டமிட்டவர்களின் வரிசைப்படி ஒவ்வொரு கருத்துக்கும் எனது கருத்தை இங்கே பதிவு செய்து விடுகிறேன்.

இப்படித்தான் முகவுரை போட்டு முடிந்த வரை அனைவருக்கும் பதில் சொல்லி விடலாமென்று நினைத்து துவங்கினேன்.பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டே வந்து மீண்டும் ஒரு முறை மீள் பார்வை செய்து இணைத்து விடலாமேயென்று பார்த்தால் 42லிருந்து 47 ஆகி மறுபடியும் இன்று பின்னூட்டப் பகுதியை நோக்கினால் 47லிருந்து 84க்கு தாண்டி விட்டது. பின்னூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அடிப்படையில் நட்பின் காரணமாகவும் அதை விட சமூக அக்கறையின் காரணமாக பின்னூட்டக் கருத்தை தங்கள் கால நேரத்தை செலவழித்து வெளிப்படுத்துகிறார்கள் என்று உணர முடிகிறது.அதே சமயத்தில் தனி மனித தாக்குதல்களோடு எகிறுவதன் காரணமாக பின்னூட்ட விவாதத்தின் அழகியல் குறைந்து விடுகிறது. இருந்தாலும் கட்டற்ற மனக்கோபங்களின் வெளிப்பாடு என்ற அடிப்படையில் அவற்றை அங்கீகரிக்க விட்டாலும் கோபங்களுக்கூடேயான கருத்துக்களின் வெளிப்பாடுகள் கருதி அவற்றையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டிய கட்டாயமிருக்கிறது.

ஒவ்வொருவர் வெளியிட்ட பின்னூட்ட வரிசையில் பின்னூட்டக்காரர்களின் பெயர்களுடன் எனது மறு கருத்துக்கள் இங்கே ஆரம்பம்.

உண்மைகள்: தொடுப்பை பதிவில் இணைக்க இயலாமல் போய் விட்டதை பூர்த்தி செய்ததற்கு நன்றி.முன்பு தவ்ஹித் ஜமாத்காரர்கள் மதப்பிரச்சாரங்களின் மூலமாக மனிதர்களை மதமாற்ற மூளை சலவை செய்கிறார்கள் என்ற விமர்சனம் இருந்தது.இன்னும் இருக்கிறது.மதம் வேறு, ஆனால் ஒரு தனிப்பட்ட மனிதரின் மரணத்திற்கு செய்யும் உதவி மகத்தானது என்பதை உணர்வு பூர்வமாக உணர்கிறேன்.சம்பந்தமில்லாத ஒருவராக உதவி செய்யும் மனப்பான்மை இருந்தாலோ அல்லது ஒருவரின் நண்பராக இருந்தாலும் கூட தூதரக சட்ட முறைகளுக்கு சமூக அமைப்பு சார்ந்த குழுக்களின் மூலமாக அணுகுவது எளிதாக இருக்கும்.அந்த விதத்தில் தவ்ஹித் ஜமாத்தின் சமூக அக்கறைப் பணியைப் பாராட்டுவது தகும்.மதம் வேறு மனிதாபிமானம் வேறு என்ற இரு நிலைகளில் எனது பின்னூட்டத்தை காண வேண்டுகிறேன்.நன்றி

ரியாஸ்: வேகநரி எங்கேயிருந்து,எந்த காலசூழல்களின் பாதிப்பால் தமது கருத்தை வெளிப்படுத்துகிறார் என்று தெரியவில்லை.சிலருக்கு தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள இயலாத சூழல்கள் இருக்கலாம்.கூடவே இஸ்லாத்துக்கு எதிரான வாந்தியெடுக்கும் அடிப்படைக்காரணங்களும் இல்லாமல் இல்லையென்ற போதிலும் கோபங்களின் மீதான விமர்சனங்கள் எந்த நல்விளைவுகளையும் ஏற்படுத்தி விடமுடியாது என நினைக்கிறேன்.

சுவனப்பிரியன்: சகோ.நீங்கள் குறிப்பிட்ட மயான அமைதிகளில் வாழ்க்கையின் முரண்களை தாண்டி மனிதாபிமானமே வெல்கிறது.

வவ்வால்: சிங்கப்பூருக்கு மாறாக அரபு தேசங்கள் ஆபத்தான வேலை துவக்கம் அதிகாரத்தின் உச்சம் வரை வெளிநாட்டவர்களை நம்பியே இருக்கிறார்கள்.

சார்வாகன்: 1. என்ற போதிலும் சுய அனுபவங்களை பொதுப்படுத்துவது சரியாக இருக்காது என்ற போதிலும் பதிவில் சொல்லியவைகளில் பிரச்சினையின் மையப்புள்ளி இந்திய தூதரகங்ளின் செயல்பாடுகள் குறித்து என்பது அனைவருக்குமான நிகழ்வாக பொதுப்படுத்துவது சரியாக இருக்குமென்றே கருதுகிறேன்.

2.வளைகுடா நாடுகளின் பிரச்சினையே மொத்த அரேபிய நாடுகளின் சுய அனுபவங்கள் வெளிப்படாத சூழல்கள் நிலவுகின்றன என்பதே.பெரும்பாலான விமர்சனங்கள் உங்களைப் போன்ற சமூக அக்கறையாளர்களின் வெளியிலிருந்து வரும் வெளிப்படுத்தலே.

3.இங்கே பெரும்பாலோரின் சாட்சிகளே இல்லை.அப்புறம் சான்றுகளின் மீதான முடிவுகளை எப்படி தீர்மானிப்பது.கைரலி,ஆசியா நெட் போன்ற ஊடகங்கள் வளைகுடா செய்திகளையும்,பிரச்சினைகளையும் வெளிப்படுத்துகின்றன. ஒருவர் கேரளாக்காரராகவும்,வயலார் ரவியை அணுகும் தூரத்தைப் பொறுத்து பிரச்சினைகள் கேரள எல்லையோடு முடிந்து விடுகின்றன.தமிழகம் சார்ந்தும் இன்னும் அகன்ற பார்வையில் மொத்த இந்தியாவாக வெளிநாட்டில் பணிபுரிவோர் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை.

நீங்கள் சொல்லியபடி பெரும்பான்மை மக்களின் குணமே அக்குழுவின் குணமாக எடுக்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதற்கு காரணமாக அரேபிய நாடுகளின் மீதான எதிர் விமர்சனங்களுக்கு காரணம் மதம் சார்ந்த சட்ட வரைமுறைகளும்,மனித உரிமைகள் குறித்த விமர்சனங்களுமே.

