Followers

Thursday, June 21, 2012

இக்பால் செல்வனை வரவேற்போம்!

யாராவது கடைக்கு போகவேண்டியது!இதோ ஒரு  பதிவின்னு அந்த கடைல கிடைக்காத சரக்கெல்லாம் சேர்த்து கோர்த்து கோர்த்தும் விட்டு விடுவது என சிலர் தலைகீழா யோசிக்கிறாங்க.அந்த மாதிரி எனக்கு தூண்டிலில் மாட்டிய மீன் இக்பால் செல்வன்.

வாருங்கள் இக்பால் செல்வன்!மீண்டும் வரவேற்கிறோம்.

இரண்டே வரிதான்! யார் இக்பால் செல்வன் என்பதை அறிந்தவர்களுக்கும், அறியாதவர்களுக்குமான திறவுகோல் இங்கே.

Thursday, June 7, 2012

இலங்கை அரசின் இன்னும் ஒரு போர்க்குற்ற ஆதாரம்

இலங்கை அரசின் ராஜபக்சேவுக்கு எதிரான மக்கள் குரல் இலண்டனில் ஒலித்து ஒரு தினம் முடிவடையாத நிலையில் இன்னுமொரு முறை தமிழர்களின் ரணத்தை கீறிப்பார்க்கவும்,மனித உரிமை மீறல்களை அரசு சார்ந்த ராணுவ இயந்திரமே எப்படி போர்முனையில்  தன் கோரப்பற்களை வெளிக்காட்டும் என்பதற்கு உதாரணமாக போரின் வன்முறைகளையும், உண்மைகளையும் உலகின் கண்களுக்கு அறைந்து சொல்லும் விதமாக இந்தமுறை சேனல் 4 தொலைக்காட்சிக்குப் பதிலாக த இன்டிபென்டன்ட் பத்திரிகை இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற காணொளியை வெளியிட்டுள்ளது.

வழக்கம் போலவே இலங்கை அரசின் செய்தி தொடர்பகம் காணொளியின் ஆதாரத்தை மறுத்துள்ளது.முந்தைய காணொளிகள்,படங்கள் போன்றவை எப்படி யாரால் வெளிக்கொண்டு வரப்பட்டதென்ற விபரங்கள் வெளிவராமல் ரகசியமாக வைக்கப்பட்டு நேரடியாக செய்தியின் கோரத்தை மண்டையில் முட்ட வைக்கும்.ஆனால் இந்த தடவை ஆதாரங்கள் இண்டர்நெட் கபேவுக்கு வருகை தரும் இலங்கை ராணுவ வீரர்கள் மூலமாக தரவிறக்கம் செய்ய சொல்லிக் கொடுக்கப்பட்டு பின் தகவல் ஆதாரங்கள் கடத்தப்பட்டு இன்டிபென்டன்ட் பத்திரிகையால் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்ட பின்பே வெளியாகியுள்ளது.

32க்கும் மேற்பட்ட காமிரா ப்டங்கள்,22 காணொளிகள் போன்றவற்றில் சிலவற்றில் விடுதலைப்புலி போராளிகள் கைகள் கட்டப்பட்டு வரிசையாக நடத்தி செல்லப்படுவதும்,பெண்கள் உடைகள் களைந்த நிலையில் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டோ அல்லது இறந்த பின் உடைகள் களைக்கப்பட்டுமிருக்கலாம்.இன்னும் சிலவற்றில் விடுதலைப்புலிகளின் போராளிகளோடு சாதாரண உடைகளில் உள்ளவர்களும்,குழந்தைகளும் கூட கொல்லப்பட்டிருப்பது தெரிகிறது.இந்த காணொளிகள் சிலவற்றில் இலங்கை ராணுவத்தினர்கள்,காணொளியில்  சிங்கள ராணுவ பெண் ஒருவரின்  குரலும் அதற்கு பதிலாக ஆண் ஒருவரது குரலும் பெண் ,அவரது இல்லம் சேரும் வரை உட்பட மறுக்க இயலாத போர்க்குற்றத்தை காணொளிகளை முன்வைக்கிறது.இந்த காணொளிகள் சோனி எரிக்சனில் எந்த தேதியில் மணித்துளிகளில் எடுக்கப்பட்டது என்பது உட்பட்ட ஆதாரங்களும் அடங்கும்.காணொளிகள் குறித்த போர்க்குற்ற விசாரணைகளும்,இலங்கை அரசின் எதிர்வாதங்களையும்  மேலும் ஆராய்வது அவசியம்.

