Followers

Thursday, October 31, 2013

வந்துட்டானய்யா!வந்துட்டான்!

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.ஒரு கேசு தொலைந்ததேன்னு யாரும் சந்தோசப்படுற மாதிரி தெரியல.ஆனாலும் புதுகை அப்துல்லா,வவ்வால்,இக்பால் செல்வன்,ஜோதிஜி என ஆளைக்காணோமே என குசலம் விசாரிப்பது மகிழ்ச்சிக்குரியதே.எனது நன்றியை சொல்லிட்டு இங்கே வந்தால் அப்படியே குந்த வச்சு உட்கார்ந்துக்குவோமோ என்ற பயத்தோடு கூடவே சென்னையின் பத்தில் ஒரு சதவிகிதம் ஏரியா கூட இல்லாத குவைத்தில் வியாபாரம் பண்ணலாம் வாரியான்னு மொபைல் பேசுற நிறுவனத்திலிருந்து கப்பல் விடுறவன் கிட்ட போய்,தாய்லாந்து,இந்தியா,அவ்வளவு ஏன் நம்ம சிவகாசிக்கு கூட பிள்ளையார் மாதிரி உட்கார்ந்த இடத்திலிருந்து கிட்டே கூப்பிட்டால் ஒருவரும் மசிய மாட்டேன்கிறார்கள்.

அப்படியும் வருகிற சிவகாசி காலண்டர் தயாரிப்பாளர் பிள்ளையார் காலண்டர் விற்பனைக்கு தயாராக இருக்கிறது என சேம்பிள் அனுப்புகிறார்.ஒருத்தர்கிட்ட விற்கிற பொருள் இருக்குது.இன்னொருவருக்கு வாங்க வேண்டும்.இடையில் இருக்கும் கடலை கடப்பதுதான் பிரச்சினையே.சரி இதுதான் வேண்டாம் லோக்கலா டீல் பண்ணலாமென்றால் பொட்டிக்கடை வைத்திருக்கும் பெங்காலிக்கும்,ஈரானிக்கும் தொழில் நுட்பம் தெரியமாட்டேங்குது.இப்ப என்னமோ மொபைல் ஆப்புன்னு என்னமோ விற்குதாமே அதுகூட தெரியாத அரபிக்காரன் கூகிள் அண்ணாத்தே தயவால் முகப் புத்தகம்,டிவிட்டுகிட்டு உன் கடைக்கு டிராபிக் என்னங்கிறான்:)

இப்படியான நிலைமையில் போடாத குரங்கு வித்தை குட்டிக்கரணம் போட்டும் கடையில் போணியாகாத சோகத்தில் இருக்கும் என்னிடம் வந்து எங்கய்யா ஆளைக்காணோம்ன்னு கேட்டால் சிவாஜி ஸ்டைலில் நான் சிரித்துக் கொண்டே அழுகிறேன்.நம்ம நிலைதான் இப்படின்னு பார்த்தால் டெண்டர்க்கு வாங்கிய இரண்டு Excavator விலை சுமார் 11 கோடி விலைக்கு வாங்குவதற்கு ஆள் இல்லாமல் ஒரு நிறுவனம் தேடிக்கொண்டிருக்கிறது.சுமார் ஒரு வருடத்திலிருந்து இரண்டு வருடத்திற்குள் மெகா ஸ்கைஸ்கிரேப்பர் மாடிக்கட்டிடங்களை நிறுவதற்கு இந்த எக்ஸ்காவேட்டர்களும் ஒரு காரணம்.இந்தியாவில் வெள்ளைப்பணத்தோடு யாராவது சட்ட வரைமுறைகளோடு வங்கி மூலமாக் வாங்குவதற்கு ஆட்கள் இருந்தால் அனுப்பி விடலாம்.Caterpillar,Volvo போன்ற பெயர் பெற்ற நிறுவன தயாரிப்புக்களை விட விலை குறைவு.காரணம் தயாரிப்பு நிறுவனம் சீனா.