1.ஜனநாயகம்: இருக்கும் அனைத்து ஆட்சி முறைகளிலும் சிறந்தது ஜனநாயகமே என்றபோதிலும் ஜனநாயகம் படும்பாடு சொல்லி தீராது.அரேபிய நாடுகளில் அவரவர் குடியுரிமையுடையவர்கள் சார்ந்து மதம் சார்ந்த ஜனநாயகமும் அதனை அமெரிக்கா,மேற்கத்திய நாடுகள் உட்பட அங்கீகரித்தே பெட்ரோலிய பொருளாதாரம் உலகளாவிய அளவில் இயங்குகிறது.

2. பிறநாட்டவர் பிரச்சினையை 3ல் காணலாம்.

3.நெடுங்காலம் அகதிகளாக வாழும் தமிழ் மொழி பேசும் தமிழர்களுக்கே தமிழ்நாட்டில் குடியுரிமை வழங்கும் சிக்கல்கள் இருக்கும் போது பன்மொழி பேசும் பல நாட்டு மக்களை குடியுரியுமையுள்ளவர்களாக்குவது அரபு என்ற ஒருமுகத்தன்மையிலிருந்து பன்முகத்தன்மைக்கு தள்ளப்படும் ஆபத்துக்கள் இருக்கின்றன என அரேபியர்கள் யோசிக்க கூடும்.குவைத் போன்ற சிறிய நாட்டில் மண்ணில் பிறந்தவர்களை விட வெளிநாட்டினவர்களின் மக்கள் தொகை அதிகம்.ஆறரை லட்சம் இந்தியர்களில் நாலரை லட்சம் கேரளவாசிகளுக்கே குவைத்திகள் நாட்டை எழுதி வைத்துவிடும் சூழல் தற்போதே இருக்கின்றன.இதற்காக அரேபியர்களின் மொத்த செயல்பாடுகளும் சரியில்லையென்ற போதிலும் குறைந்தபட்சம் இந்த மண்ணிலேயே பிறக்கும் குழந்தைகளைக் கூட தங்கள் குடியுரிமையாளர்களாக்கலாம்.ஆனால் அங்கேயும் தமது இனம்,மொழி சார்ந்த ஒருமுகத் தன்மை மாறிப்போகுமே என்ற கவலைகள் அரபிகளுக்கு இருக்க கூடும்.இரண்டு வருடம் பணி புரியும் அடிப்படையிலேயே பணி ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றன.அதற்கும் மீறிய  காரணம் இந்த வாழ்க்கை சரிப்பட்டுப் போவதோ அல்லது தமது சொந்த நாட்டுக்கு திரும்பி போக இயலாத சொந்த நாடுகளின் பொருளாதார இன்னபிற காரணிகளே.

பிறநாடுகள் அரபுகளுக்கும் குடியுரிமை வழங்கும் சம உரிமையின் காரணத்தாலும்,மனித உரிமைகளை மதிப்பதன் காரணத்தாலேயே அந்த நாடுகள் வளைகுடா நாடுகளை விட உயர்ந்தவையாக கருதப்படுகின்றன.

4.பணியாற்ற செல்லும் பலர் ஏமாற்றப்படுவதின் துவக்கம் நம்மூரில் ஏஜண்டுகள் துவங்கி இங்கே மொழிப்பிரச்சினை காரணமாக இயங்கும் நம்மூர் இடைத்தரகர்களே என்ற உண்மைகள் வெளியில் அதிகம் தெரிவதில்லை என்பதோடு தமது தில்லுமுல்லுகளை அரேபிகளுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களையும் கெடுத்து விட்டார்கள் என்பதே உண்மை.

5. விசா இல்லாவிட்டாலும் இருப்போம் என்ற மனநிலைக்கு பலரும் வந்து விடுகிறார்கள்.எனவே போலிசில் அகப்பட்டு சிறைவாசம் அனுபவித்து அவர்களே வெளியேற்றும் சூழல் உருவாகி விடுகிறது.உழைப்பு திருட்டு என்பதை மண்ணாரம் போன்ற கம்பெனிகள் என்று குறிப்பிட்டிருக்கிறேன். நிறுவனங்கள் விசா,வீட்டு விசா என்ற இருநிலைகளில் பிரச்சினைகளை அணுக வேண்டுகிறேன்.

6,யாரு?அரபிகள் கண்மூடித்தனமான அமெரிக்க ஆதரவு? அமெரிக்காகாரன் பெட்ரோலுக்காக அரேபியர்களுக்கு கண்மூடித்தனமான ஆதரவுன்னு மாற்றி சொல்லுங்க சகோ.

நான் சிந்திப்பதால்தான் மதவாதங்களின் அதே போல் கோவி.கண்ணனின் வாதங்களின் நிறை,குறைகளையும் முக்கியமாக நீங்கள் சார்ந்த கருத்து ஆதரவாளனாகவும்,ஆதரிக்கவும்,விமர்சனமும் செய்கிறேன்:) இங்கே ஒன்றை சார்ந்து மட்டும் நிற்க இயலாமல் கருத்துக்களின் அடிப்படையிலேயே கருத்துக்களை முன்வைக்க வேண்டியதாகிறது.

நன்றி.

வடுவூர் குமார்: உடல் உழைப்பும்,தொழிலாள தோழர்களும் பல ஆபத்துக்களை சந்திக்கிறார்கள்.இதனை அமெரிக்காவின் உயர்ந்த கட்டிடத்தில் பணிபுரியும் தொழிலாளி எப்படி இயங்குகிறார் என்பதிலும், இந்திய தொழிலாளி எப்படி தனது பணியை முடிக்க திணிக்கப்படுகிறார் என்பதிலும் வித்தியாசமிருக்கிறது. உலகம் முழுதும் கழிவுகள் செயல்பட்டாலும் இந்தியனுக்கு மட்டும் சாக்கடை அள்ளுவதற்கு நீச்சல் முறை தேவைப்படுகிறது என்பதே நமது சமூக அவலத்தை அம்பலப்படுத்துகிறது.

ரியாஸ்: சகோ.சார்வாகன் ஆரம்பித்து வைத்தாலும் வவ்வால்,நீங்க வந்த பின்பு வண்டி இன்னும் கொஞ்சம் பெட்ரோல் போட்டுகிட்டு வேகமாக பயணிக்கிறதை மொத்த பின்னூட்டங்களை வாசித்து முடிக்கும் போது உணர முடிந்தது.

மன்னராட்சியா அல்லது ஜனநாயகமா என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் அரேபிய நாடுகளின் மக்கள் என்ற போதிலும் மன்னராட்சியே நல்லது என உலக அரசியலை தீர்மானிக்கும் மேற்கத்திய நாடுகள் தீர்மானித்துள்ளன.அடிப்படை வசதிகளுக்கும் கூட போராடியே தீரவேண்டிய நிர்வாக கட்டமைப்பை ஏனைய ஆசிய நாடுகள் கொண்டுள்ளதால் இரண்டாம் தர குடிமகனாக இருந்தாலும் சுகமே என்ற மனநிலையிலேயே பலரும் இருக்கிறார்கள் என்பதை பெரும்பாலோரின் தொடர் வாழ்க்கை உறுதிப்படுத்துகிறது.