மீண்டும் ஒரு முறை காணொளிகள் ஐ.நா வரை சென்றும் கூட இலங்கை அரசு கட்டமைப்பின் துணையோடு பின் தள்ளப்படுமா என்பதையும் நம்மிடையே இன்னுமொரு சலனத்தை மட்டுமே ஏற்படுத்தி விட்டு ஏனைய வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குள் மூழ்கி விடுமா என்பதை காலம் மட்டுமே பதில் சொல்லும்.இன்டிபென்டன்ட் பத்திரிகையின் ஆங்கில வாசகங்களும்,இந்த பதிவும் எழுத்தில் கொண்டு வர இயலாத துயரத்தையும்,போரின் கொடூரங்களையும் நேரடி காணொளி மட்டுமே நெஞ்சில் பதிவு செய்யும்.

சிறுவர்கள்,முதியவர்கள்,பலவீனமான இதயமுடையோர் காணக்கூடாத நிலையிலான காணொளிகள் இன்னும் சில தினங்களில் பொது ஊடகங்கள் மூலமாக வெளி வரக்கூடும்.


http://www.independent.co.uk/news/world/asia/as-its-president-dines-with-the-queen-sri-lankas-torture-of-its-tamils-is-revealed-7821152.html

Tuesday, June 5, 2012

ராஜபக்சேவின் லண்டன் கலந்துரையாடல் ரத்து!

இந்த செய்தியை ஒரு மணி நேரத்துக்கும் முன்பே இன்னும் சூடாக வெளியிட்டிருக்கலாம்.ஆனால் உறுதிசெய்யப்படாத தகவலாகவோ அல்லது புலம்பெயர் தமிழர்களை திசை திருப்பும் பொருட்டோ இருக்கலாம் என்ற எண்ணத்தில் இப்பொழுது காமன்வெல்த் தளத்தில் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த செய்தி பகிர்வு.

.2010ல் ராஜபக்சே லண்டன் பயணத்தின் நேரத்து உணர்வுகள் தமிழர்களிடம் குறைந்து போய் விட்டதா அல்லது எலிசபெத் மகாராணியின் விழாவுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாமென்றோ முந்தைய புலம்பெயர் தமிழர்களின் கூட்டம் லண்டன் விமானநிலையத்திலும்,ராஜபக்சே தங்கியிருந்த ஓட்டல் முன்பும் எதிர்பார்த்த அளவுக்கும் குறைவான கூட்டமே கூடியதை காண முடிந்தது.தமிழர்களின் எதிர்ப்புக் குரலை எதிர்பார்த்திருந்த ராஜபக்சே தனது பயணதிட்டத்தை மாற்றியதும் கூட அவருக்கான உள்பயத்தை நிரூபிப்பதாகவே இருந்தது எனலாம்.

புலம்பெயர் தமிழர்கள் பல குழுவாக இயங்கினாலும் இந்த முறை மொத்த இணைப்புக்கான குரலையும் காணமுடிந்தது வரவேற்க தக்கது.காமன்வெல்த் கலந்துரையாடல் நிகழ்ச்சி நிரல் காலையில் இருந்தது ரத்து செய்யப்பட்டு ராஜபக்சே கலந்து கொள்ளாத நிகழ்வாக பிற்பகல் 1 மணி மதிய உணவுடன் 2.00 மணிக்கு கலந்துரையாடல் துவங்கும்.

நம்ம பதிவுலக பரிணாம குரு சகோ.சார்வாகன் ஆதாரமில்லாமல் ஒரு செய்தியை சொல்லக்கூடாது என்று எழுதப்படாத நியதியை வகுத்திருப்பதாலும் எப்படி இந்த செய்தியை நம்புவது என்று நினைப்பவர்களுக்கும் இணைப்பு இங்கே.

 http://www.cbcglobal.org/events/details/commonwealth-economic-forum

மற்றும் ராஜபக்சே கலந்து கொள்ளாத மாற்றப்பட்ட பிற்பகல் நிகழ்ச்சி நிரல் இங்கே.

http://www.cbcglobal.org/images/uploads/docs/CEF2012_Brochure_Final.pdf


மனித உரிமை மீறல்களுக்கும்,பதவி என்ற பாதுகாப்பில் இறுமாப்போடு நடந்து கொள்ளும் ராஜபக்சேகளுக்கான எதிர்ப்புக் குரலை  இன்னும் தொடர்வது மிகவும் அவசியம்.