அமெரிக்காவில் போணி பண்ண முடியாமலோ என்னவோ ஹாரி என்ற அமெரிக்கர் Dream lites,Slushy magic என்ற குழந்தைகளின் பொருட்களை கொஞ்சம் மார்க்கெட் செய்து தரச்சொல்லி முயன்று கொண்டிருக்கிறேன். கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக உணவகங்களில் முன்பதிவு செய்து கொள்வதற்கு ஒரு மென்பொருளை தேடி குஜராத் ஓடினால் எங்கள் நிறுவன ஒப்பந்த நிறுவனத்தை குவைத்தில் அணுகவும் என திருப்பி கடிதம் போட்டு விட்டார்கள். இங்கே போய பார்த்தால் அவர்கள் 12 வருடம் குப்பை கொட்டி பெருக்கி அழகாக நிறுவனம் அமைத்துள்ளார்கள்.

சிவகாசி கதையை கேளுங்களேன்.2014 வருகிறதே!யாருக்காவது 2014 காலண்டரை மொத்த விலைக்கு விற்கலாம் என கூகிள் தேடலில் சிவகாசிக்குப் போனால் SFA என்ற நிறுவனம் ஏற்கனவே உற்பத்தி திறனில் சிறந்து இருப்பது மாதிரி தெரிகிறதென்று அணுகினால் நீங்கள் மும்பைக்குத்தான் அயல்நாட்டு விற்பனைக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று போனில் சொல்லி விட்டார்கள்.சரியென மும்பைக்கு கடிதம் எழுதினால் அவர்கள் என்னை சுயமதிப்பீடு செய்து கொண்டு நீங்கள் இனி துபாயோடு தொடர்பு கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்கள்.

துபாயிலிருந்து வந்த விலைப்பட்டியலைப்பார்த்தால் சிவகாசி உற்பத்தி விலை+மும்பை லாபம்+துபாய் லாபம் என நமக்கு ஏதும் மிஞ்சாத நிலைமை. ஒரு முறை தமிழ் புகைப்படக்கலை தலைகளுக்கு கடிதம் போட்டு விட்டு பதில் வராத காரணத்தால் அப்படியே கிடப்பில் போட்டு விட்டேன். இன்னும் எவ்வளவு நாளைக்கு ஹாபின்னு சொல்லிகிட்டே க்ளிக் செய்வீங்க?சிறந்த படங்கள் என தேர்வை விறபனை சந்தைக்கு கொண்டு சேர்த்து விடலாம்.செய்ய வேண்டியதெல்லாம் புகைப்படம் அனுப்புவதும் விலை நிர்ணயம் அமெரிக்கன் டாலரில் எவ்வளவு என்பது மட்டுமே.விற்பனைக்கு நான் கொண்டு செல்வதில் விற்பனைப் படுத்தப்பட்டால் தருமி ஸ்டைலில்....ஓஓ! நம்ம தருமி வேற இருக்கிறார் இல்ல! சரி நம்ம திருவிளையாடல் தருமி ஸ்டைலில் ஏதாவது பார்த்து போட்டுக்கொடுங்கன்னு சொல்லிப்பார்த்தேன்.யாரும் கண்டுக்கல.நாதாஸ் மட்டும் எனது விளம்பர உதவிக்காக வேண்டி ஒரு அழகான பெராரி கார் அனுப்பினார்.

இன்னுமொரு கதை கேளுங்களேன்!குவைத்தில் நீளமா,உயரமா கட்டிடம் கட்டி வச்சிருக்காங்க.யார் எங்கே இருக்காங்கன்னே தெரியாதேன்னு கூகிள் எர்த்தோடு அவர்கள் கட்டிடத்தை போகஸ் செய்து விடலாம் என கூகிள் ஸ்கெட்சப் சான்றிதழ் வாங்கின நிறுவனத்தை தேடிக்கொண்டிருக்கிறேன்.நம்மாளுக ஹாலிவுட்டுக்கே சவால் விடுறவங்ளாச்சே.....(வவ்வால்!விஸ்வருபம்!விஸ்வரூபம்:)) என யாராவது Motion graphics design advertisement கோடம்பாக்க வல்லுனர்களையும் கூகிளில் தேடுகிறேன்.யாரும் அகப்பட மாட்டேன்கிறார்கள்.இங்கே கூட்டத்துக்குள் யாராவது ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் உள்ளேன் நண்பா என தலையை காட்டவும்.

talabat.com என ஒரு வளைகுடா முழுவதும் வளைத்துப்போட்டு விட்ட ஒரு நிறுவனம் என் தூக்கத்தை கலைத்துக்கொண்டிருக்கிறது.யாராவது தொழில் நுட்ப வல்லுனர்கள் இருந்தால் அந்த நிறுவனம் வாங்கும் ஒரு KFC ஆர்டருக்கு கமிசன் ரூபாய் 100 எனபதை நான் ரூ 80க்கு தருகிறேன் என போட்டி போடலாம். தேவையான வை மென்பொருளும் KWD payment gateway மட்டுமே. 