அமெரிக்காவை ஆதரிப்பதும் விமர்சனம் செய்வதும் அமெரிக்கா சார்ந்த அறிவியல் முன்னேற்றங்கள், கருத்துரிமை,சுதந்திரம் சார்ந்தும், அமெரிக்காவின் அரசியல் சார்ந்த இரட்டை நிலைப்பாட்டாலும் என்பதால் there is nothing funny:)

சார்வாகன்: மரணம் போன்ற சூழல்களில் அரபியர்களும் மனிதாபிமானத்தோடுதான் நடந்து கொள்கிறார்கள் என்பதை ரியாஸும் ஆமோதிப்பதன் காரணம் கொண்டே அரபு ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதி என்ற முத்திரை குத்திவிட முடியாது.ஆளும் வர்க்கத்திற்கும்,அப்படியே அவர்களை சார்ந்தே ஆதரவு குரல் கொடுத்தாலும் கூட இருவருக்குமுள்ள இடைவெளி மிக மிக தூரம்.ஆடோமன் துருக்கிய பேரரசை தோற்கடிக்கவும் அரபுலகை கையாள்வது எளிது என்பதுவுமே இப்போதைய உலக அரசியல் நடைமுறையாக இருக்கிறதல்லவா?

ஒருவேளை இந்த நடைமுறை சரியில்லையென்று ஈரான் சார்ந்த பெட்ரோலிய பொருளாதாரம் எப்படியிருக்கும் என்பதையும் உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

நில பரப்பளவிலும் பொருளாதார வலிமையிலும் ஷியாக்களை விட சுன்னி இஸ்லாமியர்களே அதிகாரம் படைத்தவர்களாக இருப்பதால் நடைமுறை மாற்றங்களுக்கு தற்போது சாத்தியமேயில்லை.மத சட்டங்கள் என எதனை அடையாளப்படுத்துகிறீர்கள்?சவுதியின் ஷரியத் என்றால் நீங்கள் அணுக வேண்டிய முகவரி சகோ.சுவனப்பிரியன்:)

மற்றபடி ரம்ஜான் மாத உபவாசம் உள்பட நீங்கள் கூறும் எதுவும் இங்கே எந்த வெளிநாட்டவரையும் பாதிக்கிற மாதிரி தெரியவில்லை.கட்டாய உபவாசம் என்பது ஒருவேளை சிறைக்குள் இருப்பவர்கள் மீது திணிக்கப்பட்டாலும் கூட உபவாச காலம் முடிந்து சிறந்த உணவை தருகிறார்கள்.

இந்திய பொது சிவில் சட்டம் தேவையென்பதின் அவசியத்தை வேறு ஒரு பதிவில் அலசவேண்டியது அவசியம்.அரேபிய நாடு சார்ந்து என்பதால் மரணதண்டனை குறித்து பேசுவோம்.தண்டனைகள் அதிக பயத்தை கொடுத்தாலும் கூட உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கொலைக் குற்றங்களோ,அல்லது சீக்கிரம் பணம் பார்த்துவிடுவோம் என்ற ஆசையில் போதைப்பொருட்கள் கடத்துவதோ அதிகம் வெளிநாட்டவரே.அரேபியர்கள் குற்றம் செய்தாலும் தப்பித்து விடுவதற்கான சாத்தியங்களும்,அழுத்தங்களும் இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

பார்த்தீர்களா!இது போன்ற மரணதண்டனைக்கு எதிரான செய்திக்கும் கூட கார்டியன் போன்ற செய்திகளே துணைக்கு வருகின்றன.ஆசிய நாடுகளின் ஏடுகளும்,தூதரங்களும் வாய்மூடிகள் என்பதே பிரச்சினை.மாற்றங்களுக்கும் கூட அம்னெஸ்டி போன்ற அமைப்புக்களே குரல் கொடுக்க வேண்டியுள்ளது.ஆனால் மனித உரிமை அமைப்புக்களுக்கும் வரைமுறைகள் உள்ளன.

தொடர்ந்து நீங்களே பின்னூட்டம் போட்டதால் உங்களை மீண்டும் தொடர்கிறேன்.
சூனியம் வைக்க முடியும் என்பதை நிருபிக்க முடியுமா என்று தெரியவில்லை.ஆனால் பில்லி சூனியங்களில் நம்பிக்கையுடையவர்களாக இலங்கையர்கள் இருக்கிறார்கள.சூன்யம் வைப்பதுதான் முழு நேரத் தொழிலாக கொண்ட ஒரு சிங்களப்பெண்ணை சில வருடங்களுக்கு முன்பு நான் அறிவேன்.

வவ்வால்:வழில பார்க்கும் போதுதானே வணக்கம் சொல்ல முடியும்.இங்கே வந்து புடிக்கிறீங்களேன்னு வடுவூராரை பிடிக்கிறீங்களே பாஸ்;) சென்னையில் பீகாரி அடிபட்டுவிட்டால் 108க்கு போன் செய்வதோடு கடமை முடிந்து விட்டது மாதிரி இங்கேயும் போலிசுக்கும்,ஆம்புலன்ஸ்க்கும் போன் போடுவதோடு போலிஸ்,வேன் வரும்வரை நிற்பவர்களும்,வண்டியை ஓரங்கட்டி என்னாச்சுன்னு வந்து விசாரிப்பவர்களும் அரபிகளே!நம்மாளுக ட்ராபிக் வேக குறைவில் மெல்ல பக்கப்பார்வை பார்த்து விட்டு நகர்ந்து விடுவகிறார்கள்.நல்ல சம்பளம்,வேலையென நம்மூர் ஏஜண்டுகள்தானே செய்கிறார்கள்?இவர்களைக் கட்டுப்படுத்தும் சட்ட முறைகள் இதுவரை இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ளதா?விசா இல்லாமல் ஒருவரை வேலைக்கு வைத்துக்கொள்வது சட்டச் சிக்கல்கள் இருந்தாலும் மனிதாபிமானத்தோடு வேலை தருகி|றார்கள் என்பதை விட உள்ளூர்க்குள்ளேயே எந்த சிரமமும் இல்லாமல் வேலைக்கு ஆள் கிடைக்கிறதே என்ற முதலாளியின் சுயநலமும்,பிழைக்க வேண்டிய கட்டாயத்தில் கிடைத்ததை செய்யும் நிர்பந்த சூழலும்தான்.

வெளிநாட்டுப் பிரச்சினையின் குரல்வளையை பிடித்த ஒரே ஆள் நீங்கதான்.வெளிநாட்டு வேலைக்கு என ஆள் பிடித்துப் போகும் ஏஜண்டுகளை புடிச்சு உள்ளே போடனும்.ஆனால் இதிலும் ஒரு பிரச்சினையிருக்கிறது.மனித வள சுரண்டலை ஆசிய நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு செய்கின்றன. இந்தியாவிலிருந்து ஆட்கள் அனுப்புவது தடைசெய்யப்பட்டால் இலங்கை, நேபாளம்,பிலிப்பைன்ஸ்,இந்தோனேசியா,பங்களாதேஷ் என மாற்று வழிகள் உள்ளன என்பது அரேபிய நாடுகளுக்கான சாதக நிலை.

வவ்வால் உங்கள் பின்னூட்டத்தை தொடர்கிறேன்.

நீங்கள் எதனை அரபுக்காரனுக்கு அடிமையென சொல்கிறீர்கள்?:அரபிகள் ஒருவிதமான சுகவாசிகள்.அன்றாட நிர்வாகத்தில் யாரும் தலையிடுவதில்லை.அரசாங்க துறைகள் தவிர்த்து தனியார் துறைகளில் லாப பங்குதாரர்,லைசென்ஸ்காரர்,தூங்கும் பார்ட்னர் போன்ற நிலையிலேயே பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள்.மனித சுரண்டல்கள் செய்வது ரியாஸ் சொல்வது போல் ஆசியர்களில் குறிப்பாக இந்தியர்களே.ஒரு அரசு ஒப்பந்தத்திற்கு 400 பேர் தேவைப்பட்டால் 400 பேருக்கான தொகையை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்டு 300 பேரை வைத்துக்கொண்டு ஓவர்டைம் அடிப்படையில் நிர்வாகத்தை நடத்துவது இங்கே மட்டுமில்லை இந்தியாவில் குறிப்பாக திருப்பூர் போன்ற ஆடைத்துறைகளிலும் நிகழும் ஒன்றே.

நோன்பு பற்றி மேலே சொல்லியாகிவிட்டது.நோன்பு பற்றிய தவறான கருத்துக்கள் நிறைய இருக்கின்றன.நோன்பை நோன்பாக பின்பற்றுபவர்களாகவும்,அன்றாட உணவு நேரப்பழக்கங்களில் மாற்றங்கள் வருகின்றன என்பதோடு சிலருக்கு சின்ன சின்ன பிரச்சினைகள் ஏற்படலாம் என்பது தவிர நோன்பு கட்டாயமில்லையென்பதால் பெரும்பான்மையோருக்கு நோன்பால் பிரச்சினையில்லை என்பதே உண்மை.

பெரியார் நம்மை காட்டுமிராண்டிகள் என்று சொன்னதால் நமது சட்டமும் அதனை பின்பற்றும் முறையும் கூட நீங்கள் சொல்லும் வரைமுறைக்குள் வருகிறதோ இல்லையோ இப்போதைய பெட்ரோலிய வளங்களை அனுபவிக்கும் இன்றைய அரேபிய தலைமுறைகள் தவிர்த்து அரேபிய முந்தைய சந்ததிகள் பண்டமாற்று முறையில் இந்தியாவிலிருந்து உணவுப்பொருட்கள்,தண்ணீர்,இந்திய கரன்ஸி உட்பட உபயோகித்த காலத்துக்கும் முந்தைய காலத்துக்குப் பயணம் செய்தால் பாலவனம்,கடல் உணவு,கூடாரம் சார்ந்த படிப்பறிவுக்கும் சந்தர்ப்பமில்லாத நாடோடிக்கூட்டம் என்று சொல்லலாமே தவிர காடுகளும்,பிராண்டுவதற்கு சந்தர்ப்பமில்லாத காட்டுமிராண்டிக்கூட்டமில்லை:) நம்மூர் ஜாதி பிரிவுகள் மாதிரி பலதரப்பட்ட பழங்குடி மக்களின் குழுக்களே அரேபியர்கள்.மதம் என்ற ஒன்று மட்டுமே இவர்களை ஒன்றாக இணைக்கிறது.

ரியாஸ்: ஒரு கருத்துக்கு மாற்று கருத்து தெரிவித்தால் உடனே அந்த வர்க்கத்தின் பிரதிநிதி என முத்திரை குத்தி விடுவீர்கள் போலிருக்குது. என்பதற்கு ஏற்கனவே சகோ.சார்வாகனுக்கு கேள்வியெழுப்பியிருக்கிறேன் என்பதோடு நாம் அனைவருக்கும் கருத்துக்கள் குறித்தான சரி,தவறுகள் தெரிந்தே இருக்கின்றன.ஆனால் மதம் சார்ந்த விமர்சனங்களாலும்,அரேபிய நாடுகளின் சில குறைகளின் காரணமாக அனைத்தும் அதே வட்டத்துக்குள் வைத்தே பார்க்கப்படுகிறது.சகோ.சார்வாகன்,வவ்வாலையெல்லாம் கொஞ்ச காலம் துபாய்க்கு அனுப்பி ஒட்டகம் எப்படியிருக்குமென காட்டி விட்டால் வழிக்கு வந்து விடுவார்கள் என நினைக்கின்றேன்:)

மரணதண்டனைக்கு கையா?கழுத்தா என்ற தண்டனையே இன்னும் விவாதத்திற்குரியது.இலக்கணப் பிழையை சுட்டியமைக்கு நன்றி.

ரியாஸ்: மீண்டும் உங்கள் பின்னூட்ட தொடர்ச்சி...

எனக்கு மட்டுமல்ல பெரும்பான்மையான வளைகுடா வாசிகளுக்கு அரேபிய வாழ்க்கை தாமரை இலைத் தண்ணீர் மாதிரிதான்.கார் லைசென்ஸ் புதுப்பிக்கவும்,டெலிபோன்,மின்சார கட்டணம் நிரப்புவது தவிரவும்,சாலை விதிமுறை மீறல்களுக்கு போலிசை சந்திப்பது தவிர அவர்கள் வாழ்க்கை அவர்களுக்கு.நம்ம வாழ்க்கை முறை நமக்கு என்பதால் பிரச்சினைகள் இல்லை.பிரச்சினைக்குரியர்வர்களான குறைந்த சம்பளத்தில் இருக்கும் கடின உழைப்பாளிகளும்,வீட்டில் பணிபுரியும் வாகன ஓட்டுனர்கள்,பணிப்பெண்கள் மீதான கரிசனைத்தைக் காட்டுவதும்,இதற்காக அனைத்து தூதரகங்களும் இணைந்து செயல்படுவது மட்டுமே முக்கியம்.