நீ ஆணியே புடுங்க வேண்டாம்.உன் மூலமா யாரையாவது பொருள் வாங்கச்சொல்லு என அமேசன் விற்பனை தளம் கடிதம் போடுது.

Idea that sells என்கிற இணைய கோட்பாட்டில் விற்பதற்கும்,வாங்குவதற்குமான வாய்ப்புக்கள் உள்ளன. இரண்டு பக்கங்களையும் இணைப்பதற்கான நெட்வொர்க்,நம்பகமான மனுசன் என வெளிச்சம் போட இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவை. 

அமேசன் என்றவுடன் இன்னுமொரு எண்ணம்.அது ஏன் அமெரிக்கா வரைக்கும் போக வேண்டும். வளைகுடாக்களில் தினாரையும்,திர்காமையும் வைத்துக்கொண்டு சொந்தங்களுக்கு சில நேரங்களில் டெலிபோன் வாழ்த்துக்கள் சொல்வதோடு பிறந்தநாள்,திருமண நாள்,தீபாவளி,புது வருட நினைவுகள் பலருக்கு முடிந்து விடுகிறது.பட்டுப்புடவைகள், கேக்,மல்லிகை,ரோஜா போன்றவற்றை உரிய நேரத்தில் கொண்டு சேர்க்கலாம்.மாவட்டம் தோறும் முக்கியமாக தஞ்சாவூர்,திருச்சி போன்ற பகுதிகளில் கூரியர் உதவியோடு கொண்டு சேர்க்கும் அதே விற்பனை நிறுவனங்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும்.

கடன் தரும் வங்கி,மாமல்ல புர பொழுது போக்கு பார்க் மாதிரி மல்டி மில்லியன் நிறுவனங்களுக்கு தரமான நிறுவனங்களாச்சே என ஒப்பந்தம் செய்யாமல் விளம்பர யுக்திகள் செய்து விட்டு காசு வராமல் அல்லாடுகிறேன்.இப்போதைக்கு அனுபவங்கள் மட்டும் வரவு.

இன்னும் நிறைய அனுபவங்கள் வரும்.மொத்தமா சேர்த்து வச்சு அப்புறமா சொல்லுகிறேன்.



16 comments:

ராஜ நடராஜன் said...

என்னது!நானே இப்பத்தான் இங்கே வருகிறேன்.நம்ம கடையை பூட்டி வச்சும் ஆளு யாராவது உள்ளே இருக்கிறாங்களான்னு யாரோ 15 பேர் நோட்டம் விடற மாதிரி தெரியுதே:)

ராஜ நடராஜன் said...
This comment has been removed by the author.
ராஜ நடராஜன் said...
This comment has been removed by the author.
ராஜ நடராஜன் said...

பின்னூட்டம் மக்கார் செய்ததில் இரண்டை நானே நீக்கி விட்டேன்:)

மைக் டெஸ்டிங்க்.1..2...3

Amudhavan said...

இத்தனை நேரத்திற்கு அங்கே நன்றாகக் காலூன்றி பெரிய அளவில் பிசினஸ் செய்துகொண்டிருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன்..விரைவில் பதிவு எழுதமுடியாத அளவுக்கு 'பிசியாவதற்கு' வாழ்த்துக்கள்.

வவ்வால் said...

ராச நட,

வாரும்,வாரும்,

மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி!

நலம் தானே!

தீவாளி பட்டாசு வெடிக்க கரெக்ட்டா ஆஜர் ஆகிட்டிங்க போல!

வெற்றிக்கொடுக்கட்டி இருப்பீங்கனு நினைச்சேன்,ஆனாலும் கொடிக்கம்பம் தயார் பண்ணீட்டிங்க போல தெரியுது,விரைவில் கொடிப்பறக்க வாழ்த்துக்கள்!