நானும் சொந்த நாட்டுக்குப் போய் விடவேண்டுமென்று ஒவ்வொரு முறை லீவிலும் வெள்ளோட்டம் விடுவேன்.முடியாமல் போய் திரும்பி வந்து விடுவேன்.எனவே சகோ. இதில் மன்னிப்பு என்ன வேண்டிக்கிடக்கு:) 

வவ்வால்:அரபிக்காரனை விட சகோ.ரியாஸே பொங்குகிறாரே என்று சந்தோசப்படுங்கள்.இது போன்ற திறந்த விவாதங்களையெல்லாம் அரேபியர்களிடம் செய்து விட முடியுமா என்ன?
அரபிக்கு கொடி பிடித்ததே நாந்தான்.சகோ.ரியாஸ் என்னோடு ஒத்துக்கு மத்தளம் போடுகிறார்.குடியுரிமையும்,ஓட்டு போடும் சந்தர்ப்பத்தை அரேபிய நாடுகள் தந்தால் மகிழ்ச்சிதான்.ஆனால் அரபி நம்மை கட்டிப்போட்டு வைத்துள்ளான் என்பதை விட சம உரிமைகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லைன்னுதானே வாழ்க்கையை பெரும்பாலோர் நடத்துகிறார்கள்.

இந்த வரிகளை வவ்வாலுக்கும்,ரியாஸ்க்குமான கேள்வியாக முன் வைக்கிறேன்.முள்ளிவாய்க்காலுக்குப் பின்பான விடுதலைப்புலிகள் பிரச்சினைகள் முடிந்து இலங்கையில் சமாதானமும், வேலை,நிலம்,தொழில், வியாபாரம் போன்றவற்றிற்கான சந்தர்ப்பங்கள் இலங்கையில் யாருக்கு மறுக்கப்படுகிறதோ இல்லையோ ஆனால் சிங்களவர்களுக்கு மறுக்கப்படுவதற்கான சூழல்கள் இல்லையென்றே நினைக்கின்றேன்.மூன்று மாத லீவில் போய் விட்டு ஒரு சிங்களவர் மீண்டும் இங்கேயே திரும்பி வந்து விட்டார்.இன்னுமொருவர் லீவில் போய்விட்டு UPS கூரியர் சர்விஸில் வெயிலில் அலுவலகம் அலுவலகமாக அலைகிறார்.இவர்கள் திரும்பி வருவதன் காரணம் என்ன?

சுவனப்பிரியன்:சகோ.நீங்க பின்னாடி வேதங்கள் பற்றியெல்லாம் நீண்ட பின்னூட்டங்கள் போட்டுள்ளதால் அதற்கும் சேர்த்தே இங்கே பதில் சொல்லி விடுகிறேன்.கூடவே  வவ்வால் வனவாசம் செய்து ஒன்றே குலம்!ஒருவனே தேவன் என்று வள்ளலாரை தேடுவோம் என்கிறார்.இந்தியாவிடம் பல குறைகள் இருந்தாலும் கூட அனைத்து கருத்துக்களையும் உள் வாங்கிக்கொள்ளும் பன்முகத்தன்மை கொண்டது என்பதாலேயே பல இன,மொழி, கலாச்சாரங்களை உள்வாங்கிக்கொண்டு நகர்கின்றன.அது ஆத்திகமாக இருந்தாலும் சரி,நாத்திகம் சார்ந்த சிந்தனைகளாக இருந்தாலும் சரி.ஆனால் இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இந்திய பாரம்பரியமாக இருப்பது பஞ்ச பூதங்களாக இருப்பது நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் என ஐந்து இயற்கை சக்திகளையும் வணங்குவது.இதன் அடிப்படையில் அவரவர் கற்பனைக்கேற்ப சாமிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டன.இதில் வர்ணாஸ்ரமும் வந்து குட்டையை குழப்பி விட்டது இந்து மதத்தின் சோகம்.

இஸ்லாத்தை அரேபியர்கள் வலுக்கட்டாயமாக இங்கே திணிக்காமல் இருப்பது போல் மதம் சார்ந்த கருத்து திணிப்புக்களை பொதுவில் பதிவுலகில் வைக்காமலிருந்தாலே இஸ்லாமியம் மீதான எதிர் விமர்சனங்கள் பாதி குறைந்து விடும் என்பது என் கணிப்பு.சரியானவற்றை அவரவர் சுயவிருப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் இணக்கம் மட்டுமே ஒன்றிணைந்த வாழ்வுக்கு பயன்படுமென்று நினைக்கின்றேன்.

வவ்வால்:பாஸ்!சகோ.ரியாஸ் உங்களிடமும் சகோ.சார்வகனிடமும் விவாதம் செய்து கொண்டுதானே வருகிறார்.அப்புறம் ஏன் எகிறுறீங்க:) பொது விவாதத்தில் யாரும் யாருக்கும் பதிலோ,கேள்வியோ எழுப்பலாம்தானே?நான் இப்ப கவிச்சையெல்லாம் விட்டுட்டு சாம்பாரும், தயிரும் மட்டுமே சாப்பிடுகிறேன்.இப்ப நான் சாம்பாரா?பழைய கவிச்சி இன்னும் என்னிடம் வீசுமா?முதலில் அதை சொல்லுங்கோ:)
மனித வள சுரண்டல்களை ஊக்குவிப்பது இந்தியர்கள் முக்கியமாக சேட்டன்கள் என்று ரியாஸ் சொல்ல வந்ததை நீங்கள் தவறாக அடையாளப்படுத்திக்கொண்டீர்கள் என நினைக்கின்றேன்.

ரியாஸ்:வரலாறுகளை சரியாகத் தெரிந்து கொண்டிருந்தால் ஏன் குளறுபடிகள் இந்தியா,இலங்கை உடபட.

வவ்வால் & ரியாஸ்: எனது மன அலைகள் நண்பர் வவ்வாலுடன் இணைந்து செல்வதாலும் அவரது பதிவுகள், பின்னூட்டங்களின் பன்முகத் தன்மையால் எப்பொழுதுமே எனது கருத்துக்கள் நண்பர் வவ்வாலை சார்ந்தே இருக்கும்.சகோ.ரியாஸ்! இங்கே நீங்க சரியாக விவாதிப்பதால் நான் உங்கள் பக்கம்.