நீங்க ஷாப்பிங் போர்டல் போல நடத்தறிங்களா? உங்க தளத்தை போடுங்க ,நிறைய பேருக்கு ஃபார்வர்ட் பண்னி விடுறேன், ஒரு வகையில் விளம்பரமாக அமையும்ல, ஏதோ இப்போதைக்கு நம்மால் ஆனது.

ஏதாவது ஐடியா கிடைச்சா சொல்லிவிடுறேன்.

# 'Motion graphics design advertisement '

எதை இப்படி சொல்லி இருக்கீங்க?

கட்டிடங்களை 3டியில் உருவாக்கி நேவிகேஷன் மேப் ஆக காட்டவா?

அப்படி எனில் 3டி மாடலிங் தெரிந்தவர்கள் , 3டி ஸ்டுடியோ ஆர்க்டெக்ட் விசார்ட் மென்பொருள் தெரிந்தவர்களை தேடுகிறீர்களா? இல்லை வழக்கமான மாயா 3டி இல் கற்றவர்களா என கொஞ்சம் தெளிவு படுத்தவும் ,ஆள் புடிச்சிடலாம்.

வவ்வால் said...

ராச நட,

'study abroad" கண்சல்டன்சி போல செயல்படும் எண்ணம் இருக்குமானால் சொல்லுங்க ,இங்கே இருக்க கண்சல்டன்சி நபர் ஒருவரை அறிமுகம் படுத்தி வைக்கிறேன்.

இப்போதைக்கு அவர் உள்நாட்டுல அட்மிஷன் போடுறார் ,வெளிநாடு ஏத்துப்பாரானு தெரியலை, அவருக்கும் ஆர்வம் இருக்குமானால் சாத்தியம் இருக்கு.

சென்னைக்கு ஏகப்பட்ட அயல் மாநில, அயல்நாட்டு வாசிகள் படிக்க என்றெ படை எடுக்கிறார்கள் என்பதால் பிரகாசமான வாய்ப்பு இருக்கும் என நினைக்கிறேன்.

வேகநரி said...

தீபாவளியோடு முன்னேற்றத்தை நோக்கி செல்ல வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

அமுதவன் சார்!வருகைக்கு நன்றி சொல்லாமல் பின்னூட்ட கச்சேரியை ஆரம்பித்து விடலாம்.அனுபவங்களுக்கு குறைச்சலே இல்லை.ஆனால் எனது நேர்மையை யாரும் கண்டு கொள்வதில்லை.கால நேரம் இருந்தால் எப்படி வியாபாரம் செய்வது,மார்க்கெட்டிங்க் செய்வது என 1 டாலர் கொடு சொல்லிக்கொடுக்கிறேன் ஸ்டைலில் சொல்லி விடலாம்.நமக்கும் பயனுள்ளதாகவும் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் காலம் வந்தால் அனுபவ பகிர்வு கொள்ளலாம்.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!நலத்துக்கெல்லாம் குறைவே இல்லை.இருக்கும் டென்சனையெல்லாம் காலையில் தலை கீழா சுவர் பக்கம் நின்னு யோகாசனம் செய்து இறக்கி விடுகிறேன்.தீபாவளி வருதுல்ல!அது கூட தெரியாமல் காலம் ஓடுது.நீங்க முன்னாடி சொன்ன தொலைக்காட்சியைப் பார்த்து பதிவு போடுறேன் காலமெல்லாம் போயிடுச்சு.தொலைக்காட்சி அதுபாட்டுக்கு தூங்குது.எப்பவாவது பாட்டு சத்தம் காதிலும்,கவனமெல்லாம் கணினி என காலம் போகுது.

குறுக்கு வழிகள் பார்த்தால் இப்பவும் கொடிக்கம்பத்திலிருந்து ஜிவ்வுன்னு மேலே ஏறி விட முடியும்.நான் இங்கே வரும் போது யாருக்கும் எந்த கட்டண தொகையும் தராமல்தான் வந்தேன்.இப்பொழுது சிலரை யாருக்கும் எந்த கட்டணமும் வாங்காமல் மெடிக்கல்,விமான செலவு மட்டும் செய்து கொண்டு வந்து சேரவும் என விசா அனுப்பும் நிலைமை என்னிடம் இருக்கிறது.ஆனாலும் இங்கே லோக்கலாகவோ அல்லது இந்தியாவிலிருந்தோ கொண்டு வந்து விடலாம் என நினைக்கும் ஆட்கள் கண்ணில் அகப்பட மாட்டேன்கிறார்கள்.காரணம் நாம் ஏதாவது வித்தியாசமாகவும் அதே நேரத்தில் யாரும் நம்மை காப்பி அடிக்க முடியாத மாதிரியும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

கோடு போட்டு சொன்னதை வைத்து ரோடு போட பார்க்கிறீங்களே:)இருக்குற ட்ராபிக்கையே சமாளிக்க முடியலை.இதுல பிளாக்குல வேற பரப்பி விட்டால் பின்னூட்ட பதில் சொல்லவே காலம் சரியாக இருக்கும்.

குவாண்டின் டாரிண்டினோ கதை சொல்ற மாதிரி எதிலும் சேர்த்தியில்லை.ஒரு வேளை அது கூட கடை போணியாகாமல் போவதற்கு காரணமோ என தெரியவில்லை.முன்பு பிளாஷ்ல இருந்ததை வேகம் குறைவு என ஹெச்டிஎம் எல் 5க்கு கூட கொண்டு வந்து பார்த்து விட்டேன்.பார்க்கிறவன் innovative என சொல்கிறானே தவிர விளம்பரம் தர மாட்டேன்கிறார்கள்.காரணம்

எந்த வகையிலும் சேராமல் நீங்கள் சொல்லுகிற மாதிரி ஷாப்பிங்க் போர்டல்,விளம்பரம் என கலந்த நெய்யுருண்டை:)

மோஷன் கிராபிக்ன்னு வேற சொல்லிட்டேனா!நீங்கதான் விஸ்வரூபத்திற்கும்,ரஜனி படத்துக்கும் கேமிரா நுணுக்கங்கள் சொல்லியிருக்கிறீங்களே.இப்ப 3D அனிமேசன் போய் 4D வந்தாலும் மார்க்கெட் நிலவரம் 3D என்றுதான் சொல்லுகிறார்கள்.Red காமிராவில் படம் பிடிக்கிறேன் என்று3Ds max தொட்டு பல மென்பொருட்களை கலந்து அனிமேசன் ஸ்டைலில் ஒரு பொம்மை செய்து 30 வினாடிகள் தொலைக்காட்சியில் அல்லது LEDயில் விளம்பரம் செய்யலாம் என ஒருவர் யோசனை சொல்ல முயற்சி செய்து பார்க்கலாமே என தொழில் நுட்ப ஆட்களை தேடுகிறேன்.

நம்ம ஊர் ஆள் ஒருவர் யுடியுப்பில் 3டி ஸ்டுடியோ ஆர்க்டெக்ட் நல்லா பிலிம் காட்டுகிறாரே என்று 5 முறை பதில் போட்டால் ஒரு முறை பதில் தருகிறார்.போனில் நேரம் கவனிக்காமல் பேச முயன்றால் ராத்திரி 10 மணிக்கா பிசினஸ் பேசுவாங்கன்னு எரிஞ்சு விழுகிறார்:)நார்வேக்காரர் ஒருவரை தொடர்பு கொண்டால் யானை விலை பேரம் பேசுகிறார்.

மாயா,3ds max,adobe after effect என நிபுணத்துவம் கொண்டவர்கள் இருந்தால் தெரிவிக்கவும்.அல்லது கூகிள் ஸ்கெட்ச்,3டி அனிமேசன் என யாராவது இருந்தாலும் போணியாகும்.

study abroad க்கு என்கிட்டேயே ஆள் இருக்குது.உங்களுக்கு வேண்டுமென்றால் சிபாரிசு செய்கிறேன்:)இங்கேயே கனடா போவதற்கெல்லாம் கன்சல்டன்சி நடத்துகிறார்கள்.

ஷாப்பிங்க் கார்ட்ல கூட ஏதாவது வியாபாரம் செய்யலாம்.விலைப்பட்டியல்,படம்,தொடர்ந்து ஸ்டாக் நிலவரம் என தெரிவிக்க ஆட்கள் கிடைத்தால் கூட அமேசனுடன் போட்டி போட முடியும்.

மேலும் தரமான இணைய தொழில் நுட்ப நிறுவனங்கள் இருந்தால் கூட பெரிய கார்பரேட்களை அணுகலாம்.இங்கே இருக்கும் வங்கி ஒன்று பெங்களூரில் 50 பேருக்கு சம்பளம் தந்து அவுட்சோர்ஸிங் செய்கிறார்கள்.