சார்வாகன்:சகோ.உங்கள் சமூக அக்கறை நான் உணர்ந்த ஒன்றே.குற்றம் செய்யலாம்.ஆனால் குற்றத்திற்கு குறைவான தண்டனை தரலாமே என்று மனிதாபிமானத்தாலும் இந்திய மனப்பான்மையிலும் கருத்து சொல்கிறீர்கள். குற்றங்களுக்கு கடின தண்டனை,கடின வாழ்க்கையென்று தெரிந்தும் அரேபிய நாடுகளுக்கு செல்வது நமது நாட்டின் பொருளாதார நிலையாலும் ,ஏஜண்ட்களின் பொய்யான வாக்குறுதி நம்பிக்கைகளாலும்,கடல் கடந்தும் திரவியம் தேடும் பழமொழியின் சொந்தக்காரர்களாய் இருப்பதால் மட்டுமல்லாமல் இன்று மனித நகர்வுகள் கிராமப்புறத்திலிருந்து நகரத்துக்கும், நகரத்திலிருந்து பன்னாட்டுக்கும் என்பதோடு,போர்,மனித அடக்குமுறை என்றும் நீண்ட வரிசைப்படுகிறது.பிரச்சினைகள் பல இருந்தாலும் அரேபிய நாடுகள் ஆசிய நாடுகளின் அன்னிய செலவாணியை ஓரளவுக்கு தாங்கிப்பிடிக்கிறது என்பதும் உண்மை.இந்திய கடனைக் கட்டுவதில் வளைகுடாப் பணங்களும்,இன்று ராஜபக்சே உல்லாசமாகவோ,நாட்டின் நலன் கருதியோ செல்லும் பயணங்களில் வளைகுடாக்களில் வீட்டில் பணிபுரியும் பெண்களின் சல்லிக்காசுகளும் ஒட்டியுள்ளன என்பது கசப்பான உண்மை.

நான் யார் என்ற கேள்வியை நோக்கிப் போகிறீர்களா? பார்த்து!ஆத்திகம் வந்து அமுக்கி விடப் போகிறது:)

தனிமரம்:ஒற்றை வரியில் முடித்து விட்டீர்களே! வவ்வால்,சார்வாகன்,ரியாஸ்,சுவனப்பிரியனைப் பாருங்க !பின்னாடி வேகநரி, வருணெல்லாம் வருகிறார்கள்!எப்படி விவாத குஸ்தி போடுறாங்கன்னு வேடிக்கையாவது பாருங்கள்.வருகைக்கு நன்றி.

சலாலுதீன்:ஆந்திர சகோதரருக்கு எனது அனுதாபங்கள்.அரேபிய நாடுகளில் பெரும்பாலும் லஞ்சம் இல்லையென்ற போதிலும் நீங்கள் குறிப்பிடும் லஞ்சம் சுத்தமாக மருத்துவமனைகளில் இல்லையென்பது இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.மேலும் நர்ஸுகளாக பணிபுரியும் இந்திய சகோதரிகளின் உழைப்பும்,திறமையும்,நோயாளிகளை கவனிக்கும் முறையும் இந்தியர்கள் பெருமைபட வேண்டிய விசயம்.இதனை உங்கள் மூலமாக பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் சகோ.

ஹேமா: இழுபறி கருத்துக்கள் விவாதங்களை ஊக்குவித்து மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ள உதவுகின்ற போதும் இணக்கமான உறவுக்கு அவை துணை செய்வதில்லை என்பது எனது இதுவரையிலான பதிவுலக அனுபவம்.உங்களை நினைக்கும் போது தாயக சமரசங்கள் நோக்கிய நினைப்பு வருவதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

சுவனப்பிரியன்: சகோ.சார்வாகன் நான் யார் என்ற கேள்வியில் இரண்டு பொருள் ஒழிந்து கொண்டிருக்கிற போதும் நீங்க ரிக் வேதம்,யஜூர் வேதமெல்லாம் ஓதி அவரை திசை திருப்பி விடுவீர்கள் போல இருக்குதே!போட்டிக்குன்னு இருக்கும் ஒரே ஆளையும் ஜெயிச்சிட்டா நிரந்தரமாக வென்று விடலாமென்று நினைக்கிறீங்களா சகோ! கண்ணுக்குத் தெரியாமல் நிறைய பேர் சுத்திகிட்டிருக்காங்களாக்கும்:)

வேகநரி:நீங்கள் இந்த பதிவை பார்வையிட்டதுக்கு நன்றி. அரேபியர்களுக்கும்,இஸ்லாமியத்திற்கு எதிராகவே குரல் கொடுப்பது ஒரு வித பாஸிச தன்மையே என்பேன்.அரேபிய மனித உரிமை மீறல்கள் பற்றிய எதிர்ப்பு சிந்தனையும்,அரேபிய நாடுகள் நிர்வாகத்தில் எப்படி சிறந்து விளங்குகிறார்கள் என்ற மாற்றுப்பார்வை கொள்வதன் மூலமே பிரச்சினைகளை சரியாக அலசமுடியும்.அரேபியர்களா வா!வா என்று அழைக்கிறார்கள்?விட்டில் பூச்சிகளாய் போய் ஒட்டிக்கொள்வதே ஆசிய நாடுகளின் நிர்வாக கோளாறுகளால் ஏற்படும் அவலங்களால்தானே!

மொத்த ஆசிய நாட்டுக்காரர்களுக்கும் குடியுரிமை கொடுத்து விடுவது எவ்வளவு சாத்தியமான விசயமென்று தெரியவில்லை.இதற்கு மாற்று வழிகள் இருக்கிறது.போ உன் நாட்டுக்குப் போ!எங்கள் நாட்டுப் பணிகளை நாங்களே செய்து கொள்கிறோம் என்று அனைவரையும் துரத்தி விடுவது.அந்தளவுக்கு அரேபியர்கள் சொந்த வேலைகள் செய்வதற்கு பொருளாதார உலக மாற்றங்கள் வந்தால் நிகழக்கூடும்.தற்போதைய சூழலில் காபிர்களுக்கு எதற்கு குடியுரிமை தரவேண்டுமென அரபி மொழி பேசும் ஏனைய அரேபிய வசந்தக்காரர்களைக் கொண்டு வந்தால் உட்பூசல்களை வளர்த்து வளைகுடா நாடுகளை ஒரு வழியாக்கி விடுவார்கள்.இதனையெல்லாம் அமெரிக்காகாரன் யோசிக்காமலா இருப்பான்?பிரச்சினைகளின் மையப்புள்ளியான வலிமை யில்லாத ஆசிய நாடுகளின் தூதரகங்களையெல்லாம் அம்போன்னு விட்டு விட்டு அரபியர்களை குறை கூறுவதில் ஒரு பயனுமில்லை.

வவ்வால்:ஒருவரை புண்படுத்த வேண்டாமே என்று மன்னித்துக் கொள்ளுங்கள் என்பது பெரிய மனுசத்தனம்.உடனே தெளிவா பேசுவோம்ங்கிறீங்க:)

சுவனப்பிரியன் தமது மார்க்கம் சார்ந்து சிந்திப்பதால் ஏனைய மதங்களையும் ஒப்பிடும் தன்மைக்கான தேடல் இயற்கையாக வந்து விடும்.முன்பு பைபிளின் பழைய ஏற்பாட்டையும்,இந்து மத சடங்கு முறைகளையும் ஒப்பிட்டு ஒருவர் கருத்து டேப் ரெகார்டர் வெளியிட்டிருந்தார்.எனவே தேடலில் இவை இயல்பான ஒன்றே.

மோடி எப்ப பிளாக்கர் ஆனார்:)

துளசி டீச்சர்:பல நாடுகளையும் சுற்றுவதால் உங்களின் சிந்தனை எவரெஸ்ட் மாதிரி உயரத்தில் போய் உட்கார்ந்து கொள்கிறது டீச்சர்.

மரணம் தேச எல்லைகள் கடந்து மரியாதையோடு பார்க்கப்பட வேண்டிய விசயம்.அதிக மனித வள வரத்தால் இந்தியாவுக்கு இது புரிவதில்லை. முக்கியமாக சென்னை போன்ற நகர்ப்புறங்களுக்கு.

உங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி டீச்சர்.

மாயாவி: இந்தியப் பிரச்சினைகளின் மொத்தக் கலவையும் கூட அரேபிய நாட்டுப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் சுகமான வாழ்க்கை என்று பலரையும் தோன்ற வைக்கிறது.

//பாம்பே சொந்த நாட்டில்.பீகார்காரன் வேலை செய்ய முடியல... அது கேக்க துப்பு இல்லாதவங்க... அடுத்த நாட்டு சட்ட திட்டத்தை பத்தி பேச என்ன யோக்கியதை இருக்கு.//

பதில் சொல்ல இயலா கேள்வி!

வருண்:தூரத்துல உட்கார்ந்து கொண்டிருந்தாலும் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு கருத்து சொல்வதற்கு நன்றி.கூடவே மொத்த பின்னூட்ட வாசிப்பில் வேகநரிதான் உங்களை மெண்டலென்று வம்பிழுக்கிறாரென்று பின்பு அவரை ஒரு புடி புடிக்கலாமென்றிருந்தேன்.மறுவாசிப்பில் மல்லுக்கட்டுக்கே பிள்ளையார் சுழி போட்டதே நீங்கதானா!அவ்வ்வ்வ்:(
இருந்தாலும் வேகநரிக்கு உங்களுக்கான பதிலை பின்பு சொல்லிக்கிறேன்.

நீங்க சொல்வது போல் நாமே விரும்பியோ அல்லது போன பின் விரும்பாமலோ அங்கேயே லட்சக்கணக்கிலிருந்து கொண்டு அரேபியர்களை திட்டுவது உகந்ததல்ல.பிரச்சினைகளை நாட்டு வெளியுறவுத்துறைகள், தூதரகங்கள் சார்ந்து தீர்க்க வேண்டிய பிரச்சினை.அதற்கான முன்னெடுப்புக்கள் இல்லையென்பதுவே பிரச்சினைகளுக்கெல்லாம் அடிப்படை.

கோவி.கண்ணன்: சுவனப்பிரியனின் பின்னூட்டத்திற்கான இணைப்பை நான் க்ளிக்கவில்லை.ஒருவேளை வழக்கமான உங்களுக்கான ஜல்லிக்கட்டாக இருக்குமேயென்று விட்டு விட்டேன் போலிருக்குது:) விட மாட்டேனே!மறுபடியும் உங்கள் தளம் வந்து வாசித்து விடுகிறேன்.போதுமா?
சிங்கப்பூர்,மலேசியா பற்றி நீங்கள்தான் சொல்ல வேண்டும். அரபுநாடுகளிலிருந்து இறந்த உடலை பெற கண்ணீர் விடும் பெற்றோர்கள், உறவினர்கள் யாரை அணுக சொல்கிறீர்கள்?காசு வாங்கிக்கொண்டு விற்று விட்ட ஏஜண்டிடாமா?அல்லது நேரடியாக இந்திய வெளியுறவுத்துறையிடமா? வெளியுறவுத்துறையை அணுக வேண்டிய சிரமங்களை நான் இன்னும் விளக்க வேண்டுமா உங்களுக்கு?குற்றவியல் மரணமோ, சாதாரண மரணமோ இரண்டு நாட்களில் எப்படி இயல்கிறது என்பதை தனிப்பதிவாக சொல்லவும்.சிலருக்கு பயன்படவும் பொது விழிப்புணர்வுக்கும் பயன்படும். இறந்தவரின் உடலை பார்க்கவும்,அவரவர் மதம் சார்ந்த சடங்குகளை செய்ய இங்கேயும் ஒரு தடையும் இல்லையே. 

அப்புறம் கழிவறை குறித்த உங்கள் மீதான விமர்சனங்களை இங்கே குறிப்பிடலாமா என்று நினைக்கின்றேன்.நான் என்னமோ கடவுள் பாதி மிருகம் பாதி பாடலின் கண்டுபிடிப்பே வைரமுத்துன்னு நினைச்சிட்டிருந்தேன்.பழைய பாடல்களை ரசித்துக்கொண்டிருக்கும் போது இதன் கருவே கண்ணதாசனிடமிருந்து வைரமுத்து இரவல் வாங்கியதென்று அப்புறம்தான் தெரிந்தது.அதே மாதிரி கழிவறை கருத்துக்கே சொந்தக்காரர் நீங்கள் அல்ல.தசாவதாரத்தில் கமல் அசினோடு ரயிலில் பேசும் போதான வசனத்தின் கரு அது.மணிரத்னத்துக்கு பாம்பே படத்துக்கு எதிர்ப்புக் கொடி காட்டியது மாதிரி இஸ்லாமிய பதிவுலக நண்பர்கள் நியாயமா பார்த்தா கமலுக்குத்தான் கண்டனம் தெரிவிச்சுருக்கனும்.அசின் கையில கண்ணன் சிலை இருந்ததால பாவம் கோவி.கண்ணனை பதிவுலக நண்பர்கள் பிலு பிலுன்னு பிடித்துக்கொண்டார்கள்:)

எல்லா நாட்டிலும் தனிமனித வக்ரம் தான் குற்றம் செய்ய தூண்டுகிறது என்பதோடு சொந்த நாட்டுக்காரனை பாதுகாத்து பாதிக்கப்பட்டவர்களை கைவிடுகிறார்கள் என்பதோடும் உடன்படுகிறேன்.சிங்கப்பூரில் பணிப் பெண்னை துன்புறுத்தினால் 7 ஆண்டு வரை சிறை தண்டனையென்றால் இங்கே தவறு செய்தவன் தப்பித்து விடுவதன் காரணம் பணிப்பெண்களுக்கு உடன் உதவிக்கரம் நீட்டும் சந்தர்ப்பங்களோ, அமைப்புக்களோ இல்லாதது மட்டுமல்ல சிங்கப்பூரில் பணி செய்து விட்டு அரேபிய நாட்டுக்கு வரும் ஆசிய தூதர்களால் கூட இதுமாதிரியான தவறுகள் நிகழாவண்ணம் தடுக்க முடிவதில்லை என்பதே.