அடையார் டெக்னோ பார்க்கர்கள் அமெரிக்காவுக்குத்தான் படையெடுக்கிறார்கள்.ஒருவேளை பிசினஸ் எதிக்ஸ் என நினைக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

வேகநரி!நாளும் கோளும் எளியோனுக்கில்லை:)

வெளங்காதவன்™ said...

//டெண்டர்க்கு வாங்கிய இரண்டு Excavator விலை சுமார் 11 கோடி விலைக்கு வாங்குவதற்கு ஆள் இல்லாமல் ஒரு நிறுவனம் தேடிக்கொண்டிருக்கிறது///

மேலதிக தகவல்களைப் பெற இயலுமா?

ராஜ நடராஜன் said...

வெளங்காதவன்!தகவலுக்காக பதிவே போட்டு விட்டேன்.பார்க்கவும்.

வவ்வால் said...

ராச நட,

//.பார்க்கிறவன் innovative என சொல்கிறானே தவிர விளம்பரம் தர மாட்டேன்கிறார்கள்.காரணம்

எந்த வகையிலும் சேராமல் நீங்கள் சொல்லுகிற மாதிரி ஷாப்பிங்க் போர்டல்,விளம்பரம் என கலந்த நெய்யுருண்டை:)
//

உங்களுக்கு இந்த வியாபாரம் சரிப்பட்டு வருமா?

ஏன்னா கான்செப்டையே புரிஞ்சிக்காத போல தெரியுது .

விளம்பரம் தரனும்னா நல்ல பாப்புலரா இருந்தா தான் தருவாங்க, ஆனால் நீங்களோ உங்க தளம் நிறைய பேருக்கு தெரிஞ்சா தொல்லைனு நினைக்கிறிங்க அவ்வ்.

அவனவன் எப்படி நாலு பேருக்கு தெரிய வைக்கிறதுனு காசு கொடுத்து தளத்துக்கு எல்லா இடத்திலும் லிஸ்ட்டிங் போட்டுக்கிட்டு இருக்கான் ,ஈ காமர்ஸ் கான்செப்ட் கொஞ்சம் படிச்சு வையுங்க உதவும்.

கூகிளுக்கு, அலெக்சாவுக்குலாம் பணம் கட்டினா அவங்க இன்டெக்ஸிங் செய்வாங்க அப்போதான் செர்ச்ல முன்னாடி வரும்.அப்படி செய்துட்டிங்களா? இன்னும் மோஸ்ரேன்க் என இன்டெக்சிங் தளம்லாம் இருக்கு ,நல்ல ரேட்டிங்க்ல இருந்தாத்தான் விளம்பரம் கொடுக்கிறவங்க அல்ல ரீச் நம்புவாங்க ,

மேலும் கூகிள் ஆட்சென்ஸ் ல விளம்பரம் போட்டும் நிறைய பேருக்கு அறிய வச்சாத்தான் உங்க கடையில போனி ஆகும், தானா வருவாங்க புடிச்சிடலாம்னா வேலைக்காவாது.

ஊருல ஏகப்பட்ட ஈ.காம் தளங்கள் இருக்குனாவது தெரியும்ல.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!ஆட்சென்சென்ஸ்,ரேட்டிங் என உலகளவில் தெரியனும்ன்னு அவசியமில்லை.உள்ளூர்க்குள் பிரபலமானா போதும் என மார்க்கெட்டிங் செய்துகிட்டிருக்கிறேன்.

வவ்வால் said...

ராச நட,

ஒரே குழப்புறிங்க, இணையவழி சந்தைப்படுத்துதல்னு சொல்லுறிங்க,அப்புறம் உள்ளூரில் புடிச்சா போதும்னு சொல்லுறிங்க, விளம்பரம் வரலைனும் சொல்லுறிங்க.

யாருக்கும் கேள்விப்படாம தளம் வச்சிருதா எப்படி கூட்டம் வரும்?

இதுக்கு ஒருத்தர நேராப்பார்த்து வாங்கி இன்னொருத்தர நேராப்பார்த்து வித்துடலாமே!

சரி உங்களுக்கு புரிஞ்ச கான்செப்டுல போங்க எப்படி போகுது பார்ப்போம்.