சிங்கப்பூர் சார்ந்த பிரச்சினையிலும் கூட அரேபிய ஒப்பீடு உங்களை அறியாமலே வருவதற்கு நான் என்ன செய்ய இயலும்?நான் முடிந்த வரை பக்க சார்புகள் இல்லாமல் பிரச்சினைகளின் மையப்புள்ளிகளை நோக்கியே செல்ல விரும்புவது வழக்கம்.இந்த முறை அரேபிய சார்பு நிலை மாதிரி தெரிந்தால் அதுவும் எனது பிழையல்லவே:)

ஈஸி காலண்டர்:சீரியஸா பேசிகிட்டிருக்கும் போது காலண்டர் விற்கிறீங்களே!அப்புறமா வாங்கிக்கிறேன்.நன்றி.

சார்வாகன்: பதிவு போட்டுவிட்டு பின்னூட்டப்பகுதியை திறக்கவே எனக்கு பயம்.இன்றைக்கு திறந்தால் நீங்க சொல்வது போல் அனல் பறப்பது போல் 42லேருந்து 47 வரைக்கும் தர்க்க சாஸ்திரிகள் வவ்வாலும்,வருணும் என்னமோ பேசிகிட்டிருக்காங்க.வரிசைப்படியா ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் பதில் சொல்லிகிட்டு வாரேன்.பின்னூட்டத்துல இணைப்பதற்கு பதிலா இன்னுமொரு பதிவாக இணைத்து விடுகிறேன்.

வேகநரி: உங்களைத்தான் ஒரு பிடி பிடிக்கலாமென்றிருந்தேன்.ஆனால் வருண் தான் உங்களை வம்புக்கிழுக்கிறார் என்பதை பின்புதான் உணர முடிந்தது.நண்பர் வருணிடம் இதுவரை நான் உணர்ந்ததில் துவக்கம் முதலே தமிழும் ஆங்கிலம் கலந்தே தனது பதிவுகளையும், பின்னூட்ட, மறுமொழிகளையும் வெளிப்படுத்தி வருகிறார்.இது அவரது பாணியென்று விட்டு விடலாமே!அமெரிக்காவிலிருந்து கொண்டு என்ன ஆங்கில மேதாவித்தனத்தை நம்மிடம் காட்டி விடப்போகிறார்!அவர் செய்யும் அதே தவறை நீங்களும் திரும்ப செய்வதற்கு இருவருக்குமே எனது கண்டனங்கள்.விவாதங்களின் அடிப்படையில் மோதுவதற்கு நிறைய வார்த்தைகள் இருக்கின்றன.தனிமனித தாக்குதல்கள் வேண்டாமே!எத்தனை தாக்குதல் ஏவுகணைகளை கண்டது வருண் நரி:) உங்க சிலுசிலுப்பையெல்லாம் அவர் ஊதி தள்ளி விடுவார்.அப்படித்தான் வருண் தொடர்ந்து பதிவுலகில் பயணிக்கிறார்.

வவ்வால்:இப்பத்தான் வேகநரிக்கு பதில் சொல்லிகிட்டிருந்தேன்.இப்ப நீங்க எடுத்துக்கொடுக்கிறீங்களாக்கும்.சுதி வாசிக்க இந்தக்கடைதான் உங்களுக்கு வசதியா இருக்கும் போல இருக்குது இல்ல:) உங்களுக்கும் வருணுக்கும் ஏழாம் பொருத்தம்தான் போங்க:)

வாஞ்சூர்!நான் உட்கார்ந்து மாங்கு மாங்குன்னு பதில் சொல்லிகிட்டிருக்கேன் .நீள நீளமா நீங்க கதை சொன்னா நான் எப்ப பதில் சொல்லி முடிப்பது:)பதிவு சார்ந்து பேசலாமே!இல்லாட்டி ஓய்வாக இருக்கும் போது உங்களோடு கச்சேரி வைச்சுக்கலாம்.எப்படி வசதி?பின்பு மீண்டுமொரு முறை உங்கள் பின்னூட்டங்களை ஆழ்ந்து வாசிக்கிறேன்.நன்றி.

இக்பால் செல்வன்:அரேபிய நீதிமன்றங்கள் ஒழுங்காகவே செயல்படுகின்றன.நம்மூர் மாதிரி காவல்துறையில் கூட பிரச்சினைகளை அரேபியர்கள் சார்ந்து திசை திருப்பி விடலாம்.ஆனால் நீதிமன்றங்களில் முடியாது.குற்றங்களின் அடிப்படையில் தண்டனை அனைவருக்குமே சமமே.ஆனால் பணிப்பெண்கள் சார்ந்து நீதிமன்றம் வரை எடுத்து செல்லும் சூழல்களும்,அந்தப் பணிப்பெண்ணுக்கான பாதுகாப்புக்கான சூழல்களும் இல்லாத காரணத்தால் நீதிமன்ற படிக்கட்டுக்களை பெரும்பாலான பிரச்சினைகள் எட்டுவதில்லை.பணிப்பெண்களின் புகலிடம் ஒன்று தெரிந்தவர்கள் மூலமாக வெளியே ஓடிவிடுவது அல்லது தூதரகங்களை அணுகி அங்கேயும் சிரமத்தை அனுபவித்தோ அல்லது சிறைத்தண்டனை அனுபவித்தோ சொந்த நாட்டுக்கு சென்று விடுவது.இலங்கையில் குற்றம் செய்தவர்கள் பட்டியலில் அங்கேயும் குற்றவாளிகள்.இது நல்லாயிருக்குதுல்ல!

நல்லவைகளை பாராட்டும் போது மகிழும் மனநிலை தவறுகளை சுட்டிக்காட்டும் போது இல்லையென்பதும் மாற்றிக்கொள்ளக்கூடிய மனோபாவம் இல்லையென்பது உண்மையே.

இஸ்லாமியர்கள் யாரும் மார்பிள் கல்லறை கட்டுவதில்லை.நான் சொன்னது மத அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்ட வெளிநாட்டுவாசிகளுக்கான கல்லறை.இங்கே மெழுகுவர்த்தி உட்பட வைத்துக்கொள்ளலாம்.எந்த குறுக்கீடுகளும் கிடையாது.சவுதி நிலவரத்தை சகோ.சுவனப்பிரியனிடம்தான் கேட்க வேண்டும்.

ஹெவி வெயிட் சாம்பியன்கள் இனி மோத வருவதால் பின்னூட்ட பதில் பகுதி இனியும் தொடரும்.